10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை

இனிச் சருகுகள் காலம்

குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்

படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்

காடையர் இழிசெயல் வெறியொடு

தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.….

வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்

சேற்றினில் உருண்டு நாற்ரமெடுக்க வருக வருக…

வறுமையும் வயிறெரியும் நினைவுக்கொதிப்பும்

வெறுமையில் தவிக்கும் விலங்கிடை சிறையும்

பொறுமையை சீண்டும் போலி உறுதிகளும்

சிறுமையில் சிக்கவே தேர்தல் கரும்பென நிமிருது


இனவெறித்தீக்கு பலியிடப் புலியில்லை

புகலிடச்சருகுகள் பணமூடைகாவி – அரசொடுகுலாவும்

கழுகுகள் கவ்விய குஞ்சுகள் வாழ்வை

காப்பவர் எவருளர் – எம் தெருவெலாம் வெறிநாய்கள்….


மல்வத்த பீடமும் அரசியல் சாசனமும்

தேரரின் வலுவே – தேசத்தை சிதைக்கும்

போரினை வளர்க்கப் புத்தரை தொழுதனர் – சீறிடும் ரணிலே

தமிழின வேரினை கிளறிய பெருநரி

ஊளையிடுக – ஒன்றிடாது அழித்தே வாக்கினைபெருக்குக.


உழுதுண்டும் பொழுதுபுலர எழுமொலி

விழுந்தெழுந்தோடி உழைப்புக்காய – வெறுவயிறு

காய்ந்து குழறும் – வீட்டினில் குழந்தைபோல்

வாட்டிடும் வறுமைக்குப் புத்தரும் ஜேசுவும்

அல்லாவும் ஆயிரம் இந்துக்கடவுளும் தூசு….கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்