என் உணர்வுகள்

எங்கே செல்கின்றன

அன்னிய நாட்டில்

நடைப் பிணமாக நாம்

உணர்வுகளை இழந்து

இயந்திரமாக நாம்

சிந்திக்கும் எம் உணர்வுகள்

மீண்டும் எம் மண்ணை நோக்கி

சிந்திக்கும் என் உணர்வை அழிக்க

அலையும் ஒரு கூட்டம்

மண்ணில் சிந்திக்க முயன்றவர்கள் மீது

இறுக்கப்பட்ட கட்டைகள்

மிஞ்சியது எது

மனிதப் பிணவாடையே

மண்ணில் சொல்ல முடியாததை

சொல்ல நினைத்தேன்

இங்குமா மிரட்டல்

இது தான் வாழ்வா

ஒரு கணம் சிந்தித்தேன்

ஒரே ஒரு கணமே

மரணம் பயமுறுத்தக் கண்டேன்

மௌனத்தின் முடிவும் மரணமே

செயல் ஆற்ற புறப்பட்டேன்

எனது மரணம் வரை

அதுவே எனது சுதந்திரம்

அதுவே மக்கள் விடுதலை

பி.றயா