05202022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

படுபிற்போக்காளர்கள்

காந்தியும்


"கிராமத் தொழில்களின் ஆதிக்கத்தில்தான் உண்மையான சோசலிசம் இருக்கிறது. பெருமளவு உற்பத்தியின் விளைவாக மேலை நாடுகளில் நிலவும் குழப்பமான நிலைமைகளை நம் நாட்டிலும் தோற்றுவிக்க விரும்பவில்லை.'' (வல்லபாய் பட்டேல், அலகாபாத்தில் சொற்பொழிவாற்றியது. ஜனவரி 3, 1935)


காங்கிரசும், காந்தியும் விஞ்ஞான மனோபாவம் சிறிதும் அற்ற படுபிற்போக்காளர்கள் என்பதற்கு "இந்திய சுயஆட்சி' என்ற நூலில் அவர் எழுதிய கருத்துக்களே சாட்சிகள். அதில் அவர் நவீன விஞ்ஞானத்தையும் இயந்திரத்தையும் கடுமையாகக் கண்டிக்கிறார்.


"யந்திர சாதனம் கெட்டது என்பதை உணர வேண்டியது அவசியம். அப்பால் நாம் படிப்படியாக அதை ஒழித்து விடலாம்'' (காந்தி, இந்திய சுயாட்சி, பக். 124)


"ஆஸ்பத்திரிகள் பாவத்தைப் பரப்பும் நிறுவனங்கள்'' (மேற்படி நூல், பக்.64)


1909இல் ஒரு நண்பருக்கு எழுதிய "நம்பிக்கையின் பாவ ஏற்பு' என்பதில் காந்தியின் பிற்போக்குக் கண்ணோட்டம் மிகக் கூர்மையாக வெளிப்படுகிறது.


"மருத்துவ விஞ்ஞானம் மாந்திரீக முறையின் வடித்தெடுத்த சாரம். உயர்ந்த மருத்துவத் திறமை எனப்படுவதற்குப் போலி வைத்தியமுறை எவ்வளவோ மேல்....''


"... சென்ற ஐம்பது ஆண்டுகளில் கற்றவற்றை எல்லாம் மறப்பதில்தான் இந்தியாவின் விமோசனம் இருக்கிறது. ரயில்வேக்கள், தந்திகள், ஆஸ்பத்திரிகள், லாயர்கள், டாக்டர்கள் இவை, இவர்கள் போன்றன மறையவேண்டும்... உணர்வோடும், சமய நம்பிக்கையோடும் மனமறிந்தும் எளிய விவசாயி வாழ்க்கை வாழக் கற்க வேண்டும்''  (காந்தி நம்பிக்கையின் பாவ ஏற்பு, 1909, சொற்பொழிவுகள். பக்கம் 104143)

இந்திய வறுமைக்குத் தீர்வு காணும் வழிதான் இத்திட்டம். காந்தியின் "ராமராச்சியம்' எப்படியிருக்கும் என உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? முடியவில்லையெனில் பின்வருவன தெளிவுபடுத்தும்.


"பூரண சுயராச்சியம் பெற்றதும் தாங்கள் யந்திரங்கள் யாவற்றையும் ஒழித்து விடுவீர்களா?'' என அமெரிக்க நிருபர் கேட்டதற்கு காந்தி, "மாட்டேன் அதை ஒழிப்பதற்குப் பதிலாக நான் அமெரிக்காவிற்கு அதிக ஆர்டர் கொடுத்தாலும் கொடுப்பேன்'' என்றார்.


நிலப்பிரபுத்துவப் பிற்போக்குவாதி காந்தியின் திட்டம் இயந்திர எதிர்ப்பு, கைராட்டை, அன்னிய இயந்திர இறக்குமதி, உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு எதிர்ப்பு என்பதன்றி வேறென்னவாக இருக்கும்?

சரி, காங்கிரசும் சரி எவ்வாறு அவர்களுடைய திட்டத்திலேயே தெளிவற்று இருந்தார்களோ அதேபோல சிந்தனை முறையிலும் எதிர்கால இந்தியாவைப் பற்றிய கனவிலும் மிகமிகப் பிற்போக்குவாதிகளாகவே செயல்பட்டனர். இவர்களுடைய வேலைத் திட்டமே கிராமப் புத்தமைப்பும், தொழில்மயம் ஆவதற்கு எதிர்ப்பும் ஆகும்.