மார்பகம் என்றால் என்ன?
|
|
||||||||
மார்பக புற்று நோய் என்றால் என்ன? |
|||||||||
|
|||||||||
மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன? |
|||||||||
2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும் 3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும். 4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்) 5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும். மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடஉனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
|
|||||||||
எவ்வாறு மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது? |
|||||||||
மருத்துவ வரலாறு:- உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா? இருக்கிறதா என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள், உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம் கேட்பார்.
மார்பகக் கட்டியைத் தொட்டுப் பார்த்தல்:- உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம், அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக் கண்டறிவார்.
மம்மோ கிராம் (mammo gram) உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை, அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை பயன்மிக்க மார்பகத்தை எக்ஸ்ரே பிடிக்கும் தொழில் நுட்பமாகும் இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும். உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் உங்கள் மருத்துவருக்கு அளிக்கம். மம்மோ கிராமில் ஏதேனும் ஒரு பகுதியில் ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும் மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்.
அதிரொலி (Ultra sound) அதிர்ரொலி என்பது அதிக அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்ப்கத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம்.
நீடில் பயோப்சி (Needle Biopsy) உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால் உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில செல்களை எடுத்து நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை கெட்டியான கட்டியின் மைய செல்களை எடுக்கப் பயன் படுத்துவார்.
தொடரும்
நன்றி; சங்கி மருத்துவமனை |
http://ruraldoctors.blogspot.com/2008/12/1.html&type=P&itemid=84605