இன்று இந்தியா மிக வேகமாக ஏகாதிபத்திய கால்களில் விழுவதில் முண்டியத்துச் செல்கின்றது. சுய தேசியத்தை அழித்து ஏகாதிபத்தின் நவகாலனியாக இந்தியாவை மாற்ற தரகு முதலாளிகள் வேகமாகவே முன்னேறி வருகின்றனர். தை மாதம் வெளியான உலக வங்கி அறிக்கையில் , உலகில் கடன் பெற்று அதில் மீள முடியாமல் சிக்கித் தவிக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா கைப்பற்றி உள்ளது.

முதலாவது இடத்தை வகிக்கும் பிரேசில் 13,270 கோடி டொலரையும், 2 வது இடத்தை வகிக்கும் மெக்சிக்கோ 11, 800 கோடி டொலரையும், மூன்றாவது இடத்தை வகிக்கும் இந்தியா 9, 179 கோடி டொலரையும் கடன்களாகக் கொண்டுள்ளன. இது இந்தியாவின் பண மதிப்பீட்டின் படி 2,84,518 கோடி ரூபாய்களாகும். இது ஒவ்வோர் இந்தியன் தலைக்கும் 5,850 ரூபாய்களின் படி இந்தியாவை அடகு வைத்துள்ளனர்.

1990 -91 இல் 1,54,003 கோடி ரூபாய்களாக இருந்த இந்தியக் கடன் இன்று 2,42,78 கோடி ரூபாய்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் வேடிக்கை என்னவென்றால் இந்த நிதியாண்டில் 5,028 கோடி ரூபாய்களைக் கடனாக வாங்கியுள்ளது தான். பின் இப்பணத்தில் பழைய கடனைத் திருப்பிச் செலுத்த 3,523கோடி ரூபாயை கொடுத்தது. அத்துடன் வாங்கி வாங்கியக் கடனுக்கு வட்டியாக 2, 817 கோடி ரூபாயையும் செலுத்தியது. ஆக மொத்தம் கடனும் வட்டியாக 6, 340 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்தது. மொத்த நட்டமான 1,312 கோடி பணத்தை உள்நாட்டில் திரட்டியது. கடனை வாங்கி கடனை அடைத்த அதே நேரம் கடனோ குறைந்து விடவில்லை. அதிகரித்து சென்ற வண்ணமே உள்ளது.

 

60 களில் மெக்சிக்கோவை கைப்பற்றிய ஐஆகு தேசிய சுயnhபாருளாதாரத்தை சிதைத்தனர். இன்று மஞ்சள் கடதாசி கொடுத்து விட்டு தான் திவாலாகியதை அறிவித்தது. இன் நிலையில் அமெரிக்காவும் , மற்றைய வங்கிகளும் ஓடோடி வந்து 900 கொடி டொலர்களை கடனாகக் கொடுத்து மெக்சிக்கோ பொருளாதாரத்தை தக்க வைக்க முனைந்துள்ளனர்.


இந்தியாவும் வேகமாக இன் நிலை நோக்கி நகர்கிறது. இதை சில புள்ளி விபரங்களின் மூலம் காண முடியும். 1991 ல் இருந்தது. இன்று இது 276.7 புள்ளியாக உயர்ந்து விலைவாசியாகி உள்ளது.

 

1991 ல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்தோர் எண்ணிக்கை 2818 கோடி நபராகவும் அதிகரித்துள்ளது. 1993 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 40 வீதமாக இருந்தது. 94 ல் இது 35.5 ஆகக் குறைந்தது. 93 ம் ஆண்டு 20 வீதமாக இருந்த ஏற்றுமதி வளர்ச்சி 94 ல் 15 சதவீதமாக சுருக்கி விட்டது.

 

தொடர்ந்து வந்த பணவீக்கம் இன்று இரட்டை இலக்கமாக மாறியுள்ளது. இது இந்தியா பொருளாதாரத்தை படு பாதாளத்தை நோக்கி தள்ளும் என முதலாளித்தவ நிபுணர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 65,000 கோடியில் இருந்து 98000 கோடியாக அதிகரித்தள்ளது. 1989 – 90 ல் 7,590 கோடி டொலராக இருந்த அன்னிய கடன் நான்கு ஆண்டுகளில் 9,178 கோடியாக அதிகரித்துள்ளது. ரூபாயின் மதிப்பு இறக்கத்தால் தற்போதைய கடன் 100 வீதத்தால் மேலும் அதிகரித்துள்ளது. ஒவ்வோர் இந்தியன் தலையிலும் 5,850 இந்திய ரூபாய் என்ற அளவில் நாட்டை விற்று ஏகாதிபத்திய நுகத்தடியில் இந்தியாவை அடகு வைத்துள்ளனர்., இந்தியா ஆளும் வர்க்கத்தினர்.