களமாடி மடிந்தவர்கள்..எம் இனத்தின்
காலம் விடியுமென்ற கனவுடனே சென்றவர்கள்
தலைமையை நம்பி தம்உயிரை ஈந்த…எம்பிள்ளைகள்
உடல் தேடிப்புணர்வதற்கு போரின் தர்மம் அறியா
பாசிசவெறிநாய்கள் பகலிரவாய் அலைகிறது
புலத்து ஆய்வாளப்புலிகளோ ..தலைவர்
இறுதிக்கண நினைவுகட்கு ஆருடம் சொல்கிறது
என்ன கொடுமை
எழுதி உசுப்பேத்தி.. புலத்துமக்களை
மாயைக்குள் தள்ளி மண்ணின் அழிவுக்கு வித்திட்டோரே
தமிழ்செல்வனும் தலமையும் இருக்கட்டும்..முதலில்
நீங்கள் மக்களிடம் மன்னிப்பு கோருங்கள்
ஜநாவே மனிதஉரிமை மகான்களே
வென்றுவரவில்லையென்று எம்மக்கள் வேதனையில் அழவில்லை
பாசிசத்தின் கரங்களிலே
குதறக்குடுத்ததெண்ணி இதயம் வெடிக்கிறது
கொடுமைக்கு குரலெழுப்பா அமைப்பெதற்கு
மானுடத்தின் மீதான ஈனத்தனத்திற்கெதிராய்
துரும்பைத்தன்னும் தூக்கிப்போடமுடியா அமைப்பெதற்கு
இழுத்து முடுங்கள்…இல்லையேல்
சுயமாய் செயலாற்றும் வல்லானாய் மாறு
சமுதாயஆர்வலர்கள் ஓர்வழியில் சங்கமிக்கும் நேரமிது
இன்னமும் முட்டிமோதல் முடிவற்று
வடக்குஇகிழக்கு தமிழனாய் முஸ்லிமாய் சிங்களவனாய்
பிரித்துப்போடும் வக்கிரம் நிமிர்கிறதா
பிள்ளைகளைப் பெற்ர வயிறுகட்கு…
நாளை
உங்கள் பிள்ளைகள் கனவுவெல்லுமென்ற
நம்பிக்கையை கொடுங்கள்
போரடிக்கும் காலமல்ல
ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் நேரமிது