டில்லியில், பெரியளவிலான திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் பல்வேறு வகையான பரிசு பொருட்களை பெறுகின்றனர். டில்லியில், திருமணங்களில் சடங்குகள் செய்யும் புரோகிதர்கள் நவீன மொபைல் போன்கள் முதல் பகட்டான மியூசிக் சிஸ்டம் வரை, எல்.சி.டி., “டிவி’ முதல் “ஏசி’ வரை ஏராளமான பரிசு பொருட்கள் பெறுகின்றனர்.
இதுகுறித்து, லட்சுமி நகரை சேர்ந்த கிரிஷன் காந்த் சர்மா என்பவர் கூறுகையில், “நாங்கள் பரிசு பொருட்கள் எதுவும் கேட்பதில்லை. அவரவர் அந்தஸ்திற்கேற்ப அவர்களாகவே கொடுக்கின்றனர். “யாராவது கொடுக்கும் போது நாங்கள் அதை வாங்க மறுப்பதில்லை’ என்றார்.இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தி வைத்த திருமணம் ஒன்றிற்காக, “டிவி’ ஒன்றை பரிசாக பெற்றுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில், அவர் மியூசிக் சிஸ்டம், “சிடி’ பிளேயர், நான்கு வாட்சுகள், மூன்று போன்கள் ஆகியவை பரிசாக பெற்றுள்ளார்.
புரோகிதர் ஒரு திருமணத்தை நடத்தி வைத்து, 51 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக, மியூசிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த இஷாங்க் சபர்வால் என்பவர் தெரிவித்தார்.இதுகுறித்து திருமண ஏற்பாடு செய்யும் கரிமா குமார் என்பவர் கூறுகையில், “வெளிநாடு வாழ் இந்தியர்கள், குஜராத்திகள் ஆகியோர் தான் திருமணங்களுக்கு அதிகளவில் செலவு செய்கின்றனர்.
“புரோகிதர்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கு “ஏசி’ பிரிட்ஜ் போன்றவற்றை பரிசாக பெறுவதாக, என் நண்பர்கள் மூலம் கேள்விபட்டுள்ளேன். மூன்றாண்டு காலமாக என் பணி மூலமும் இதை நேரில் பார்த்துள்ளேன்’ என்றார்.இதுகுறித்து சமூகஆர்வலரான யோகேந்திர சிங் என்பவர் கூறுகையில், “அந்த காலத்தில் கால்நடைகள் பரிசாக வழங்கப்பட்டன. அவை தற்போது, பணம் மற்றும் பொருள் என வளர்ச்சியடைந் துள்ளது. ”தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்குவது இந்திய பாரம்பரியத்தின் விரிவடைந்த நிலை’ என்றார் (தினமலர், 07/11/2009 ).
———————————————————————————————–
// ”யாராவது கொடுக்கும் போது நாங்கள் அதை வாங்க மறுப்பதில்லை’ என்றார்//
ஏதாவது ஒரு ஏழை மனிதனால் எந்த தட்சணையும் கொடுக்க முடியவில்லை என்றால் எந்த பார்பனரவது அந்த திருமணத்தை நடத்தி வைக்க தயாரா?
// ”அந்த காலத்தில் கால்நடைகள் பரிசாக வழங்கப்பட்டன. அவை தற்போது, பணம் மற்றும் பொருள் என வளர்ச்சியடைந் துள்ளது. ”தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்குவது இந்திய பாரம்பரியத்தின் விரிவடைந்த நிலை’ என்றார்//
இதுதான் பார்ப்பனியத்தின் வளர்ச்சியோ? மனுதர்மம் மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கிறதா?
உண்மையாகவே பார்பனர்கள் கடவுளின் அவதாரம் (அ) கடவுளின் தூதர்கள் என்றால் ஏன் தட்சணை வாங்குகிறார்கள்?
குரு தட்சணை என்று சொல்கிறிகளோ? ஒரு ரூபாய் குரு தட்சணை என்று கொடுத்தால் எந்த புரோகிதராவது ஏற்று கொள்ள தயாரா?
இளைஞர்களே!
இவர்களுடைய மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றால், ஏன் ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி இவர்களால் ஒரு ஆப்பிளையோ, ஒரு வாழை பழத்தையோ, குறைந்தபட்சம் ஒரு டம்ளர் தண்ணீரையோ உருவாக்க முடியவில்லை?
மந்திரத்தால், இவர்களால் உணவுப்பொருட்களை உருவாக்க முடிந்தால் இவர்கள் தட்சணை வாங்க வேண்டிய அவசியமே இருக்காதே?