10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

குடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும்

பாரதக்குடியரசு சுடுகாட்டில் பெற்றெடுத்த ஜனநாயகம்
இலங்கைத்தீவில் ஜனாதிபதியை தெரிவுசெய்கிறது
உண்ணாதிருந்த தொப்புள்கொடி முதல்வரே
வாழ்க குடியரசென வாழ்த்துப்பாடுங்கள்....

பாரதக்குடியரசின் அணிவகுக்கும் படைபலம்
அயலுறவு கொள்ளையுடன் முரண்படா அதிபதிக்காய்
கலங்கிக் காத்தபடியே கொண்டாடிநிற்கிறது
இரத்தமும் தசையும் பிழிந்தெடுத்து
மக்கள் நெற்றி; வியர்வையில் குதூகலித்தபடியே
தேசப்பற்றோடு கீதம் பாடெனெச் சொல்கிறது...

 

பரந்த கொள்கையொடு நேபாளம் இலங்கையென
தன் குடிமக்கள் போலவே நாசமழை பொழிகிறது
அமைதிப்படை முடியாதபோது அமைதியாகவே
ஆயுதமொடுபோர் வழிநடாத்தஆலோசனை சதிகளுமாய்
பாரதக்குடியரசுக் கரங்கள் பரந்து விரியும்

 

பாரதக் குடியரசின் தாரக மந்திரம்
வாழ்வில் மாற்றம் நிகழ ஆள்பவனை மாற்றுங்கள்
இல்லையேல் பொறுத்திருங்கள் அடுத்த தேர்தல்வரை
ஆர்ப்பாட்டம் கொடிபிடித்தல் உரிமைக்காய் குரலெழுப்பல்
குடிமக்கள் உரிமையல்ல பயங்கரவாதம்
குடியரசின் அயல்நாட்டு மக்களும் ஆளுகைக்குள் அடிமைகளே


விரியும் கொடுகரம் பொடிப்பொடியாய் உடைந்து நொருங்க                       
வர்க்கப்போர் எழுந்து பதில்சொல்லும்
உழைப்போன் நடைமுறை......


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்