இந்து பாசிட் நரந்திரமோடி நடத்திய குஜராத் படுகொலை முதல், பம்பாய் படுகொலைகள், டில்லி சீக்கிய படுகொலை, ஒரிசா கிறிஸ்தவ படுகொலைகள் என்று, ஆயிரம் ஆயிரம் படுகொலைகள் இந்த மண்ணில் நடந்தபோது அதை ரசித்தவர்கள் தான், இன்று பம்பாய்க்காக புலம்புகின்றனர். சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்து அடிப்படைவாத பாசிசம் நடத்திய கொடூரத்தையே, மதவழிபாடாக்கி கொண்டாடும் கும்பல்கள் தான், இன்று ஜயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாங்கள், இதைப் பார்த்து ரசிக்கின்றோம். காலம் ப+ராவும் கொலை வெறியுடன், மற்றவனை அடக்கியொடுக்கி திரிந்த கும்பல், அதிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசிக்கின்றோம். மனிதத்தை வதைக்கும் கொடுங்கோலர்கள், பதைபதைக்க அதன் அத்திவாரமே ஆடுவதைக் நாம் கண்டு மனக்கிளர்ச்சி கொள்கின்றோம்.

 

சாதியின்பெயரால், மதத்தின் பெயரால் கொன்று குவித்த ஆவிகள், இதை பார்த்து குதூகலமடைகின்றன. ஆளும் அரச பயங்கரவாதமும், அதன் துணையுடன் ஆட்டம் போடும் இந்துத்துவவாதிகளால், மனிதம் சிதைக்கப்பட்ட போதெல்லாம் எந்த நீதி விசாரணையும் நடந்தது கிடையாது. இந்தக் குற்றத்துக்காக யாரும் தண்டிக்கப்பட்டது கிடையாது. இந்த குற்றவாளிகளும் அவர்களின் ரசிகர் கூட்டமும் தான் 'பயங்கரவாதம்" தண்டிக்கப்பட்ட வேண்டும் என்று கூச்சல் போடுகின்றனர். படுபாதகமான தம் செயலுக்காக தாம் கொல்லப்படுவதற்கு எதிராக, கொல் என்று கொக்கரிக்கின்றனர். சித்திரவதைக் கூடங்களையும், சிறைக் கொட்டகைகளையும், சட்டங்களையும், தண்டனைகளையும் மக்களுக்கு எதிராகவே 'பயங்கரவாதத்தின்" பெயரில் உருவாக்குகின்றனர். இப்படி அரச பயங்கரவாதம் மக்கள் மேல் குதறியதும், அதற்கு எதிரான போராட்டமும் தான் மனித வரலாறு. 

 

பம்பாய் தாக்குதல், செப் 11 போல் ஆளும் வர்க்கத்ததைக் கிலி கொள்ள வைத்துள்ளது. இதைக் காட்டி யுத்த வெறியும், அடக்குமுறையும், அடிப்படைவாதமும் மேல்நிலைக்கு உசுப்பேற்றப்படுகின்றது.

 

இந்தத் தாக்குதல் உலகம் இரண்டாக பிளந்து கிடப்பதையும், இதையிட்ட அபிப்பிராயங்கள் இரண்டுபட்டுக் கிடப்பதையும் காட்டுகின்றது. அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட கோடானுகோடி மக்கள் மத்தியில் இருந்து உருவாகும் இந்த தனிநபர் பயங்கரவாதம், அப்பாவி மக்களை தனியாக இனம் பிரிப்பது கிடையாது. அது ஆளும் வர்க்கத்தை மட்டும் குறிவைத்து தாக்குவது கிடையாது. அது அப்பாவி மக்களையும் பலிகொள்கின்றது. இப்படி தனிநபர் பயங்கரவாதம் கண்மூடித்தனமானதாக, அது அப்பாவி பொது மக்களையும் தன் பயங்கரவாதத்துக்கு இரையாக்குகின்றது. இதன் விளைவு அரச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பதில், அதைப் பலப்படுத்துவதாக மாறிவிடுகின்றது.

 

இதில் இருந்த சற்று மாறுபாடகவே செப் 11, பம்பாய் தாக்குதல் குறிப்பாக ஆளும் வர்க்கத்தின் கோட்டைக்குள்ளான ஒரு தாக்குதலாக அமைந்து இருந்தது. இங்கும் அப்பாவிகள் கண்மூடித்தனமாக தனிநபர் பயங்கரவாதத்திற்;கு பலியானார்கள். மறுபக்கத்தில் உலகையே தம் அரச பயங்கரவாதம் மூலம் அடக்கியாளும் கும்பல்களும் அவர்களின் எடுபிடிகளும்  குறிப்பாக பலியாகினர். அவர்கள் அப்பாவிகள் அல்ல. கோடானு கோடி மக்களை கொன்று குவித்து, அவர்களின் நாடுகளையும் சொத்துகளையும் அபகரித்த கும்பல்களும், அதன் ஏஜண்டுகளும் அடங்கும். 

 

தனிநபர் பயங்கரவாதம் மூலம் இவர்களை கொல்வதால், மக்கள் தம் விடுதலையை ஒருநாளும் அடைவது கிடையாது. வெறும் பழிவாங்கலாக, தனிமனிதனின் இலக்கற்ற தற்கொலைக்கு ஓத்த ஒரு தீர்வாக அமைகின்றது. இது எந்த நோக்கத்துடன் அரங்கேறினாலும், மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாத துணை கொண்ட ஆளும் வர்க்கத்தை ஒழித்து விடமுடியாது. தனிநபர் பயங்கரவாத அராஜகம் மூலம், இந்த சமூக அமைப்பை தனிநபர்கள் யாரும் மாற்றிவிட முடியாது.

 

ஆளும் பயங்கரவாதம் மீதான வெற்றிகரமான தாக்குதல்கள், உலகை அதிரவைக்கும் தாக்குதல்கள் நடத்தப்படலாம், இதனால் உலகம் மாறிவிடாது. ஏகாதிபத்தியம் உற்பத்தி செய்த பின்நவீனத்துவம் கூறுவது போல், தனித்தனி பிரச்சனைக்கு தனித்தனித் தீர்வு என்று கூறும் அதே சாக்கடைதான். இது தனிநபர் பயங்கரவாதமாக மாறி, தன் தீர்வையடைய முனைகின்றது. 

 

மறுபக்கத்தில் ஆளும் அரச பயங்கரவாதம் தன்னை கதாநாயகனாக காட்டி மக்களை ஏமாற்ற, தனக்கொரு எதிரி அவசியம்; என்று கருதுகின்றது. இந்த வகையில் தான் பயங்கரவாதத்தை  உற்பத்தி செய்கின்றனர். உலகமயமாதலுக்கு அமைய, உலக பயங்கரவாதத்தை உருவாக்கியுள்ளனர். இதுவும் ஒரு சினிமா தான். தாம் உற்பத்தி செய்த உலக பயங்கரவாதத்தை தனது வில்லனாக்கி, தம்மை கதாநாயகனாக அவர்களே தம்மைத்தாம் நிலை நிறுத்திவிடுகின்றனர். இதன் மூலம் மக்களை சிந்திக்கவிடாது தடுக்கவும், மக்கள் தாம் அணிதிரளாது தடுக்கவும், இந்த ஆளும் வர்க்கம் உருவாக்கும் பயங்கரவாதம் துணை செய்கின்றது.

 

இதற்கு தனிநபர் பயங்கரவாத செயல்கள் உதவுகின்றது. தனிநபர் பயங்கரவாத செயலில் ஈடுபடுவன் கொண்டிருக்ககூடிய தியாகத்துடன் கூடிய மனிதத்தன்மையை, வில்லன் தன்மையாக மாற்றி அதன் நோக்கம் சிதைக்கப்படுகின்து. உண்மையில் மக்கள் படும் அவலத்துக்கு தீர்வாக கருதி செயல்படும் தனிநபர் பயங்கரவாதச் செயல், மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. ஓட்டு மொத்த மக்களும் இந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிரான பயங்கரவாத செயலில் ஈடுபட்டு, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இவை தடையாக மாறிவிடுகின்றது. 

    

தனிநபர் பயங்கரவாத செயலை செய்வதை விடக் கடினமானது, மக்களை விழிப்புறவைத்து அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தான். இதனால் இலகுவான வழியாக, தனிநபர் பயங்கரவாதத்தை தெரிவு செய்வது என்பது, குட்டிப+ர்சுவா மனவியல்பாகி அது பரந்துபட்ட மக்களுக்கு எதிரனதாகவே மாறிவிடுகின்றது. மக்களில் நம்பிக்கை இழக்கின்றது.

 

உலக அதிர வைத்த இந்தத் தாக்குதல் கற்றுத் தருவது எதை?
      
தனிநபர் தாக்குதல் மூலம், அரச பயங்கரவாதத்தை ஒழித்து விடமுடியாது என்பதை நிறுவுகின்றது. இதன் மூலம் அரச பயங்கரவாதம் மேலும் தன்னைப் பலப்படுத்தி, தன்னை சுற்றி ஆயுதமேந்திய பயங்;கரவாத குண்டர்களை நிறுத்தி தன்னை பாதுகாக்க முனைகின்றது. அதேநேரம் மக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்கத் தொடங்குகின்றது.

 

மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட, மக்கள் தமக்காக தாம் போராடுவது மட்டும் தான் அவர்களுக்குரிய விடுதலையை பெற்றுத்தரும் என்பதை இது புரியவைத்துள்ளது.

 

அதேநேரம் நிறுவனப்படுத்தப்பட்ட அரச பயங்கரவாத இயத்திரத்தை, மக்கள் தம்மைத் தாம் நிறுவனப்படுத்தியே இலகுவாக ஒழித்துக்கட்ட முடியும் என்பதை இந்த சம்பவம் கற்றுத் தருகின்றது. அமைப்பாக்கப்பட்ட 10 பேர் உலகறிய பலமணி நேரம், பல ஆயிரம் ஆயுதமேந்திய ஆளும் வர்க்கத்தின் குண்டர் படையையும், நவீன அரச இயந்திரத்தையும் ஆட்டிப்படைக்க முடிகின்றது என்றால், மக்கள் தம்மைத்தாம் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக அமைப்பாக்கி கொண்டால், மக்கள் தம் ஆட்சியை நிறுவ முடியும் என்ற ஒரு அரிய பாடத்தை கற்றுத் தருகின்றது.

 

உலகை மறுகாலனியாக்கும் பயங்கரவாதமும், தேசங்களை ஆக்கிரமிக்கும் பயங்கரவாதமும் இன்று மக்களை ஒடுக்குகின்றது. அவர்களின் நிலத்தையும், வேலையையும் பறித்துவிட்டு, அவர்கள் மேல் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுகின்றது. இதை எதிர்த்து அமைதியாக தம் உரிமைக்காக போராடும் மக்களைக் கொன்று குவிக்கும் அரச பயங்கரவாதத்தை விட, தனிநபர் பயங்கரவாதம் மென்மையானது. ஆனால் இதனால் அது அதிருகின்றது, தகர்வதில்லை. மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை தகர்ப்பது எப்படி? மக்கள் ஒன்று திரண்டு, மக்கள் தம் சொந்த அதிகாரத்துக்காக போராடுவது தான்;. இதை  எப்படி செய்வது என்பதை, எப்படி எதிர்கொண்டு போராட முடியும் என்பதையே, பத்துபேர் கொண்ட தனிநபர் பயங்கரவாதக் குழுவின் செயற்பாடு, மக்களுக்கு எதிர்மறையில் கற்றுத் தருகின்றது.

 

பி.இரயாகரன்
30.11.2008