07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்…..15-வது பாராளுமன்றம்… குறிச்சொற்கள்: போலி ஜனநாயகம்

எங்கப்பா டாக்டர் அதனால நானும் டாக்டர்.

எங்கப்பா பாடகர் அதனால் நானும் பாடகர்.

எங்கப்பா பத்திரிகை நடத்தினார் அதனால நானும் நடத்துகிறேன்.

எங்கப்பா சினிமா இயக்குநர் அதனால் நான் ஹீரோ…


எங்கப்பா முதல்வர் நான் துணை முதல்வர்.

எங்கப்பா மத்திய அமைச்சர் நான் எம்.பி.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...அரசியல், சினிமா, ஊடகம் என எல்லா துறைகளுமே வாரிசுகளால் நிரம்பி வழிகிறது. வலிக்காமல் அப்பாவின் கல்லாவில் அமர்ந்து விடுகிற இவர்களுக்கு கிடைப்பதோ இளைஞர்கள், திறமையானவர்கள், துடிப்பானவர்கள் என்கிற பட்டம். உலகிலேயே ஆகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொண்ட இந்திய நாடாளுமன்றம் இன்று அரசியல் வாரிசுகளின் களியாட்டக் கூடாரமாக ஆகியிருக்கிறது. எல்லா மாநில வாரிசுகளும் பொழுதுபோக தேர்ந்தெடுத்திருக்கும் கிளப்தான் இந்த பாராளுமன்றம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களின் பிரதிநிதிகள் என்று மார்தட்டிக் கொண்டவர்கள் இப்போது வாரிசுகளை டில்லிக்கு அனுப்பி பதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்கள், ராஜ குடும்பத்தினர், தொழிலதிபர்கள், முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பிள்ளைகள் என்று இந்தச் சமூகத்தின் செல்வாக்குப் பெற்ற பெரிய மனிதர்கள் இவர்களின் பிள்ளைகள் இவர்களின் அடுத்த வாரிசுகளாக பாராளுமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதோடு இப்போது வெறுமனே எம்.பிக்களாக மட்டுமே இவர்கள் இருந்து விட்டுப் போவதில்லை.பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பலாகவும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளையடிப்பதும் அதிலிருந்து எப்படித் தப்புவது என்பதும் இவர்களுக்கு கைவந்த கலை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...காஷ்மீர்ல் தொடங்கி நாம் பார்த்தோமானால் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா காஷ்மீர் மாநில  முதல்வராக உள்ளார். அவரது மருமகன் சச்சின் பைலட் இணைஅமைச்சர். பரூக் அப்துல்லாவோ மத்திய எரிசக்தித்துறை அமைச்சர். ஆந்திராவில் என். டி.ராமாராசின் மகள் புரந்தேஷ்வரி இணை அமைச்சர். சரத்பவார் மகள் சுப்ரியா சுலே எம்.பி. முலயாம்சிங் யாதவ்வின் மகனும் எம்.பி, பிஜூபட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக் ஒரிசாவின் முதலமைச்சர். ராஜஸ்தானின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த  ஜோதிராதித்ய  சிந்தியா - தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர். தமிழகத்திலிருந்து கருணாநிதியின் வாரிசுகள் அனைவருக்கும் கேபினெட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி.

மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் சகோதரர் திலீப், மகாராஷ்டிர மாநில அமைச்சராக உள்ளார். தேஷ்முக்கின் மகன் அமித்தும் எம்.பி.காங்கிரஸ் கட்சி அல்லது அவரது ஆதரவாளார்கள் என்று இருக்கிற அனைவருமே தங்களின் வாரிசுகளை இம்முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

சுனில்தத், சரத்பவார், அர்ஜூன்சிங், என ஒவ்வொரு மாநிலத்தையும் பட்டா போட்டு ஆண்டு கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதற்கு பிஜேபி மட்டும் விதிவிலக்கல்ல. மும்பையின் தாதாபணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...பால்தாக்கரேயின் ஒட்டு மொத்த குடும்பத்தின் கையில்தான் கட்சி இருகிறது. பிரமோத் மகாஜன், அத்வானி, என அனைவரின் குடும்பமுமே கட்சியையும் பதவியையும் பங்கிட்டுக் கொண்டிருக்கிறது. பீகார் லல்லுவுக்கு, சட்டீஸ்கர் சிபுஷோரனுக்கு, கேரளா கருணாகரனுக்கு (ஆனால் கேரளாவில் இவர்களுக்கு பலத்த அடி). தமிழ்நாடு கருணாநிதிக்கு  என இந்தக் கேவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு அமைச்சரையும், அரசியல்வாதிகளின் குடும்பப் பின்னணியையும் ஆராய்வத்ற்குள் போதுமடா இந்தக் கேவலம் என்றாகி அப்பாடா என்று அமர்ந்தால் அறிவிப்பு வருகிறது, மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் என்று… இந்தக் கேவலத்தை முதன் முதலாக துவங்கி வைத்தது யார்? என்று பார்த்தால் இந்திய அரசியலில் வாரிசு அரசியலை தொடங்கி வைத்தது நேரு மாமாதான்.

INDIA-POLITICS-CABINETஇந்திய அமைச்சரவையிலேயே இளவயது அமைச்சர் என்று புகழப்படும் அகதா சங்மாவுக்கு வயது 28. அகதாவின் அப்பாதான் முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும் சபாநாயகருமான பி.ஏ.சங்மா. இவர் சோனியாவை இத்தாலி நாட்டுப் பெண்ணை இந்தியாவின் அன்னையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூவியவர். சோனியா பிரதமராவதை கடுமையாக எதிர்த்து வந்தவர். இப்போது அதே சோனியா அவரது மகள் அகதா சங்மாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கிறது என்றால், இப்போது மட்டும் இத்தாலித் தாய் இந்தியத் தாயாகிவிட்டாளா? என்ன?

பதவியேற்ற பிறகு கௌகாத்தியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அகதா, “சோனியாவை அப்பா விமர்சித்தது எல்லாம் பழைய கதை, இப்போது ராகுல்காந்தி பிரதமராவதற்கு எந்தத் தடையும் இல்லை”" என்றிருக்கிறார். ஸ்டாலின் துணை முதல்வரானதற்கு ராமதாஸின் மகன் அன்புமணி வாழ்த்துச் சொல்வதையும், சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும், கனிமொழியும் சேர்ந்து கருத்து அமைப்பைத் துவங்கியதை இத்தோடு இணத்து சிந்தித்துப் பார்க்கவும்.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...இந்த வாரிசுகளின் தகப்பனார்கள் வாக்குகளை நம்பி மக்களிடம் மண்டியிட்டு பிச்சை எடுத்தது போலெல்லாம் இவர்கள் எடுப்பதில்லை. கருணாநிதியின் அரசியல் வாரிசுகளான தயாநிதியும்,அழகிரியும் அவரவர் தொகுதியில் என்ன கேவலங்களை எல்லாம் செய்தார்கள் என்பதை எல்லோரும் வேடிக்கை பார்த்தோம். அதே கேவலத்தைத்தான் எல்லா வரிசுகளும் செய்கிறார்கள். ஓட்டு என்றால் தங்களுக்கு மட்டும்தான் மக்கள் ஓட்டுப் போட வேண்டும். தொழில் என்றால் தாங்கள் மட்டுமே செய்ய வேண்டும். கட்சியில் தங்களுக்கு இணையாக வேறு யாரும் வளர்ந்து விடக் கூடாது அல்லக்கைகளுக்கு மட்டுமே கட்சியில் இடம் என்று வெளிப்படையாக ஒளிவு மறைவில்லாமல் செய்லபடுகிற இந்த ரௌடிவாரிசுகளுக்கு மக்கள் கொடுத்திருக்கும் அடை மொழியோ துணிச்சலானவர், சொன்னதை செய்து முடிக்கக் கூடியவர் என்பதுதான்.அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்று நினைக்க வேண்டாம். ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை என்பதுதான் இங்கு பிரச்சனை. ஆனால் ஜெவின் வாரிசு அரசியல் பங்கை இங்கே சசிகலா குடும்பம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...தொழில் வளர்ச்சி, ஹைடெக் சிட்டி, நகரை தூய்மையாக வைத்தல், புகையிலை ஒழிப்பு, என்று மக்களுக்கான நிவாரணங்களைப் பேசுதல் என்பதோடு அந்நிய மூலதனங்களை கொண்டு குவிப்பதன் மூலம் மக்களை நேர் வகிடாக பொருளாதார ரீத்யீல் தரம் பிரித்து வறுமைப் பட்ட மக்களை நகரத்தை விட்டு துரத்தியரடிப்பது அல்லது நவீனக் கொத்தடிமைகளாக ஏழைகளை சுவீகரிப்பது என்பதுதான் இவர்களின் மனதில் உதிக்கும் மக்கள் திட்டம்.

மற்றபடி,

இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமை, சிவில் உரிமை, தமிழ், தமிழர், ஈழம், சமூக நீதி என இவர்கள் எந்த பொதுப் பிரச்சனை குறித்தும் கருத்துச் சொல்ல மாட்டார்கள். வேறு எந்த சண்டை சச்சரவுகளுக்கும் போகவும் மாட்டார்கள். ஆனால் தொழில் பாதிக்கிறது என்றால் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் எரித்து குடும்பத்துக்குள்ளேயே அடித்துக் கொள்வார்கள். ஆனால் பதவியும் அதிகாரமும் பறி போய் விடுமோ என்றால் காலில் விழுந்து நக்காத குறையாக நக்கி அடித்துத் துரத்தியவர்களிடமே அண்டி நாயைப் போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். இதற்கு இந்த திருட்டுக் குமபல் வைத்திருக்கும் பெயர் பெருந்தன்மை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...கடந்த 16-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான போது ஆங்கில சேனல் ஒன்று தயாநிதியிடம் பேட்டி எடுத்தது. அந்தப் பேட்டியில் தயாநிதி சொன்னது என்ன தெரியுமா, “இலங்கைப் பிரச்சனை ஒரு பிரச்சனையே அல்ல. அதை தமிழக மக்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை “என்று பேசிவிட்டு “ஈரோட்டில் ஜெயித்த மதிமுக எம்பி எங்கள் கட்சிக்கு  வந்தால் வரவேற்போம்”" என்றார். என்ன கேவலம் பாருங்கள். சுரணை உள்ள எந்த பத்திரிகையாளனும் “அப்படி என்றால் எதற்கு உங்கள் தாத்தா போர் நிறுத்தம் கேட்டு உண்ணாவிரதம் இருந்தார்,அப்போ அது நாடகம் என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்களா? “என்று ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...பதவி போதை இவர்களை கொலை செய்யத் தூண்டுகிறது. சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிக்கத் தூண்டுகிறது. சமீபத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பல நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று சிக்கினார் சுமதி ரவிச்சந்திரன் என்ற பெண் பாஸ்போர்ட் அதிகாரி. அவரது உயர் கல்விச் சான்றிதழே தவறு என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது நீதிமன்றம். அடுத்த நாள் அந்த நீதிபதி மாற்றப்பட்டார். அடுத்த சில நாட்களில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அப்படி என்றால் அவரைக் காப்பாற்றியது யார்? என்ற கேள்வியை  எந்த மீடியாவும் கேட்கவில்லை. அவர் யாரின் வாரிசு என்றும் எந்த மீடியாவும் சொல்லவில்லை. அவர் மாநில கல்வி அமைச்சர் அன்பழகனின் நெருங்கிய உறவுக்காரப் பெண். காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜனின் தாயாரும் சுமதி ரவிச்சந்திரனின் தயாரும் அக்காளும் தங்கையுமாம். மத்திய மாநில அரசுகளின் செல்வாக்குள்ள சுமதி நூறு கோடி அல்ல எத்தனை கோடி வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம், அவரை எந்த இந்தியத் தண்டனைச் சட்டமும் தண்டிக்கப் போவதில்லை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...சரி தலைவர்கள்தான் இபப்டி என்றால் அரசியல் கட்சிகளின் ஏனைய பொறுப்பாளர்கள் மட்டும் விடுவார்களா என்ன? மாவட்டம், வட்டம், என்று ரௌடிகளாக அரசியலுக்கு வருகிறவர்கள், வந்து கொண்டிருப்பவர்கள், வரப்போகிறவர்கள் மட்டும் சாதாரண தொண்டனுக்கு வழிவிடுகிறானா?என்ன தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்கிற ரீதியில் மாவட்ட செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் என எல்லோருமே அவர்களின் வாரிசுகளை அரசியலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். விளைவு தொண்டன் காசு கொடுத்தால் வேலை பார்க்கிறேன் என்று பணத்தை வாங்கிவிட்டு கட்சிக்கு வேலை பார்க்கிறான். காசு வரவில்லை என்றால் எந்தக் கட்சி காசு கொடுக்குமோ அந்தக் கட்சிக்கு வேலை செய்கிறான். அல்லது வேலை செய்யாமல் இருந்து விடுகிறான். ஏனென்றால் முன்னரெல்லாம் வேலை செய்ய பணம் கொடுப்பார்கள். இப்போது வேலை செய்யாமல் இருக்கவும் பணம் கொடுக்கிறார்கள்.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...இந்த தேர்தல் நடைமுறையில் எதையும் நம்மால் சாதிக்க முடியாது என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். ஈழத்தில் நாம் ஏமாற்றப்பட்டோம், நமது வேலை பறிபோனது, விலைவாசி அச்சுறுத்துகிறது,  கல்வி, சுகாதாரம், என வாழ்வதற்கான அனைத்து உரிமைகளுமே மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இதை இனியும் மக்களாட்சி என்று நம்பிக் கொண்டிருக்கிற நாம் நாளை மன்னாராட்சியை எதிர் கொள்ள நேரிடும். வரும்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சிதான் இன்றைய பாராளுமன்ற போலி ஜனநாயகம். அரசியல் ஆதாயம் உள்ள, கோடீஸ்வரர்களையும், பண்ணைகளையும், தொழில் முதலாளிகளையும் பாதுகாக்கவே வாக்குச் சீட்டும், பாராளுமன்றமும், இவர்கள் ஜனநயகம் என்னும் பெயரில் மன்னராட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓவ்வொரு ஐந்து வருடமும் காத்திருந்து இவர்களை துரத்தி விடலாம் என்று ஏமாந்ததுதான் மிச்சம். வாரிசுகள் மேல் வாரிசுகளாக வந்து கொண்டே இருக்கும் இவர்களை அடியோடு வெட்டி வீச இனி இந்த நாட்டுக்குத் தேவை புதிய ஜனநாயகப் புரட்சி. ஆமாம் எப்படி ஈழத்துக்காக நமது இரத்தம் கொதிக்கிறதோ அதே கொதிப்பு பணக்காரர்களைக் காக்கும் அவர்களை மட்டுமே உருவாக்கும் இந்த அமைப்புக்கு எதிராகவும் வர வேண்டும்.

— தொம்பன்

( எமது நண்பர் தோழர் தொம்பன் வினவில் ஏற்கனவே சட்டக்கல்லூரி ‘கலவரம்’ தொடர்பாக “ஆனந்த விகடனின் சாதிவெறி” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். இத்தளத்தில் அவ்வப்போது எழுதுவார்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்