05202022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

அடிமைகள் விற்பனைக்கு...

ரோம் நகரில்... 
மர்சியாஸ் சிலையின்... 
கீழே அடிமைச் சந்தை... 
நடந்துக் கொண்டிருக்கிறது...
திரளான மக்கள் அங்கே...!
சந்தை நடத்தும் வணிகன்...
ஒவ்வொரு அடிமைகளைப் பற்றியும்... 
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான்...!

உனக்கு என்ன செய்யத் தெரியும்..?
உன் தொழில் என்ன..?
பலவகையான இழிந்த வார்த்தைகளால்... 
குறிப்புகளை குறித்துக் கொண்டிருந்தான்..!

அடிமைகள் விற்பனை தொடங்கியது...
அடிமைகளில் முரட்டுத் தோற்றம்...
உடைய ஒருவன் இருந்தான்...
அவனை சங்கிலியால் கட்டி வைத்திருந்தார்கள்...
அவன் கோல் (Gaule) நாட்டைச் சேர்ந்தவன்... 
என்ற குறிப்பு மட்டுமே காணப்பட்டது.

சந்தை நடத்தும் வணிகன்... 
உனக்கு என்ன செய்யத் தெரியும்...
வழக்கமான கேள்விகளை... 
அவனிடமும் கேட்டான்..! 

மனிதர்களை வேலை வாங்கத் தெரியும்... 
கம்பிரமான பதில் அவனிடமிருந்து வந்தது...!

வணிகன் கூட்டத்திரைப் பார்த்து கூவினான்,

"யாருக்கு எசமான் வேண்டும்?"* விக்டோர் உய்கோ

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்