அண்மைக் காலமாக கருணாநிதிக்கும் கோபாலசாமிக்கும் இடையிலான அதிரடிப்(அதிகார ?);போட்டி முன்னிலைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து கோபாலசாமியை தமிழ்ப்பற்று உள்ளவராக காட்டமுனையும் செய்திகள் பலதரப்பாலும் பரப்பப்படுகிறது.

 

தி-மு-கவின் கடந்த கால வரலாறு சாக்கடை நிறைந்த ஊழல் பெருச்சாளிகளால் நிறைந்தே இருந்தது. இதில் இருந்து பிரிந்த எம்-ஜி-ஆர் முதல் அனைவரும் மீண்டும் சாக்கடை அரசியலை நடத்தியவர்கள். தமிழ்நாட்டு மக்களை மேலும் கொள்கை அடித்த இவர்கள் பெரிய பணக்காரர்களாக மாறியுள்ளனர். தமிழ் நாட்டு கட்சிகளில் உள்ள முக்கியமான அனைவரும் பெரிய கோடீஸ்வரராக உள்ளனர். எப்படி இப்பணம் கிடைக்கப் பெற்றது.? எல்லாம் மக்கள் பணமே.

 

தமிழ்நாட்டு மக்கள் மாற்று உடுப்புகள் இன்றி வெட்டைவெளியிலும், கொத்தடிமைகள் ஆகவும் தமது வாழ்வை போராட்டத்துடன் தொடங்குகின்றனர். தலைவர்களோ கோடீஸ்வரர்கள் மக்களின் மாற்று உடுப்புக்களை கொள்ளையடிக்கும் எம்-ஜி-ஆர், கருணாநிதி- என அனைவரும் மக்கள் விரோதிகளே.

 

இந்நிலையில் தி-மு-கவின் கட்சிச் சொத்துக்களை பரம்பரைச் சொத்தாக 1970 களில் எம்-ஜி-ஆருக்கு எதிராகவும், இன்று வை-கோ வுக்கு எதிராகவும் (பயன்படுத்த??) முனைகிறார். தனது மகன் ஸ்டாலினை முன்நிலைக்கு கொண்டுவர படாத பாடுபடும் இந்த ஊழல் பெருச்சாளிகளிகள் எப்படி மக்கள் நலம் பேணுவர்?
முதலாளித்துவக் கட்சிகளின் பேராசையால் ஜனநாயகம் சந்தியில் கிழிக்கப்பட்டு எறியப்படுகின்றது. இந்த மாதிரியான சொத்து அரசியலே இன்று அரசிலும் உள்ளது. மக்கள் வாழிவுபற்றியும். அவர்களின் ஜனநாயக வாழ்வு பற்றியும் அக்கறையற்ற இந்தத் தலைமைகள் அடித்து நொருக்கப்பட்ட வேண்டும்.

 

வை-கோ இதில் இருந்து எந்த வேறுபாடும் அற்றவர். இவர் கடந்த காலத்தில் தி-மு-கவின் மக்கள் விரோத ஊழலுக்கு துணை போனவரே. மக்களின் போராட்ட உணர்வுகளை அடக்க முன்கரம் கொடுத்தவர். வை-கோவின் சொத்துக்கள் எப்படி வந்தன. வை-கோவின் கீழ் வேலை செய்யும் உழைக்கும் மக்கள் அடுத்தவேளை கஞ்சிக்கு வழியின்றி அவதிப்படுகின்றனர். வை-கோ உழைக்காமல் இருக்க கூலிகள் உழைத்துக் கொடுக்க வை-கோ உல்லாச வாழ்வு வாழ கூலிகள் மாற்று உடுப்பின்றி ஒருவேளை கஞ்சிக்கு அலையாய் அலைகின்றனர்.

 

வை-கோ ஈழப் போராட்டத்தில் தமிழீழக் கோரிக்கையை அங்கீகரிப்பாரா?

 

நிச்சயமாக இல்லை. எம்-ஜி-ஆர், கருணாநிதி போல் தமது அரசியல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு அன்று ஆதரித்து பின் எதிர்த்தது போல் தான் வை-கோவும். பிழைப்புவாத ஊழல் பெருச்சாளிகளான இவர்களுக்கு திமுக கொள்கைகளுக்கும், தமது அரசியல் மீட்சிக்கும் தமிழ் ஈழம் என்பது ஒரு சொற்தொடரே.

 

இந்திய இராணுவம் இலங்கையில் நின்றபோது வை-கோ, பிரபா, மாத்தையாவுடன் நின்று எடுத்த படத்தை இன்று காட்டி பிழைப்பை தொடர்கின்றார்.  மாத்தையா இன்று எங்கே என்று கேள்வி இருக்க வை-கோவிற்கு புலியுடன் காதல் வருமுன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தோழர்களாக செயற்பட்டவர். எம்-ஜ--ஆர் புலிக்கு உதவ வை-கோவும், கருணாநிதியும் தமிழீழவிடுதலை இயக்கத்தின் தூண்களாக செயற்பட்டனர். ஈழப்போராட்டத்தின் அதிகாரப்போட்டியில் பிரபா வென்றுவிடவே தமிழ் நாட்டு அரசியலில் வை-கோவும் கருணாநிதியும் ஒரு குத்துகரணம் அடித்தனர் அவ்வளவே.

 

இக்குத்துக்கரணங்கள் தமிழ் நாட்டில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த கையாண்டவையே. இந்தியாவில் தமிழ்நாட்டு மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடமுடியாத இவர்கள் எப்படி தமிழ் ஈழப்போராட்டத்தை ஆதரிப்பர். தி-மு-கவில் பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட எந்த ஒரு விடயத்தையும் கையில் எடுக்கத் தயார் அற்ற பிழைப்புவாத வை-கோ எப்படி தமிழ் ஈழத்தை ஆதரிப்பார்.

 

குறைந்த பட்சம் தி-மு-க உருவானபோது அதில் இருந்த கொள்கையையாவது வை-கோ முன்னெடுக்கும் பட்சத்தில் மட்டுமே அவர் ஈழப்போராட்டம் தொடர்பான நேர்மையான அக்கறை உள்ளதாய் நாம் பார்க்கமுடியும். இல்லாதபோது மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றி மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க ஈழப்போராட்டம் தேவைப்படுகின்றது அவ்வளவே.