மகஸீன் சிறையில் மூன்று கைதிகளின் நிலை கவலைக்கிடம்

 

தம்மை விடுவிக்கமாறு கோரி கொழும்பு மத்திய மகஸீன் சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மூன்றுபேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பணிப்பாளர் தேவதாசனும் ஒருவர். இவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக யாழ்சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவோரில் நான்குபேர் கவலைக்கிடமான நிலையில் யாழ்-போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் கைதிகளுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுகின்றனர்.

 

தேர்தல்பிரசாரக் கூட்டங்களில் பயங்கரவாதம் களையப்பட்ட பௌத்திரமான பூமி என்கின்றார் மகிந்த மன்னன். புலிகளின் முன்னால் உறுப்பினர்களைக்கூட விடுவிக்கின்றோம் என்கின்றார். அப்போது இவர்கள் என்ன விடுவிக்கப்படமுடியாத மகிந்த சிந்தனையிலான "நவீன" கைதிகளோ?

 

யுத்தக் குற்ற விசாரனைக்கு ஜ.நா சபை நிபுணர் குழுவை நியமிக்கும்

 

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை வெளிப்படுத்தும் "சனல் 4-ல்" வெளியிடப்பட்ட ஒளிநாடா உண்மையானது எனக் கண்டறியப்பட்டதால், யுத்தக்குற்றம் குறித்து விசாரணை நடாத்தப்படவேண்டும். இவ்விசாரணைக்கு நிபுணர் குழு ஒன்றும் நியமிக்கப்படும் என ஐக்கியநாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

 

மகிந்தாவிற்கு சோதனை காலம். தேர்தல் வெற்ற்pயை இல்லதாக்க தேசிய - சர்வதேசியம் ஒனறுபட்டுள்ளது. கூட்டமைப்பினர், மட்டக்களப்பு மாநகர முதல்வர் முதல் மேலும் பல இன்னோர் அன்னோர் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் செயற்படுகின்றனர். மில்லியன்கணக்கில் பணம் வாங்கியவர்கள் (மலையகதின் தலைமை கிழக்கின் விடிவெள்ளிகள் கூட) கடைசி நேரத்தில் காலை வாருவார்கள் போல் உள்ளது. இது போதாதென்று ஐக்கியநாடுகள்சபையும் நிபுணர்களும். ஐக்கியநாடுகளின் அறிக்கை விதிமுறைகளை மீறும் செயல் என்கின்றார், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர், விதிகளை மீறி படுகொலைகள் செய்யும்போது கொஞ்சமாவது யோசித்தது செய்திருக்க கூடாதோ? இதைத் தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பர்.

 

பிரபாகரனின் தந்தையார் மரணத்திற்கு அரசே பொறுப்பு!

 

பிரபாகரனின் பெற்றோரை ராணுவமே காப்பாற்றியது என்கின்றார் மகிந்தா.? இந்த "தர்மசீலர்களால்" காப்பாற்றப்பட்டதாக சொல்லப்படும் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் பனாகொடை ராணுவ முகாமிலேயே காலமாகியுள்ளார். இம்மரணத்திற்கு மகிந்த அரசின் அசன்;டையீனமே காரணம்.

 

காலம்சென்ற வேலுப்பிள்ளை அவர்கள் ஓர் வயோதிபர். அவர் கடந்த ஒருமாத காலமாக சுகவீனமாகவே இருந்தார். மகிந்த அரசு அவரையும் ஓர் "புலிப்பயங்கரவாதியாகவே" கணித்து சிறையில் அடைத்தது. பழிவாங்கி வந்துள்ளது. பனாகொடை ராணுவமுகாமம் அவருக்கு தகுந்த சிகிச்சையை வழங்கவில்லை. இதை அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.

 

பிரபாகரனின் பெற்றோரை ராணுவம் காப்பாற்றவில்லை. அவர்கள் மக்களோடு மக்களாகவே சரணடைந்தவர்கள். ஆதன்பின்பே ராணுவம் அவர்களை அடையாளம் கண்டது. ஏதோ இவர்கள் வெள்ளைக் கொடியோடு வந்து தாங்கள் பிரபாகரனின் பெற்றோர்; என்று சொல்ல, அவர்களை மனிதாபிமான மனத்துடன் "மகிந்தாவின் மக்கள் ராணுவம்" காப்பாற்;றி வந்து முகாமில் விட்டதுபோல் கதை சொல்கின்றார் மகிந்தா.

 

பிரபாகரனின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, அவர்களை பயங்கரவாதிகளாகவே மகிந்த சிந்தனை இனங்கண்டது, மகிந்த ராணுவம். இந்த வயோதிப காலத்திலும், கூட அவர்கள் 4-ம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மிரட்டலுடன் அடாவடித்தனம் கொண்ட தொடரான விசாரணைகள், நடத்தைகள் சிறைவாசம் போன்றவைகளே அவரை இம்மரணத்திற்கு இட்டுச்சென்றது.

 

பிரபாகரனின் வயோதிபப் பெற்றோரை காப்பாற்றிய மகிந்த மன்னன், மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்;களை விடுவித்திருந்தால், அவர் சொன்னவற்றிற்கு பெறுமானம் இருந்திருக்கும். மகனின் மக்கள் விரோத பயங்கரவாத அரசியலுக்கு, பெற்றோரை பழிவாங்கியதும், பயங்கரவாத அரசியல்தான்.

 

பொன்சேகாவின் ஆவணமும் கூட்டமைப்பின் ஆதரவும்!

 

கூட்டமைப்பினர் கடந்த ஒருமாதகாலமாக பல சாகச வித்தைகள் காட்டினர். அது ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதே. இவர்கள இவ்வித்தைகளுக்கு ஊடாக என்ன செய்யப்;போகின்றார்கள் என்பது ஏற்கனவே தமிழ்மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரீயும்.

 

இதை காலதாமதமாக்கி இப்போது சொல்லியுள்ளார்கள். ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை, தமிழ்மக்கள் மாத்திரதல்ல, சிங்கள மக்களும் ஆதரிக்கவேண்டுமாம். இதை தேசிய மட்டத்தில் நின்று சொல்கின்றார்கள்.

 

நாம் படைத்தளபதி ஒருவரை ஆதரிக்கின்றோம் எனக்கூறுவது, அர்த்தமற்றது. அப்பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவரைத்தான் ஆதரிக்கின்றோம். என கூட்டமைப்பின் சம்பந்தன் சொல்கின்றார். சம்பந்தன் ஓர் சிறந்த வக்கீல் தன்னிடம் வரும் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்து, அவர்களுக்கு விடுதலையும் பெற்றுக்கொடுப்பார். இதைத்தான் சரத் பொன்சாகாவிற்கும் செய்துள்ளார்.

 

அமெரிக்காவில் கறுப்பின்தவர் ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியுமானால், ஏன் இலங்கையில் தமிழ்-முஸ்லீம் ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியாது. இவ்வாறு அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் சரத் பொன்சேகா பேசியுள்ளார்.

 

இதுதொடர்பில் நான் அவரிடம் முதலில் சிறுபான்மையினருக்கு எதிராக (தமிழ்மக்கள் வந்தேறுகுடிகள், இலங்கை சிங்களவருக்கே சொந்தம்) பேசினீர்கள் ஏன் இப்போது இப்படிப் பேசுகின்றீர்கள் எனக் கேட்டேன்.

 

அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து வாழ்வதன் தேவையையும் முக்கியத்துவத்தையும் நான் இப்போது உணர்ந்துள்ளேன் என்று அவர் என்னிடம் சொன்னார். ஒருவர் திருந்தும்போது, திருந்தவேண்டாம் என நாம் அவரீடம் சொல்லமாட்டோம். இவ் ஒப்புவிப்பின் மூலம் சம்பந்தன் பொன்சேகாவை நிரபராதியாக்கி தமிழ்மக்களை வாக்களிக்க கோருகின்றார்.

 

பொன்சேகா தமிழ்மக்கள் பிரச்pனைக்கு தீர்வாக ஓர் ஆவணத்தையே தன்னிடம் கையளித்துள்ளதாக சம்hந்தன் திருப்பதி அடைகின்றார். ஜனவரி 26-ல் இருந்து தமிழ்மக்களுக்கு பிரச்சினைகள் இல்லையே என்கின்றார்.

 

கடந்த 50 வருடங்களாக செய்யாத - எழுதாத - ஓப்பந்தங்கள் ஆவணங்களை விட பொன்சேகாவின் ஆவ(கோம)ணத்திற்குள் எதுதான் உள்ளது. மகிந்தாவிடம் கேட்டிருந்தால், மந்திரிப்பதவியுடன் கூடிய ஆவணமும் கொடுத்திருப்பார். தேர்கால ஆவணங்கள் ஏட்டுச்சுரைக்காய் என்பது கூட்டமைப்பினருக்கும் தெரியும். இருந்தும் அவர்களின் தேசிய சர்வதேச கூட்டாளிகளுக்காக கூத்தாடுகின்றார்கள்.

 

லசந்தாவை மகிந்தா இல்லாதாக்கிய ஓராண்டு!

 

ஐம்பது வருடங்கள் மக்கள் நலன்சார்ந்து எழுதிய ஒருவரை நினைத்துப் பார்க்கின்றோம். 1982-ல் ஐலனட் பத்திரிகையில் பத்திரிகை வாழ்வை ஆரம்பித்த லசந்தா, 94-ல் சொந்தமாக பத்திரிகை நிறுவனத்தை ஆரம்பிக்கின்றார். அன்றில் இருந்து 14-வருடங்கள், அவரது வாழ்வு போராட்டம் நிறைந்ததே. 1995 இல் பெப்ரவரியில் அவர் வாகனத்தில் வைத்து தாக்கப்படுகின்றார். 1998 இல் அவரது வீட்டன் மீது கிரனைட் வீசப்படுகின்றது. 2005 இல், 2007இல் சண்டே லீடர் அச்சகத்திற்கு தீ வைக்கப்படுகின்றது. இச்சம்பவங்களின் ஊடே தன்னை நீண்டகாலம் (அரசும் பிற்போக்காளர்களும்) வாழவிடமாட்டர்கள் என்பதை உணர்கின்றார். காலமாவதற்கு முன்பதாக சண்டே லீடர் பத்திரிகைக்கு மரண வாக்குமூலம் எழுதுகின்றார்..2008 ஜனவரி 8-ல் மகிநத அரசு அவரை இல்லாதாக்குகின்றது. 2009 மே 3ந் திகதி உலகப் பத்திரிகை சுதந்திரதினம். ஆத்தினத்தில் உலக பத்திரிகைகாகன விருது வழங்கப்படுகின்றது.

 

வசந்தா இல்லாதாக்கப்பட்டு, ஓராண்டாகியும் குற்வாளிகள் கண்டபிடிக்கப்படவில்லை. புத்திரிகைத்துறை ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்கின்றோம். இலங்கையில் அல்ல உலகிலும் மற்ற மூன்றின் நிலையென்ன?

 

இலங்கைத் தமிழருக்கு அரசியல் தீர்வு கிடைத்தால்தான் சந்திசேகரனின் ஆன்மா சாந்தியடையும். - திருமாவளவன்

 

சந்திரசேகரனின் ஆன்மா சாந்தி அடைவது திருமாவளவனுக்கு விருப்பம் இல்லையோ?

 

ஜனாதிபதித்தேர்தலில் - போட்டியில் இருந்து விலகிக்கொள்ளும்படி சிவாஜிலிங்கத்தைக் கேட்போம் - சம்பந்தன்

 

அவரை கேட்கச் சொன்னவர்களை சமாதானப்படுத்தி, "கொடுக்க வேண்டியவைகளைக்" கொடுத்து, பொன்சேகாவிடம் ஆவணம் ஒன்றும் வாங்கிக்கொடுத்தால், அவர் விலகியே விடுவார்;. உங்கள் நல்லூர் மாநாட்டிற்கும் வருவார்.

 

பிரபாகரனையும், தமிழ்மக்களையும் தவறாக வழிநடாத்தி, அழிவுப்பாதைக்கு கூட்டிச்சென்றவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே. - பிள்ளையான்

 

ஆழமான அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு. இவரின் மதியுரைஞரும் இவரை கைவிட்டுவிட்டாரோ?