குழந்தைக்கு கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால்தான்! அந்த தாய்ப்பாலை குழந்தைக்கு ஏன் தரவேண்டும்? எப்படித் தர வேண்டும்? பாலூட்டும் தாய்மார்கள் எதையெல்லாம் சாப்பிடவேண்டும்? எதைச் சாப்பிடக் கூடாது? யாரெல்லாம் குழந்தைக்கு பாலூட்டக் கூடாது? போன்ற கேள்விகளுக்கு இங்கே விளக்கமாக பதில் சொல்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் லலிதா ஜானகிராமன்.

தோய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகம்! குறிப்பாக முதல் நான்கு தினங்கள் கொடுக்கும் சீம்பால், குழந்தைக்கு மூளைக்காய்ச்சல், போலியோ, வயிற்றுப்போக்கு, மலேரியா போன்ற எந்த நோய்களும் வராதபடி காக்கும் நோய்த்தடுப்பு ஆற்றலைக் கொண்டது!

ே தாய்ப்பாலில் கிருமிகள் இல்லை. அதனால் இதை ஃப்ரிட்ஜில் பதப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

தோயின் மடியில் இருக்கும் குழந்தைக்கு மிகமிகச் சுலபமாக அதன் வாயருகிலேயே கிடைக்கும் இயற்கையான உணவு இது!

தோய்ப்பால் கொடுப்பதால், அந்தப் பெண்ணுக்கு பிற்காலத்தில் மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது!

கேுழந்தைக்குப் பிரச்னை ஏற்படுத்தாத, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால்.

தோய்ப்பால் கொடுக்கும் போது தாய்க்கு சொல்ல இயலாத ஒரு மன திருப்தியும், குழந்தைக்கு பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியும் உண்டாகிறது!

எப்படி தெரிந்து கொள்வது?

ே ஒரு குழந்தை எவ்வளவு பால் குடிக்கிறது. என்று யாரும் பார்க்க முடியாது! ஆனால் பால் குடித்தவுடன் நன்கு தூங்கினாலோ, ஆரோக்கியமாக இருந்தாலோ சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலோ குழந்தையின் எடை கூடினாலோ குழந்தைக்குத் தேவையான பால் கிடைக்கிறது என்று அர்த்தம்!

மகிழ்ச்சியாக பாலூட்டுங்கள்!

ே சில நேரங்களில் அம்மாக்களுக்கு ஏற்படும் டிப்ரஷன், எக்ஸைட்மெண்ட் போன்றவை பால் சுரப்பதைக் குறைத்துவிடும். ஆகவே குழந்தைக்கு பாலூட்டும் போது, ஒரு தாய் நன்கு வசதியாக அமர்ந்து எந்தவித மனக்குழப்பமின்றி மனதை நிம்மதியாக, மகிழ்ச்சியாக ஃபீல் செய்தபடி பாலூட்டுதல் அவசியம்.

ே சில குழந்தைகள், பால் குடித்து முடித்தவுடன் மார்புக் காம்பிலிருந்து வாயை எடுத்து விடும். ஆனால், சில குழந்தைகள் எடுக்காது.. அப்போது குழந்தைகளின் உதடுகளை மெதுவாக மார்பிலிருந்து நாம்தான் பிரித்து எடுக்க வேண்டும். சில குழந்தைகள், பால் அருந்தி முடித்த பின்னரும் கூட வெறுமனே மார்புக் காம்புகளைச் சப்பிக் கொண்டிருக்கும். அதற்காக வெடுக்கென்று குழந்தையைத் தாயின் மார்பிலிருந்து பிரிக்கப் கூடாது. குழந்தையின் வாய் ஓரமாக தாய் தன்னுடைய விரலை மெதுவாக வைத்துக் குழந்தையை மார்பிலிருந்து பிரித்தல் நல்ல முறையாகும்.

ே குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு ஒருமுறை பாலூட்டுவதைக் காட்டிலும் குழந்தை பசித்து அழும்போதெல்லாம் தாய்ப்பாலூட்டுதல் நல்லது.

ே சில நேரங்களில் குழந்தையின் துணிகள் ஈரமாகவோ, இறுக்கமாகவோ இருந்தாலும் குழந்தை அழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதனால் அழுகைக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு பசியால்தான் அழுகிறது எனத் தெரிந்தவுடன் பால் கொடுப்பது நல்லது.

ே பாலூட்டும் போது இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பாலூட்டுவது அவசியம். இல்லையெனில் ஒரு பக்கம் மட்டும் பால் கட்டிக் கொள்ளும்!

ே குழந்தை வளர வளர 3 அல்லது 4 மணிக்கொருமுறை தாய்ப்பால் அருந்த பழகிக் கொள்ளும். பிறகு அதற்கு ஏற்ப பால் கொடுக்கலாம்!

எதை கட்டாயம் சாப்பிட வேண்டும்?

ே அதிகப் புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, தினமொரு கீரை, பழங்கள் போன்றவை சாப்பிட வேண்டும்! வெள்ளைப்பூண்டும், சுறாப்புட்டும் அதிகம் எடுத்துக் கொண்டால் பால்சுரப்பது அதிகமாகும்.

ே கிழங்கு வகைகள் நல்லதுதான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மாந்தம் வரும்!

எதை சாப்பிடக்கூடாது?

ேஅதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயனக் கலவை சேர்த்த உணவுகளை... குறிப்பாக குளிர்பானங்களைத் தவிர்க்கவும்.

ே கடைகளில் வாங்கும் பிரியாணி மற்றும், சிக்கன் 65 போன்ற அயிட்டங்கள், அதிக குளிர்ச்சி தரும் உணவுகளும் கூடாது... சீதாப்பழத்தைசுத்தமாகத் தவிர்க்கவும்.


இதை நல்லா கேட்டுக்கோ மம்மீ!

கேுழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும்! குறிப்பாக முதல் சீம்பாலை வீணாக்கவே கூடாது!

பேடுத்துக் கொண்டு பால் கொடுப்பது நல்லதல்ல. இதனால் குழந்தைக்குப் புரையேறி சமயங்களில் ஆபத்தாகக் கூட முடிந்து விடும்! தவிர இதனால் குழந்தையின் காதில் சீழ் வடியவோ, எறும்பு நுழையவோ வாய்ப்பிருக்கிறது.

கேுறைந்த பட்சம் 6 மாதங்களுக்காவது குழந்தைக்கு தாய்ப்பால் தரவேண்டும். ஒரு வருடம் தருவது நார்மல்!

மேனநோயால் பாதிப்படைந்த பெண் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.

ே தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டின், கொழுப்புச்சத்து, கார்போ ஹைட்ரேட் போன்ற அனைத்துவகையான உயிர்ச் சத்துக்களும் உள்ளன. அதனால் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தைகள் பல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டி வரும்!

ே குழந்தையின் பசித் தேவையை அறிந்து அது அழும் போதெல்லாம் அவ்வப்போது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். காரணம், அதன் வயிறு மிகச் சிறியது. அதற்கு அடிக்கடி பசிக்கும்.

யாரெல்லாம் பாலூட்டக் கூடாது?

ே மார்பகப்புற்று நோய் உள்ளவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.

ே எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாஸிட்டிவ் ஹெபடைட்டிஸ் ஏ, ஹெபடைட்டிஸ் பி. தொழுநோய், காலரா, வெறிநாய்க்கடியால், ரேபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகப்படியான காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஆகியோரும் குழந்தைக்கு தாய்ப் பால் தரக்கூடாது.

(நன்றி -குமுதம் சிநேகிதி )

http://sowmyatheatres.blogspot.com/2008/09/blog-post_29.html