தமிழீழப்போரடடத்தில் தேக்கமும் புதிய தேடலும் எம்மை ஒரு சஞ்சிகையாக பரிணமிக்க வைத்தது. நாம் ஒரு சஞ்சிகையாக வெளிக்காட்டிய ஆரம்ப நாட்களில் ஜரோப்பிய முற்போக்குகளை மையமாக வைத்தே வெளிவந்தோம். சஞ்சிகையின் தொடர்ச்சியில் முற்போக்கு போலிகளை ஆரம்பத்தில் இனம் கண்ட நாம் இன்று மார்க்சியத்தின் மீதான தாக்குதலையும் இனம் காண்கின்றோம்.

 

கடந்த ஒன்பது இதழ்களும் சில முழுமையான கட்டுரைகளை தாங்கி வந்ததுடன் முன்னேறிய பிரிவினர் மட்டுமே வாசிக்கும் நிலையும் இருந்தது. இவை தொடர்பான பல விமர்சனங்களை எதிர்கொண்டோம். இதை தொடர்ந்து சிறு செய்திகள் முதல் கட்டுரை வரை உள்ளடக்கிய சமர் 10 தை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.

 

எமது பத்திரிகையை பல வாசகரின் விருப்புடன் தொடங்கியுள்ளோம் இதில் பல குறைகள் இருக்கும் என நம்புகின்றோம். எதிர்காலத்தில் சமர் பத்திரிகையை ஒரு சிறந்த தேசிய விடுதலைப் பத்திரிகையாக உயர்த்த முடியுமென நம்புகின்றோம். இச் சமர் பத்திரிகை போட்டோ பிரதியாகவே வெளிக்கொண்டு வரமுடிவதுடன் ஓரளவுக்காவது பத்திரிகைக்கான வடிவத்தை குறைந்த பட்சம் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இதை அச்சுப்பத்திரிகையாக மாற்றவும் பக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டவும் கால இடைவெளியை குறைக்கவும் உங்கள் உதவி எமக்குத் தேவை.

 

பத்திரிகை நிதி அரசியல் உள்ளடங்கிய ஆக்கங்கள், விமர்சனங்கள் என்பன ஒரு சீராகவும் ஒழுங்காகவும் கிடைக்கும் பட்சத்தில் சமர் தன்னை விரிவுபடுத்தும். சமர் உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை கோரி நிற்கின்றது. சமருடன் இணைந்து வேலை செய்ய விரும்பும் சக்திகளை சமர் வரவேற்கின்றது.