இலங்கைத் தமிழர்கள் மட்டில் பெயருக்காகவோ அல்லது தனது அரசியல் அந்தஸ்தின் பொருட்டோ புலிகளுக்கும்> அல்லல்படும் தமிழ் மக்கள் மீது ஆதரவுக் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரித்தால் குண்டர் சட்டம்> பொடா> தடா என பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கின்றனர்.


இன்று காலாவதியாகிவிட்ட புஸ்தலைமையில் அமைந்திருந்த அமெரிக்க ஆட்சியார்களால் புரட்டாசி 11 க்குப் பின்னர் உலகில் பலபாகங்களில் உள்ள நாடுகள் அனைத்தும் அமெரிக்க தேசத்தின் அழுத்தத்தின் காரணமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றி வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை அடக்கிக் கொள்வதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் தற்பொழுது பயன்படுத்தத் தொடங்கி விடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு எவரையும் கைது செய்து விட முடியும். இச்சட்டம் எல்லா நாடுகளிலும் சாதாரண மக்கள் எதிர்க் கருத்து கொண்டிருந்தாலே போதும், அவர்களை கைது செய்ய முடியும் என்ற நிலையில் சட்டத்தில் இடம் உள்ளது. இந்தச் சட்டம் பயங்கரவாதிகளை அடக்கவென உருவாக்கப்பட்ட சட்டம் என்கின்ற போது போராடும் இனவகைகளைப் பாதிக்கக் கூடியதாகும். இந்த வகையில் மனித உரிமை சம்பந்தப்பட்டதாகும். இதன் காரணத்தினால் இவ்வகை பயங்கரவாதச் சட்டம் என்பது ஒரு உள்நாட்டு சட்டப்பிரச்சனை எனக் கொள்ள முடியாது. இது ஒவ்வொரு முற்போக்கு சக்திகளும் எதிர்க்க வேண்டும், அதன் மூலம் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகும். ஜோஜ்புஸ்தலைமையில் அமைந்திருந்த அமெரிக்க ஆட்சியார்களால் உலக ஒழுங்கு உருவாகப்பட்டது. இதன்படியே எல்லா நாடுகளும் பயங்கரவாத இவ்எதிர்ப்புச் சட்டத்தையும் மேலதிகமாக உருவாக்கிக் கொண்டனர்.

இலங்கைப் பிரச்சனையில் பலகட்சிகளும் தத்தம் நலனை கவனத்தில் கொண்டு
செயற்படுகின்றனர். இவற்றினுள் மக்கள் கலை இலக்கியக் கழகம் (தோழமை அமைப்புகள்)
மாத்திரமே இலங்கை மக்களுக்கான விடிவின் அடிப்படையில் இருந்து செயற்படுகின்றனர்.
இவர்களின் செயற்பாட்டைப் பற்றி புலிகளின் ஆதரவாளர்கள்,புலிகள் இவர்களின்
செயற்பாட்டை வெளிக் கொணர்வதில்லை. இன்றையக் காலத்தில் ம.க.இ.க மீதுதான் பிரச்சனையை
தமிழக மக்களுக்கு முழுமையாக கொண்டு செல்லும் அரசியல் பார்வை இருக்கின்றது. இவர்கள்
தமது சொந்த நாட்டிலே தமது உரிமைக்காக போராட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.


இன்று ஈழமக்களுக்கான நம்பக சக்திகளாக போராடிக் கொண்டிருப்பவர்கள் தமிழகத்தில் வாழ்பவர்கள் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே அங்கே வாழ்கின்றனர். அகதிகளாக உள்ள மக்களுக்கு உதவி செய்யத் துடிக்கும் தமிழக மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்துள்ளன ஆட்சிக்கு வந்த கட்சிகள். தமிழக மக்களே துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு சிறையில் அகப்பட்டனர். இவ்வாறான கெடுபிடிகள் எல்லாம் பயங்கரவாதிகள் அகதிகளுடன் சேர்ந்து வந்து விடுவர் என்று காரணம் கூறப்பட்டது. இருந்த போதும் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்துக் கொண்டும்> உழைக்கும் மக்களுக்காக போராடி வரும் அமைப்புக்களை அடுத்ததாக இந்த சட்டத்தின் மூலமாக ஒடுக்க முடியும். காங்கிரஸ் கட்சியை கலைஞர் திருப்திப்படுத்தும் நோக்கோடு ஏவப்படும் பாதுகாப்பும் படையும்> சட்டங்களும் ஈழ ஆதரவுச் சக்திகள் மீது பாய்கின்றனர். உலகத் தமிழர்கள் என்று கூறிக் கொள்ளும் கலைஞர் இன்று தனது குடும்பத்தவர்களுக்கு பதவிகளை பெற்றுக் கொடுக்கவும்> குடும்ப மூலதனத்தை வளம்படுத்தும் நோக்கில் அமைந்து செயற்பாடுகளால் இன்று ஈழத்தமிழர்களிடம் செல்லாக்காசாகி விட்டார்.

ஈழத் தமிழ் மக்களுக்காக போராட வேண்டும் என்றால் அந்தப் போராட்டத்தை
நடத்துவதற்குக் கூட உரிமை மறுக்கப்படுகின்றது. ஏன் திருமாவளவனுக்குக் கூட
கூட்டங்களை கூட்டுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் நிலையில் இவர்களுக்காக
உரிமைமறுக்கப்படுவது மற்றையவர்களை விட கடுமையானதாக இருக்கும்.


முதலாளித்துவ ஜனநாயக சமூகம் என்பது தேர்தலில் பங்குபற்றுவது> பேசுவதற்கான, எழுதுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை ஏற்றுக் கொள்கின்றன. இவ்வாறான அடிப்படைச் சுதந்திரத்தை முதலாளித்துவ ஜனநாயகம் அங்கீகரிக்கின்ற போது இந்திய ஆழும் வர்க்கம் நடைமுறையில் அழுத்தங்கள் கொடுத்து உரிமைகள் மீது தடையைப் போடுகின்றனர்.


கூட்டம் கூடுவதற்கு உருவாக்கப்படுகின்ற தடைகளை தமிழினத்தலைவர் காங்கிரஸின் நலன் கருதி மாத்திரம் இடையூறு செய்வதாக மாத்திரம் கருதிக் கொள்ள முடியாது. இவைகள் தொடர்ச்சியான தி.மு.காவில் உருவாகியுள்ள முதலாளிகளின் நலன்களும் காரணமாகின்றது.

கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார்.
இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு, தேசிய
பாதுகாப்பு சட்டம் என்கிற கடுமையான சட்டத்தின் கீழ் கைதாகிஇ புதுச்சேரி சிறையில்
இருக்கிறார். கொளத்து}ர்மணியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இராஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இறையாண்மையைக் காட்டி பேச்சுத்
சுதந்திரத்தை மறுக்கின்ற நிலையில் பல கைதுகள் நடைபெற்றிருக்கின்றனர்.

இக்கைதுகள் மூலம் போராடும் மக்கள் மத்தியில் பயத்தைக் உண்டாக்குவதும், இதன் மூலம் போராட்டத்தின் வீரியத்தை அடக்குவதே தமிழக, மைய ஆட்சியாளர்களின் குறிக்கோளாக இருக்கின்றது. அதிகார வர்க்கத்திற்குரிய ஆணவத்துடன் திரு தங்கபாலு கூறுகின்றார் "சென்னை: வைகோ முரண்பாடுகளுக்கு சொந்தமானவர். இந்திய இறையாண்மைக்கு எதிரானவர். இந்தியன் என்று சொல்வதற்கே வைகோ தகுதியற்றவர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்." ((http://thatstamil.oneindia.in/news/2009/03/10/tn-vaiko-is-unfit-to-be-an-indian-says-thangabalu.html ) இங்கு மறுக்கப்படுவது முதலாளித்துவ பொருளாதார அமைப்புக் கொடுக்க வேண்டிய பேச்சுரிமை இவற்றை மறுதலிக்கப்படுகின்றது.

இதேவேளை அரசியல் கோமாளிகளாக சுப்பிரமணிய சுவாமி> சோ போன்றவர்கள் எவ்வித கருத்துத் தெரிவித்தாலும் இவர்களின் கோமாளித்தனமாக கருத்துக்கள் அரசியல் ஆலோசனையாக அங்கீகரிக்கப்படுகின்ற வேளையில் மற்றவர்களின் பேச்சுரிமை மறுக்கப்படுகின்றது. சுதந்திர மறுப்பானது நிர்வனமயமாக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அதாவது இவர்களை எல்லாம் பேச விட்டது தவறு> சூத்திரர்கள் பேச கற்றுவிட்டால் இன்னும் பிரச்சனை உருவாகும் என்ற கருத்தானது நிறுவனமயப்படுத்தப்பட்டிருப்பதைத் தான் சுப்பிரமணியின் மீதான முட்டையடியும், பின்னரான பொலிசாரின் மிருகத்தனமாக தாக்குதலுமாகும்.

இவ்வாறே வங்காள விரிகுடாவில் கடல்தொழிலாளர் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டால் மீனவர்கள் என்றும், ஜம்மு காஸ்மீரில் ஒருவர் இறந்தால் பண்டித் என்றும் கூறி பிரச்சனையில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக உணர்கின்றனர். (உரிகைள் கொடுப்பதில் எவ்வாறு சாதியம் http://mathimaran.wordpress.com/மாறுபடுகின்றது என்பதை பார்க்க)

இன்றைய உலகில் இருக்கின்ற அரசுகளிடம் குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத்தினைக் வழங்க முடியாத நிலையில் தான் மேற்குதேசங்கள் தவிர்ந்த அனைத்து கண்டங்களிலும் தென்படுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கும் பேச்சு, எழுத்து, தெரிவு செய்யும் சுதந்திரம்,வாக்குரிமை என முதலாளித்துவம் சுதந்திரமாக கொடுக்கின்றது. இன்றும் குறிப்பாக கொல்ல வேண்டுமென்றால் மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும் உரிமை கொடுக்கின்றது.

குறைந்த பட்ச கோரிக்கைகள்:

குறைந்த பட்சமாக இருக்கின்ற முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் மக்களுக்கு கொடுக்கக் கூடிய உரிமையை கொடுப்பற்கு மறுக்கின்றனர். இங்கே இரண்டு விடயங்களைப் பார்க்கின்றோம்.

1. அடிப்படைச் சுதந்திரம்
2- முதலாளிகளுக்கிடையே தத்தம் மக்களை சுரண்டுவதற்காக
சுதந்திரம்.

 

ஒன்று வன்னியில் மக்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்தது மாத்திரம் அல்ல அம்மக்கள் தமிழர் என்ற காரணத்திற்காக நித்தமும் கொல்லப்படுகின்றனர். இந்த அடக்குமுறைக்கு எதிராக தமிழகத்தில் போராடுகின்ற தமிழக அமைப்புக்களுக்கும்> தனிநபர்களுக்கும் வாய்ப்பூட்டு போடும் நிலையில் அங்கு அடிப்படைச் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக புலிகளின் ஆதரவாளர்கள் என்ற காரணத்திற்காக அடிப்படை உரிமை மறுக்கப்படுகின்றதை நிர்வனமயப்பட்ட நிலையில் ஏற்றும் கொள்ளும் நிலைதான் இந்தியக் கண்டத்தில் இருக்கின்றது.


இந்த நிலையில் போராடுகின்றவர்கள் குறைந்தபட்சம் மக்கள் நலனில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்க வேண்டும். இதில் சுயநிர்ணய உரிமை என்பது அந்தந்த இனத்தின் வர்க்கங்களை சுரண்டுவதற்காக உரிமையை பெற்றுக் கொள்வதுதான். ஆனால் இங்கு இனம் என்ற வகையில் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. இதனால் மக்களுக்கான ஜனநாயகக் கோரிக்கையாக முன்மொழியப்படுகின்றது. இதை மறுத்து நிற்கும் முதலாளித்துவ சமூக உறவிற்கு அமைய இனங்களுக்கு கொடுக்கக் கூடிய சுயநிர்ணய உரிமை இவைகளை கொடுக்க மறுப்பதுடன் தனது ஆயுதங்களினால் அடக்குகின்றது.

இனவொடுக்குமுறையை மேற்கொள்கின்ற சிறிலங்கா அரசும், அதன் பங்காளிகளாக தமிழ்
இயக்கங்களும்,புலிகளும் மக்களின் அடிப்படை உரிமையை மறுதலித்துக் கொண்டுதான
இருக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் குறைந்தபட்சமாக மக்களின் ஜனநாயக உரிமையை
வலியுறுத்தும் கோரிக்கைள் முன்வைப்பது அவசியமானதாகும். பாதிக்கப்படுவது அதிகார
வர்க்கம் அல்ல. பாதிக்கப்படுவது பொதுமக்களே இவர்களைப் பாதுகாக்க வேண்டியது
அவசியமானதாகும்.


இந்த வகையிலேயே பரீஸில் நடைபெற்ற போராட்டமானது குறைந்தபட்ச கோரிக்கையை முன்வைக்கப்படவில்லை என விமர்சிக்கப்படுகின்றது. குறைந்தபட்ச ஜனநாயக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத இடத்தில் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது முடியாத காரியமாகும். குறிப்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியதான கோரிக்கைகள் கூட அங்கு வைக்கப்படவில்லை. இதனைத் தான் விமர்சின்றார் தோழர் ரயாகரன்.

தமிழகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும், இலங்கையிலும் உழைக்கும் மக்களின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப் படவேண்டும். இவ்வாற நிலையில் தமிழகத்தில் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும் சக்திகளே ஈழத்தில் இருக்கின்ற மக்களை இனத்துவ வேறுபாடுகள் இன்றியும்> சுயநிர்ணம் பெற்றும் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடுவதுடன் எமக்கு துணை நிற்கக்கூடிய சக்திகளாகும். தமிழக அரசியல் கட்சிகளில் இனத்துவ ரீதியில் குரல் கொடுக்கும் சக்திகள் இனத்துவ வரையறைக்குள் நின்று விடுகின்றனர். இவ்வாறான வேளையில் பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் உண்மை நட்புச் சக்திகளையும் இவ்வாறான சட்டத்தை பயன்படுத்தி பழிவாங்கி சிறையில் அடைத்துக் கொள்ளப்படுகின்றனர். எனவே ஒடுக்குமுறை சட்டங்கள் ஒவ்வொன்றையும் எதிர்ப்பது மனிதவர்க்கத்திற்கு சேவை செய்வதாகும்.