Language Selection

அண்மையில் இந்திய அமைச்சர்கள் சிதம்பரம், முகர்ஐp போன்றவர்களின் பேச்சுக்கள், இவர்கள் இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களா என எண்ண வைத்தது!

 

இவர்களது பேச்சில் விஞ்சி நிற்பது, புலிகள் ஆயுதத்தை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதே.  இதையே  இணைத்தள நாடுகளும் சொல்கின்றன.

 

தற்போது இலங்கை அரசியலில் "ஓர் i;ரைல்" புலியெதிர்ப்பாளர்கள் அரசை எதிர்க்க மாட்டார்கள், அரச எதிர்ப்பாளர்கள் புலியை எதிர்க்க மாட்டார்கள்! முதலாம் பேர்வழிகள் புலியையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவும், இரண்டாம் பேர்வழிகள பேரினவாதத்தையும் சிங்கள மக்களையும் ஒன்றாகவும் பார்ப்பார்கள்.

 

இந்திய அரசு புலிகளையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவே பார்க்கின்றது. இல்லாவிட்டால் மகிந்தப் பேரினவாதம் தமிழ்மக்களை ஆயிரக்கணக்கணக்கில் மடியச் செய்ய, சில தமிழ்மக்களே மடிகின்றனர் என முகர்ஐp பாராளுமன்றத்தில் பேசமாட்டார்.

 

வன்னியில் மக்கள் அழிவிற்கு அரசே பிரதான காரணி. இதை இந்தியா உட்பட பலநாடுகள் கண்டுகொள்ள மறுக்கின்றன. காரணம் இதையே இவர்களும்; தங்கள் நாடுகளில் செய்கின்றனர். அத்துடன்; இவர்கள் சிங்களப் போரினவாத்த்தின் வர்க்க உறவினர்களும்  நண்பர்களுமே.!

 

இந்திய அரசு தமிழ்மக்கள் பிரச்சினைக்கு ஏதோ சமகால - நீணடகால தீர்;வுகளை வைத்துவிட்டு அதுபற்றி பேச (ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு) வா என்ற பாங்கில் புலிகளை அழைக்கின்றது.

 

தமிழ் மக்களின இன்றைய அபிலாசைகளும், அத்தியாவசிய தேவையும், மரணத்துள் வாழ்விலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும், அதற்காக உடனடிப் போர்நிறுத்தமுமே. நாளாந்தம் 40, 50, 100 என்ற எண்ணிக்கையில வன்னியில் மக்கள்; சாகடிக்கப்படுகின்றனர். இதில் சின்னஞ் சிறார்கள், வயோதிபர்கள், நோயாளர்கள், கற்பனிப் தாய்மார்கள் என்று ஒரு இன அழிப்பு நடக்கின்றது. மக்கள் எந்த அடிப்படை வசதிகளுமற்ற சோகமான அகதி வாழ்வு, எம் நெஞ்சை நெருட வைக்கின்றது.

 

இது தங்களுக்கும் கவலை தருவதாக, இதைச் செய்பவர்கள் பாசாங்கு செய்கின்றரர்கள். இந்திய அரசு புலியெதிர்பு கண்ணாடியை அணிந்துகொண்டு, தமிழ் மக்களைப் பார்க்கின்றது. அதனால் தமிழ்மக்கள் எல்லாம் அதற்கு புலியாய்த் தெரிகின்றது.

 

இப்போக்கிற்கு இசைவாகவே இலங்கையன்; ஐனநாயக நீரோட்டக் கழுதைகளும் கத்துகின்றன. 'கழுதைக்கு உபதேசம் காதுக்குள் சொன்னாலும் அபயக்குரல் ஓழிய வேறொன்றும் இல்லை" என்பார்கள். இதற்கமைய இதுகளுக்கும் எதைப் பார்த்தாலும்;, அவையெல்லாம் புலியாயே தெரியும். இதுகளும் புலிக்கெதிராக அபயக்குரலில் கத்துகின்றன.

 

இந்தியா சொல்வதுபோல் மகிந்தப் போரினவாதத்தை விட, புலியே தமிழ்மக்களின் அழிவிற்கான பிரதான காரணியென்கின்றது. புலிகள் அழியும்வரை போர்நிறுத்தம் வேண்டாம் என்கின்றது இக்கூட்டம். புலியையும் அரசையும் எதிர்த்து அரசியல் போர் செய்யமுடியாது என்று ஒலமெழுப்புகின்றது. கிடைப்பதை எடுத்துக்கொண்டு இன்னும் பெறவேண்டியவற்றிக்காக நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் முன்னேற வேண்டும் என்கின்றது இக்கழுதைக் கூட்டம். பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தால், கட்டியுள்ள கோவணமும் களவு போய்விடும் எனவும், இது டக்கிளசிற்கு மிக விருப்பமாய் போன 'மேற்கோள" எனவும் அவரின் இணையதளம் புளகாங்கிதம் கொள்கின்றது.

 

டக்கிளசு போன்ற கழுதைக் கூட்டம் தமிழ்மக்களுக்கு பட்டாடை அணியப் (தனித் தமிழ் ஈழம்) புறப்பட்டு, அக் கனவில் உள்ளதும் இல்லாததாகி…… தற்போது மகிந்தாவின் கோமணத்திற்குள் இருந்துகொண்டு, அவனின் கோமணத்தையும்; பட்டாடையென தமிழ் மக்களுக்கு காட்டுகின்றுது. இதன் உச்சமே வடக்கின் வசந்தமென்ற அவரின் யாழ்ப் பிரவேசம். இவரின் இந்த வசந்தகாலம் பற்றி இணையதளங்களும் பின்னூட்டங்களும் பிச்செடுக்கின்றன. செய்வது ஓரிரு குடியேற்றத் திட்டங்கள் அதற்கு 'மகிந்தபுரம" "கோத்தபாயாபுரம்" எனறு பெயர் வைப்புகள். அத்துடன் யாழில் பழுதடைந்து உடைந்தவைகளுக்கு உதிரிப்பாக விநியோகம். ராணுவத்தின் மூலம் பத்திரிகை விற்பனவும், அரசியல் வியாபாரமும் செய்யும் இவ்விசர் கூட்டத்திற்கு, புலிகளுக்கும் அரசிற்கும் எதிராக எப்படி போராட முடியும் அல்லது எப்படி போராடத் தெரியும்.

 

இக்கழுதைக் கூட்டம் ஓப்புக்கு கத்துவது போல், மகிந்தப் பேரினவாதமும் சேர்ந்து தமிழ்மக்களின் அபிலாசைகளைக் கணக்கில் எடுத்து, அந்தரங்க சுத்தியுடன் ஓர் அரசியல் தீர்வை முன்வைத்து அதை மனப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியிருந்தால், புலிகளின் இருப்புக்கான அடித்தளத்தை எப்போவோ இல்லாதாக்கியிருக்க முடியும். யுத்தமின்றி புலிகளை இல்லாதாக்கியிருக்க முடியும்;. அதைச் செய்யவில்லை. இதை விடுத்து, அரசையும் புலியையும் எதிர்க்க ஏலாது என்ற திண்ணை தூங்கித் தத்துவம், கிடைப்பதை எடுப்பது, கொடுப்பதைப் பெறுவது என்ற பிச்சையெடுப்பு அரசியல் தமிழ்மக்களின் சுயநிர்ணயப் போராட்டமுமல்ல, விடுதலையுமாகாது!

 

இதுகள் போன்றே இந்திய மத்தியஅரசும். இதுகள் கழுதையென்றால், அது 'கோவேறு கழுதை போலுள்ளது". ஒட்டுமொத்த தமிழகமும் போரை நிறுத்தென்று நடத்தும்; (அரசியல்கட்சிகள் வெகுஐன அமைப்புக்கள்) வெகுஐனப்  போராட்டங்களை, கோரிக்கைகளை கணக்கில் எடுக்கவேயில்லை. கலைஞர் என்ற முதல்வர் அனைத்துக் கட்சிகளுடனும் டில்லி சென்று போரை நிறுத்தென்று கேட்டார்! அதற்கும் மசியவேயில்லை. இந்திய அரசின் கூட்டாளிகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கூட (கண்துடைப்பிற்காக) மகிந்தப் பேரினவாதத்தைப் பார்த்து போரை நிறுத்து, புலிகளுடன் பேசு, இனப்படுகொலை இருந்து மக்களைக் காப்பாற்று என்கின்றது. ஆனால் இந்திய அரசோ போரை நிறுத்தச் சொல்வதற்கு இலங்கை இந்தியாவின் அடிமை நாடுமல்ல, நமது காலனியாதிக்க நாடுமல்ல சுதந்திர நாடு என்கின்றது. சுதந்திர நாட்டின் உள்நாட்டுச் சண்டையில் புலிகளை ஆயுதத்தைக் கீழே போடச்சொல்வது எதன்பாற்பட்டது.? மகிந்தாவிற்கு சொல்ல முடியாதது, சுதந்திரத்தின் பாற்பட்டது. புலிகளைக் கேட்பது மேலாதிக்க திமிரின் பாற்பட்டதே!

 

மொத்தத்தில் திமிர் கொண்ட இந்திய மேலாதிக்கம், சிங்களப் பேரினவாதம், புலிகள், என்ற முப்பெரும் பாசிசங்களின் கோரப்பிடிக்குள் சிக்கி தமிழ்மக்கள் மரணத்துள் வாழ்கின்றனர். பெரும் மனித அவலத்திற்கும் உட்பட்டுள்ளனர்! 

 

இந்திய மேலாதிக்கம் சொல்ல, சிங்களப் பேரினவாதம் கொல்ல புலி அதில் உயிர் வாழ்கின்றது. தமிழ்மக்கள் நிர்ப்பந்தம், விருப்பமின்மை, பலாத்காரம் போன்வற்றிற் கூடாகவே புலிகளின் கேடயமாகியுள்ளனர.; கடடுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரவிரும்பும் மக்கள், வந்தவர்களுக்கு நடப்பவற்றை பார்த்து, வன்னியில் இருந்தாலென்ன (மரணம் என்ற ஒன்றைத் தவிர)வவுனியாவில் இருந்தாலென்ன, இரண்டும் ஒன்;றே என அவர்களை எண்ண வைக்கின்றது.

 

சிங்களப் பேரனிவாத அரசு, புலி, தமிழ்மக்கள் விடையத்தில், இந்திய அரசு ஊள்ளுர தன் மேலாதிக்க போக்கில் உறுதியாக இருந்துகொண்டு, வெளியில் 'கும்பலில் கோவிந்தா, மௌனம், அல்லது மதில் மேல் பூனை" எனும் நிலைகளை சந்தர்ப்ப சூழ்;நிலைககேற்ப முடிவுகளை எடுக்கும். எடுத்தும் வருகின்றது. தற்போது 'கும்பலில் கோவிந்தாவே" போடுகின்றது. அண்மைய முகர்ஐpயின் தமிழகத்து விஐயத்தில்; போது, இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யவேண்டும், புலியோடு பேசு, மக்களைக்  காப்பாற்று  எனக் கோரியுள்ளார். இது இலங்கை அரசை நோக்கிய, சமகால சர்வதேச சமூகத்தின் கோரிக்கையே! போரை நிறுத்தக் கேட்பதற்கு, இலங்கை இந்தியாவின் காலனி அடிமை நாடல்ல சுதந்திர நாடேயென்ற இந்திய அரசின் நிலை, தற்போதைய கோரிக்கை 'கும்பலில் கோவிந்தாவே"!       ; 
  
மரணத்துள் வாழ்வில்;, மனித அவலத்திற்குள் உட்பட்டுள்ள மக்களிற்கான அவசரத் தேவை எது? உடனடிப் போர் நிறுத்தமும், மக்களை புலிகளின் கேடயப் பிடியிலிருந்து விடுவிப்பதுமே! இது சர்வதேச சமூகத்தின் அனுசரனையுடனும், மேற்பாரவையுடனும் செய்யப்படவேண்டும். அத்துடன் இவ் அனுசரனை, மேற்பார்வையுடன்; தமிழ்மக்களின் உடனடி அத்தியாவசிய வாழ்வாதார குடியிருப்புப் பிரச்சினைகளுக்கு; தீர்வு காண்hதும், அவர்களின்; அபிலாசைகளை  உள்வாங்கிய அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதுமே அர்த்தமுயுள்ள அத்தியாவசிய அரசியல் தேவையுமாகும்! இதை பெற்றுக் கொடுப்பதே சர்வதேச சமூகத்தின் இன்றைய தார்மீகக் கடமையாகும். இது  இலங்கையின் எதிர்கால அமைதி உருவாக்கததிற்கும் உகந்தது!?;

 

அகிலன்
04.02.2009