பந்துகள் விளாசப்பட்டன
இரட்டை சதங்களோ
நாட்டுக்கு அர்ப்பணம்
பாரதரத்னாக்கள் வரிசையில்
நிற்கின்றன – பாராட்டுக்கள்
பாராட்டிக்கொண்டே போகின்றன
எங்கும்
அல்ல அல்ல
எங்கெங்கும் இதே
பேச்சு
பேசித்தான் ஆக வேண்டுமாம்
இது நாட்டின் பெருமையாம்…..
ஒண்ட இருந்த குடிசைகள் எரிக்கப்பட்டன
இல்லை இல்லையில்லை
எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
இதோ இன்னொரு
பெருமையைப்பார்த்தீர்களா
இங்கேயும் ஏழு சதங்கள்
இதுவும் இந்திய தேசியத்திற்கு
தானே அர்ப்பணம்
இங்கும்
மட்டைகள் விளாசப்படுகின்றன
ஓடுகின்றன பந்துகள்
அவைகள் இடைஞ்சலாய்
இருக்கின்றனவாம்
அடிவாங்கிய பந்துகளால்
அமைதியாயிருக்க முடியவில்லை
அடிமையாய் இருக்க முடியவில்லை
திருப்பி அடிக்க தீர்மானித்துவிட்டன
உடைந்து போன பந்துகள்
கைதட்டியே பழக்கப்பட்ட கைகளே
இப்போது சொல்லுங்கள்
யாருக்கு கைதட்டப்போகிறீர்கள்?
http://kalagam.wordpress.com/