07242021
Last updateசெ, 20 ஜூலை 2021 1pm

தலைமைக் குணம்!

திறமை மிக்க வீரர்கள்
போர்களத்தில்
போரிடுவதில்லை!


சிறந்த வீரர்கள்
தங்கள் கோபத்தை
வெளிப்படுத்துவதில்லை!

மிகச்சிறந்த
வெற்றி என்பது
பிரச்சனைகளில்
மூழ்குவதில்லை!

மனிதர்களைச் சிறப்பாக
பயன்படுத்துபவன்
அவர்களை விட
எளிமையானவன் போல்
நடந்து கொள்கின்றான்!

இதுதான் போட்டியற்ற
நிலையில் விளையும்
மாபெரும் சக்தி!
இதுதான்
மனிதத் திறமைகளை
உபயோகிக்கும் உபாயம்!

இதுதான் சொர்க்கத்தின் பாதை.
நமது முன்னோர்கள் கண்ட
முடிவான உண்மை
இயற்கையின் நியதி!

* சீன தத்துவஞானி லாட்சு

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்