பெ ண்ணின் சுதந்திரக் காதல், பெண்ணின் கட்டற்ற சுதந்திரம் போன்றவற்றை நான் முன்பு சமரில் (பிரான்சிலிருந்து வெளிவரும் மார்க்சியப் பத்திரிக்கை) விவாதித்திருந்தேன். இதன் பின் தற்செயலாக லெனின் இது பற்றி விவாதித்து இருப்பதைப் பார்க்க முடிந்தது. எனது கருத்து மார்க்சிய நிலையில் சரியாக இருந்ததை லெனின் விவாதம் மேலும் வலுவூட்டிய நிலையில், அதை ஒட்டி விவாதத்தை வளர்ப்பது புரிதலைத் தெளிவாக்கும் அதே நேரம், காதலின் வக்கற்ற தன்மையையும் அம்பலப்படுத்தும்.

 


இனிஸ்ஸா ஆர்மண்டி என்பவர் சுதந்திரக் காதல் பற்றி லெனினுடன் முரண்பட்டார். இதை ஒரு விவாதத்தின் ஊடாக பிரசுரத்தை எழுத முயன்ற போது லெனின் அடிப்படை விடயங்களைச் சுட்டிக்காட்டி எழுதியதைப் பார்ப்போம்.


"நான் இங்கு உடனடியாக அவசியம் தெரிவிக்க வேண்டிய ஒரு கருத்து: ~காதலிக்க சுதந்திரம்| என்ற (பெண்களின்) கோரிக்கையை முற்றிலுமாகத் தூக்கி எறிந்து விடும்படி நான் உங்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன்.


அது உண்மையில் ஒரு பாட்டாளி வர்க்கக் கோரிக்கையல்ல. ஒரு பூர்ஷ்வா (முதலாளித்துவ) வர்க்கக் கோரிக்கையாகும். இந்தச் சொற்றொடரால் நீங்கள் என்னதான் புரிந்து சொல்லுகிறீர்கள்? இதன் மூலம் என்ன புரிந்து கொள்ளமுடியும்? காதலில் எதற்குச் சுதந்திரம் வேண்டும்? என்று பத்து கேள்விகளை லெனின் எழுப்பினார். அதனைக் கீழே காணலாம்.


1. பொருள்வளம் (நிதி சம்பந்தமான) பற்றி கணக்கிடுவதில் இருந்து சுதந்திரமா?


2. அதே பொருள்வளக் கவலைகளில் இருந்து சுதந்திரமா?


3. மத ரீதியான தப்பெண்ணங்களில் இருந்து சுதந்திரமா?


4. தந்தையின் தடைகள் முதலியவற்றில் இருந்து சுதந்திரமா?


5. சமுதாயத்தின் தப்பெண்ணங்களில் இருந்து சுதந்திரமா?


6. ஒருவரின் குறுகிய சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளில் இருந்து சுதந்திரமா? (விவசாயி, குட்டி பூர்ஷ்வா அல்லது பூர்ஷ்வா படிப்பாளி)


7. சட்டம், நீதிமன்றம், பொலீஸ் இவற்றின் தடைகளில் இருந்து சுதந்திரமா?


8. காதலில் உள்ள அக்கறை அம்சத்தில் இருந்து சுதந்திரமா?


9. குழந்தைகள் பிறப்பதில் இருந்து சுதந்திரமா?


10. ஒழுக்கக்கேடு (பிறர் மனைவி அல்லது பிறர் புருஷனை நயத்தல்) களில் இருந்து சுதந்திரமா?
மேற்கண்ட கேள்விகளில் எண் 1-7-இக்கு நீங்கள் வேறுவித பதங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காதலிக்கும் சுதந்திரம் இந்தக் கருத்தைத் துல்லியமாக வெளிப்படுத்தவில்லை.


பிரசுரத்தைப் படிக்கும் மக்கள் ~காதலிக்கும் சுதந்திரத்தைத்| தவிர்க்க முடியாதபடி பொதுவாகப் புரிந்து கொள்வர். அதாவது நீங்கள் விரும்பாவிட்டாலும் கேள்வி எண்கள் 8-10 போன்றவை மாதிரியாவது புரிந்து கொள்வர்.


இன்றைய சமுதாயத்தில் மிகவும் பேசப்படும், கூச்சல் போடப்படும் ~மேல்-முக்கிய| வர்க்கங்கள் ~காதல் சுதந்திரத்தை| எண் 8-10 ஆகப் புரிந்து கொள்வதனாலேயே, அந்தக் காரணத்தாலேயே, இது பாட்டாளி வர்க்கக் கோரிக்கையல்ல, ஒரு முதலாளித்துவக் கோரிக்கையே.


பாட்டாளி வர்க்கத்திற்குக் கேள்வி எண்கள் 1-2 மிக முக்கியமானவை. அதற்குப் பின் கேள்வி எண் 1-7 இவை உண்மையில் ~காதல் சுதந்திரம்| அல்ல. விஷயம் நீங்கள் தன்மனப்போக்கில் என்ன ~அர்த்தம்| என்று நினைக்கிறீர்கள் என்பதில்லை. காதல் விவகாரத்தில் வர்க்க உறவுகளின் யதார்த்த தர்க்க இயல் என்பதுதான் விஷயம்."


- என்று லெனின் எழுதிய கடிதத்தை மறுத்து மீள இனிஸ்ஸா ஆர்மண்டி "காதலிக்க சுதந்திரத்தை" ஆதரித்து எழுதிய போது லெனின் அளித்த பதிலைப் பார்ப்போம்.


"பிரசுரம் பற்றி கூறுவதானால், உங்கள் திட்டத்திலுள்ள ~காதல் சுதந்திரத்திற்கான கோரிக்கை| தெளிவற்றது என்பது எனது அபிப்பிராயம். உங்கள் உறுதிக்கும், விருப்பத்திற்கும் சம்பந்தமில்லாமல் (முக்கியம் என்னவெனில் புறநிலை மற்றும் வர்க்க உறவுகள் தான், உங்களுடைய உள்நிலை விருப்பமல்ல என்று இதை நான் வலியுறுத்தியிருக்கிறேன்.) இன்றைய நிலைகளில் இது ஒரு பூர்சுவா கோரிக்கை ஆகும். இது ஒரு பாட்டாளி வர்க்கக் கோரிக்கையாக ஆகாது.


.... தெளிவில்லாததைத் தெளிவாக்குவதற்காக, பத்து சாத்தியமான (வர்க்க முரண்பாட்டு நிலைகளில் தவிர்க்க முடியாதது. பல்வேறுபட்ட விளக்கங்களைக் கொடுத்தேன். அதைச் செய்யும் பொழுது 1 முதல் 7 வரை, பாட்டாளி வர்க்கப் பெண்களுக்கு மாதிரி அவர்களுக்கு உரியது என்றும், எண் 8 முதல் 10 வரை பூர்ஷ்வா பெண்களுக்கு உரியது என்றும் என் கருத்தைத் தெரிவித்திருந்தேன்.


......ஒன்றையோ, மற்றதையோ அல்லது மூன்றாவதையோ நீங்கள் செய்யவில்லை. 1 முதல் 7 வரையிலுள்ள பிரிவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளவே இல்லை. அவற்றை உண்மையென்று (ஒட்டு மொத்தமாக) நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தமா? (பாட்டாளி வர்க்கப் பெண்களின் விபச்சாரத்தையும் அவர்கள் பிறரைச் சார்ந்திருப்பதையும் பற்றி எழுதும் பொழுது ~இல்லை என்று சொல்வது சாத்தியமில்லை| என்பது 1 முதல் 7 வரையிலுள்ள பிரிவுகளுக்குள் முழுமையாக வந்து விடுகின்றது. நமக்கிடையே இங்கு எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது).


இது பாட்டாளி வர்க்க விளக்கம் என்பதையும் நீங்கள் மறுக்கவில்லை. மிஞ்சியிருப்பது பிரிவுகள் 8 முதல் 10 வரை.... காதல் சுதந்திரத்தைப் பூர்ஷ்வா பெண்கள் 8-10 பிரிவின்படி புரிந்து கொள்கின்றனர் என்பது எனது ஆய்வு...... இதைப் பூர்ஷ்வா பெண்கள் இப்படித்தான் புரிந்து கொள்கின்றார்கள் என்பதை இலக்கியமும் வாழ்வும் உண்மையில் நிரூபிக்கவில்லையா? அவை முழுமையாக அதை நிரூபிக்கின்றன. வெளிப்படையாகச் சொல்லாமல் இதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள்


அது இப்படியாயின், விஷயம் என்னவெனில் அவர்களின் வர்க்க நிலை ஆகும். இவற்றை ~மறுப்பது| சாத்தியமில்லாதது, அநேகமாக அப்பாவித்தனமானது"8 என்று லெனின் விவாதித்த "காதல் சுதந்திரம்" என்பதன் இரு வர்க்க நிலைகள் மீதான வர்க்க விளக்கங்கள் சரியானவை என்பதை வரலாற்று யதார்த்தம் மிக துல்லியமாக எமக்கு நிறுவியுள்ளது. ஒருபுறம் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சொந்தக் காதலைச் செய்ய முடியாத சமூக நிலையில் வாழ, மறுபுறம் இது விபச்சாரமாகச் சீரழிந்துள்ளது.


இன்று இந்தப் போக்கு மேற்கு நாட்டுக்கும், மூன்றாம் உலக நாட்டுக்கும் இடையில் இரு வேறுபட்ட நிலையில் இவை பிரதிபலிக்கின்றன. மேற்கு நாட்டில் யாரும் இன்று காதலிக்கச் சுதந்திரம் வேண்டும் எனக் கோருவதில்லை. ஏனெனின் எல்லோரும் காதல் செய்வது என்பது தடையற்றதாக உள்ளதால் அது கற்பிதமாகிவிட்டது. ஆனால் காதலிக்க சுதந்திரம் என்பதற்குப் பதில் "சுதந்திரமாகக் காதல் செய்கின்றோம்" என்பதன் ஊடாக விபச்சாரத்தைச் சுதந்திரத்தின் பின் சமூகமயமாக்குகின்றனர்.


"காதல் சுதந்திரம்" என்பது "சுதந்திரமாகக் காதல் செய்கின்றோம்" என்ற இரு வேறுபட்ட தளங்களில் லெனின் ஆய்வுகள் மிகவும் துல்லியமாக்கி உள்ளது. பாட்டாளி வர்க்கக் கோரிக்கைகளை முதன்மைப்படுத்த மறுத்து, முதலாளித்துவக் கோரிக்கைகளை முன்னிறுத்தி பெண்களால் வென்று எடுக்கப்பட்ட ~காதல் சுதந்திரம்| (காதலிக்கச் சுதந்திரம் என்ற கோஷ எல்லைக்குள்), அதன் சரியான அர்த்தத்தில் இருந்து முதலாளித்துவ வர்க்கம் "சுதந்திரமான காதல் செய்வதாகக்" கூறுவதன் மூலம் விபச்சாரச் சமூகமயமாதலை நோக்கி நகர்ந்தனர்.


இது மூன்றாம் உலக நாட்டில் "காதலிக்கச் சுதந்திரம்" என்ற கோரிக்கையும், "சுதந்திரமாகக் காதல் செய்வதாகக்" கூறும் கோரிக்கையும் யதார்த்தத்தில் அக்கம்பக்கமாக உள்ளது. லெனின் விளக்கிய இரு பிளவுபட்ட காதல் சுதந்திரக் கோரிக்கை முதலாளித்துவப் பிரிவின் முன், ஏகாதிபத்தியப் பண்பாட்டால் உட்புகும் "சுதந்திரமாகக் காதல் செய்ய" என்ற கோரிக்கையின் நனவு கொண்ட யதார்த்தமாக்கியுள்ளது.


மறுபுறம் ஒடுக்கப்பட்ட பெண்கள், பாட்டாளி பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பாட்டாளி வர்க்க ஆண்கள் காதல் உரிமைக்காகப் போராட வேண்டியுள்ளது. சாதி கடந்த காதலைச் சாதிக்க, பொருளாதார ஏற்றத் தாழ்வு கடந்த காதலைச் சாதிக்க, மதம் கடந்த காதலைச் சாதிக்க, ஆணாதிக்கம் கடந்த காதலைச் சாதிக்க, நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த காதலைச் சாதிக்க, ஏகாதிபத்தியப் பண்பாட்டுச் சீரழிவுக்கு எதிரான காதலைச் சாதிக்க, இயற்கையின் உறவு காதலைச் சாதிக்க, சட்டத்தில் இருந்த காதலைச் சாதிக்க என எல்லாத்தளங்களிலும் காதல் உரிமையைக் கோரி போராட வேண்டியுள்ளது. இந்தக் காதலுக்கு எதிரான ~சுதந்திரமான காதல்| செய்வதில் உள்ள விபச்சாரத்தை எதிர்த்து, காதல் உரிமையைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. இது வர்க்கப் போராட்டத்தின் அங்கமாக உள்ளது. இது ~சுதந்திரமான காதல்| மற்றும் ~சுதந்திரமாகக் காதல் செய்வதாக|க் கூறும் எல்லா விபச்சாரங்களையும் எதிர்த்துக் காதல் உரிமையை இந்தப் பொருளாதார அமைப்பின் மனிதச் சிதைவுகளின் மேல் நிறுவவேண்டும்.


காதல் என்பது அடிப்படையில் ஒருதலைப்பட்சமாக ஆணாதிக்க அமைப்பில் சுதந்திரம் இழந்த பெண்ணின் காதலாகவே இறுதியில் விளைவாகின்றது. திருமணத்தின் பின் எப்போதும் பெண் காதலிப்பவளாக இருக்கின்றாள். ஆனால் ஆண் அப்படியல்ல. சாதி நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, மத நெருக்கடி போன்றவற்றில் காதலுக்காகப் போராடுகின்ற போதும் கூட காதல் நீடிப்பதில்லை. இம்முரண்பாடு ஏதாவது ஒருவிதத்தில் காதல் சமரசம் காண்கின்ற போது (இது திருமணத்தில் முடிகின்ற போது), காதல் மீண்டும் பிற்போக்காக மாறிவிடுகின்றது.


காதல் என்பது வர்க்கச் சமுதாயத்தில் முற்போக்கான பாத்திரத்தைத் தொடர வேண்டும் எனின், தொடர்ச்சியாகக் குறித்த முரண்பாட்டைப் புரட்சிகரமான வழியில் தொடர்வதில் சார்ந்துள்ளது. ஆணும் பெண்ணும் தமது காதலின் போதோ அல்லது திருமணத்தின் பின் தொடர்கின்ற கள்ளக் காதலின் போதோ அல்லது உயிர் முதல் அனைத்தையும் பணயம் வைத்துப் போராடுகின்ற போதோ, இருக்கின்ற உயர்ந்த பட்சக் காதலின் போராடும் தன்மை நீடித்திருப்பதுக்கான புரட்சிகரமான வர்க்கப் போராட்டம், காதலில் தொடர்வதைக் குறித்து நிற்கின்றது. வர்க்கப் போராட்டத்தில், புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தில் தொடர்ந்து கலாச்சாரப் புரட்சி எதன் அடிப்படையில் நிபந்தனையானதோ, அது காதலிலும் பொருந்தும். காதல் சுதந்திரம் திருமணம் வரையிலுமான உரிமை என்ற கண்ணோட்டம் ஆணாதிக்கத் தன்மை கொண்டவை. இது பெண்ணை மட்டும் காதலிக்கக் கோருவதாகும்.


ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் சோரம் போதலையும் சரி, கள்ளக் காதலையும் சரி அங்கு ஆண் அதிகளவுக்கு இறுக்கமாகப் பெண்ணைக் கட்டுப்படுத்துவது காதலின் ஒற்றைத் தன்மையில் நிகழ்கின்றது. அதிகமான சுதந்திரம் அதிகமான விசுவாசத்தை வழங்குகின்றது. அதிகமான கட்டுப்பாடு அதிகமான சோரத்தைக் கோருகின்றது. இது நேர் விகிதத்தில் இயங்கும் தன்மை ஆணாதிக்கச் சமுதாயத்தின் பொதுத்தன்மையாகும். இது மொத்த வேறுபட்டச் சமுதாயங்களின் பொதுத் தன்மையில் கூட பாரிய வேறுபாடுகளை சமுதாய ரீதியில் வெளிப்படுத்துகின்றது.


அதிக சுதந்திரம் அதிகமாக காதலிப்பதைக் கோருகின்றது. கட்டுப்பாடு காதலிப்பதை மறுக்கின்றது. கட்டுப்பாடு அதிகரிக்க கள்ளத்தனமான காதலின் தன்மை உறுதியுடன் வளர்கின்றது. இது திருமணத்தின் விபச்சாரத்தை நிர்வாணமாக்குகின்றது. இந்தச் சுதந்திரம் சமுதாயத்தின் பொதுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. சமுதாயத்தை மீறிய கட்டற்ற சுதந்திரம் என்பது மற்றவனுக்கு மறுப்பதை அடிப்படையாக்குகின்றது. சுதந்திரம் என்பது மறுப்பதில் இருந்தல்லவா உருவாகின்றது.


ஐரோப்பியப் பெண்கள் "கட்டற்ற சுதந்திரத்தை" அடைந்து விட்டார்கள் என்ற விவாதங்களைப் பார்ப்போம். "பெண்ணியத்தின் ஒழுக்கம் என்ன?"41 என கேள்வி எழுப்பிய சங்கமனின் ஓர் அலசல் வெளியாகியிருந்தது. பெண் விடுதலை தொடர்பாக டிஷ்கோ பண்பாடு கலாச்சாரமான ~கட்டற்ற சுதந்திரத்தை| முன்வைத்து அதை நிறுவ தனது வக்கிரமான மார்க்சிய எதிர்ப்புடன் கூடிய கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் பொழிந்து தள்ளியுள்ளார் சங்கமன். இதைவேறு அலசல் என்று போட்டதன் மூலம் ஊரில் திண்ணையில் கூடி மற்றவர்களைப் பற்றி இல்லாத பொல்லாததை இட்டுக் கட்டி அலசும் வம்பைத்தான் மீள ஒரு முறை ஆணாதிக்கத்துக்காகச் செய்துள்ளார். இந்த அரசியல் வம்பளப்பு அலசல்களைப் பார்ப்போம்.


"மார்க்சியம் என்ன சொல்லுகிறது? அதுவும் ஆணாதிக்க முனைப்புக் கொண்ட தத்துவம்தான். அது மட்டுமல்ல மார்க்ஸ் மாதிரி தன் மனைவியைச் சுரண்டியவர் வேறுயாரும் இருக்க முடியாது. முழுநேரத்தையும் பிரிட்டீஷ் மிய+சியத்தில் கழித்த மார்க்ஸ், தன் உடல் இச்சையைத் தீர்ப்பதற்காகத்தான் மனைவியிடம் வந்தார். அவளைத் தொடர்ந்து கர்ப்பவதியாக்கினார். வறுமையில் வாடவிட்டார். அதுமட்டுமல்ல, தன் உடல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஒரு வைப்பாட்டியை வேறு வைத்துக்கொண்டார். தன்மூலம் வைப்பாட்டிக்கு பிறந்த குழந்தைக்குத் தான் தந்தை என ஏற்றுக்கொள்ள மறுத்தார். அப்படிப்பட்டவரின் தத்துவத்தில் பெண்களை ஆண்கள் சுரண்டுவது பற்றிய பேச்சை எதிர்பார்க்க முடியாது."41


- என்று எழுதும் சங்கமன் இதற்கான ஆதாரத்தைத் தரமுடியாத அரசியல் பேடித்தனம்தான் விசித்திரமானது. எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வக்கிரமாக மார்க்சியத்தின் மீது சேறடிக்க முனைகின்றார். சொந்தப் பெயரில் இவைகளை முன் வைக்க முடியாதவர்கள்தான், ஏகாதிபத்திய எச்சில்களை உறிஞ்சி உமிழும் இவர்கள் தான், பெண்ணினத்தின் முதல் எதிரியாகவும் சூறையாடும் ~சுதந்திரத்தின்| பின் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க முனையும் இன்றைய நுனிப்புல் அறிவு கொண்ட சதிகார நுண்ணறிவுப் பிரதிநிதிகளாகவும் இருக்கின்றனர். தமிழ் மண்ணில் அப்பாவிகளுக்கு மரணத்தண்டனை வழங்கிய இயக்கங்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் தமது அரசியலையும், தூய்மையையும் பாதுகாக்க எதையெல்லாம் செய்தனரோ, அதை எல்லாம் மார்க்சியத்துக்கு எதிராக மார்க்சியப் பெண்ணியத்துக்கு எதிராகச் செய்கின்றனர்.


மார்க்ஸ் ஆணாதிக்கவாதி எனக்காட்ட முன் வைக்கும் ஆதாரம், முழு நேரத்தையும் பிரிட்டீஷ் மியூசியத்தில் கழித்தவர் என்பதுதான். மார்க்சியம் எப்படி ஆணாதிக்கத் தத்துவம் என நிறுவமுடியாத முதலாளித்துவ விபச்சாரப் பேடித்தனம்தான் இது. மனைவியுடன் இச்சையைத் தீர்க்க மட்டும் வந்து போனவர். குடும்பத்தை ஏழ்மையில் விட்டு விட்டு ஆணாதிக்கச் சுகம் கண்டவர். இவைதான், மார்க்சியம் என்பது "ஆணாதிக்கத் தத்துவம்" என நிறுவ முன்வைத்த எடுகோள்கள். அருமையிலும் அருமையான பெண் விடுதலை தத்துவத்தை மார்க்சியத்துக்கு மாறான பெண்ணியமாக வம்பளப்பு அலசலுக்கு ஊடாகச் சொரிந்துள்ளார். இதைப் போன்று பலர் இன்று தம்மை இந்தக் கழிசடையுடன் இணைத்துக் கொள்கின்றனர்.


இவர்கள் மார்க்சைக் கொச்சைப்படுத்திக் கூறுவதைப் பார்த்தால், மனைவியை வறுமையில் வாடவிடாது வைத்திருப்பவர்களும், தான் உழைக்காது மற்றவர் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளித்துவவாதிகள் நாள் பூராகவும் மனைவியுடனும், சுதந்திரமான காதல் என்ற பெயரில் பல பெண்களுடனும் கொஞ்சிக் குலாவி சுகம் காணும் விபச்சாரத்தைச் செய்பவர்களும் ஆணாதிக்கவாதியில்லை பெண்விடுதலைவாதிகள் என்கின்றனர், மார்க்சியவாதிகள் அல்லாத பெண்ணிலைவாதிகள். எவ்வளவு விசுவாசமாக யாரைப் பாதுகாக்க முனைகின்றனர் எனில், மார்க்ஸ் யாரை எதிர்த்துத் தன் வாழ்நாள் எல்லாம் போராடினாரோ, அந்த கட்டற்ற சுதந்திர கொள்ளைக்காரர்களையே உண்மையான பெண்விடுதலைவாதிகள் என்று சத்தியம் செய்கின்றார்.
இந்தக் கனவான்கள் மட்டும் தான் உலகில் வறுமையின்றியும், மனைவியுடன் உழையாது மணிக்கணக்காகக் கொஞ்சிக் குலாவியும், பல பெண்களை வைப்பாட்டிகளாகவும், தேவையான போது நுகர்வுக்குப் பெண் குட்டிகளையும் சந்தோசமாக வைத்திருக்க முடிகின்றது. இங்கு, இது அரங்கேற சுதந்திரமான காதல் கட்டற்ற சுதந்திரமாக உள்ளது. இதை மறுப்பதையிட்டு தான் மார்க்ஸ் மீது ஆதாரமற்ற கொச்சைத்தனமான விமர்சனம் செய்து கேவலப்படுத்துகின்றனர்.


உலகில் மிக மோசமாக அடுத்த நேர உணவு என்ன எனத் தெரியாது 100 கோடிக்கு மேற்பட்ட மக்கள், இதிலும் பெரும்பான்மையாகப் பெண்கள் -சிறுவர் - சிறுமிகள் வறுமையில் வாடுகின்றனர். இந்தப் பிரிவு முதலாளிகளுக்காக நாள் பூராகவும் நேரக்கணக்கு இன்றி (இது 15-16 மணித்தியாலமாக உள்ளது. உழைத்து, உழைத்து களைத்துப் போன நிலையில், தன் நிலையிழந்து, கணவன் மனைவி கூடி வாழ தனிமையான இடம் கூட இன்றி, அவர்களை அறியாமல் அவர்களின் இயற்கையான உறவுகளைப் பார்த்து வக்கரித்து இரசிக்க, காத்து இருக்கும் ஆணாதிக்கப் பூர்சுவா போன்றவர்களுடைய நெருக்கடிகளுக்கும், பட்டினி பட்டாளங்களாக வாழும் இம்மனிதர்களின் அவலத்தினைப் போக்க போராடிய மார்க்ஸ், தனது நேரத்தை இதற்காக ஒதுக்கி வாழ்ந்த வாழ்க்கையையே ஆணாதிக்கம் கொண்டது என்று, மார்க்சியமல்லாத கோட்பாட்டாளர்கள் தமது வர்க்க இருத்தலுக்காகப் புறுபுறுக்கின்றனர். இதனூடாக வறுமையே பெண் ஒடுக்குமுறைகளுக்கும் காரணம் என்று அருமையான எடுகோளை முன்வைக்கின்றனர்.

 

உலகில் உள்ள வறுமைக்குக் காரணங்கள் உழைப்பு குறைவு, அதிக குழந்தைகள், கறுப்பு நிற மக்களின் அதிகரித்த இனப்பெருக்கம், வேலையின்மை, முதலாளியின் மேலுள்ள வரி, தொழிலாளரின் தொழிற்சங்கப் போராட்டங்கள், அதிக கூலி, அதிக நுகர்வு, சோம்பேறித்தனம், பெண் குழந்தைகளின் பிறப்பு....... என்று பலவற்றை முதலாளித்துவம் மற்றும் அதன் தத்துவ மேதைகளினதும், அதன் எடுபிடி அரசு பிரதிநிதிகளதும் கோட்பாடுகளாகும். அதையே அப்படியே, மார்க்ஸ்சுக்குப் பொருத்த முனையும் போது, மார்க்ஸ் உழைத்தது போதாது அல்லது தேவையற்ற சம்பளமில்லாத பிராக்கு பார்த்து மனைவியை வறுமையில் வாடவிட்டு ஆணாதிக்கச் சுகம் கண்டவர் என்ற காழ்ப்புணர்வுடன் சேறுவீசும் அருமைதான் அருமை!


கேவலமான கேடுகெட்ட பீ தின்னும் இந்தப் பன்றிகளின் இந்த வாதங்கள் எங்கு இருந்து வெளிவருகின்றன யாழ்ப்பாணத்து சுயநலம் பிடித்த குட்டி முதலாளித்துவக் கண்ணோட்டத்துடன் கூடி, அண்டிப்பிழைக்கும், சுரண்டும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் கைக்கூலித்தனத்தில் முனைப்பு பெற்று, ஊற்று எடுக்கின்றது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற காலத்தில் இளைஞர்கள் இயக்கத்திற்குச் சென்ற போது, பெற்றோர்களும் உறவினர்களும், அறிஞர் பெருமக்களும் இதை விட்டு விட்டு குடும்பத்தைப் பார்க்கும் வழியைப் பார் என்றார்கள். குடும்பத்துக்காக உழை என்றார்கள். தங்கை தங்கச்சிக்காக உழை, வயது போன பெற்றோரைப் பார் என்று பலவற்றைச் சுயநலத்துடன் கூடிய முதலாளித்துவப் பார்வையைத்தான் மார்க்சுக்கு ஒப்பிட்டுக் காட்டி, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான சுரண்டும் வர்க்க நலனில் முன்வைத்தே சேறடிக்கின்றனர்.


இதையே விடுதலைப்புலிகள் சிறப்பாக இயக்கங்களைத் தடை செய்யாதபோதும், சமூகத்தில் அக்கறை காட்டியோரைக் கைது செய்தபோதும, அரசியலில் ஈடுபட்டோரைக் கைதுசெய்த போதும், அதே வழியையே பிசகின்றி முன்வைத்தனர். விடுதலைப்புலிகள் ஒவ்வொரு கைதியிடமும் சொன்னார்கள் திருமணம் செய், வெளிநாடு போய் உழை என்றனர். இப்படி விடுதலைப் புலிகள் சொன்னதையே, சங்கமன் போன்றோர் விடுதலைப்புலிகளின் அதே அரசியலில் நின்று (இங்கு விடுதலைப்புலிகளின் அரசியல் மீது விமர்சனம் செய்வதில்லை.) மார்க்சுக்கு விடுதலைப்புலிகளின் பிழை கண்டு சேறடிக்கின்றனர்.


சமூக அரசியலைக் கைவிட, பெண்ணுடன் ஆணாதிக்கச் சுகம் கண்டு கொள், வெளிநாட்டில் உழைத்து பணத்தாசை பிடித்த ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாயத்தைப் பாதுகாத்து திரி என்று விடுதலைப்புலிகள் சொன்னார்கள். மார்க்சும் செய்து இருக்கவேண்டும் என்று சங்கமன் மறைமுகமாகக் கூறுகின்றார். விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் ஐரோப்பாவில் செயல்படுவதைப் பார்த்தால் விடுதலைப்புலிகள் தீர்க்கத் தரிசனம் மிக்கவர்கள் என்பதைக் காட்டுகின்றது. அதுபோல் சமூக நோக்கம் கொண்டு திரிந்தோர், அதே பாதையில் கோட்பாடுகளை, படைப்புகளை இன்று முன்வைப்பதைப் பார்க்கின்ற போது, தீர்க்கத் தரிசனமிக்க யாழ்ப்பாணத்து ஆணாதிக்க முதலாளித்துவப் பண்பாட்டைத் துல்லியமாக்குகின்றது. ஆகவே சங்கமன் போன்றோர் விரும்புவது இதைத்தான்.


மார்க்ஸ் செய்து இருக்கவேண்டியது எழுதுவதை விட்டு விட்டு, போராடுவதை விட்டுவிட்டு, இவர்களைப் போல் கைக்கூலியாக அல்லது தான் உண்டு தன் வேலை உண்டு என்று தன் பாட்டில் செம்மறி ஆடு போல் இருந்து இருக்க வேண்டும். இல்லையெனின் முதலாளித்துவச் சமுதாயத்தைப் பாதுகாக்க கோட்பாட்டு விளக்கம் கொடுத்து வறுமையில் இருந்து சுகபோகமாக விலகி, முதலாளித்துவக் குடிஜனத்தொகை (மக்கள்தொகை) விளக்கத்தின் படி வாழக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும்.


இன்று குழந்தை குறைவாகப் பிறந்தால், ஆணாதிக்கம் குறைவு என்ற நவீனத் தீவிரப் பெண்ணியல் ஆணாதிக்கக் கோட்பாட்டை, அன்று குடும்பக் கட்டுப்பாட்டுக் கோஷமாக (முழக்கமாக) முதலாளித்துவத் தத்துவம் மற்றும் அதன் எடுபிடி அறிஞர்கள் முன்வைத்ததைப் பிசகாது அமுல்படுத்தியிருக்க வேண்டும் என்பதே, இவர்களின் பெண்ணியல் தத்துவமாகும்.


மார்க்ஸ்சின் எழுத்துக்கள் குட்டி முதலாளித்துவப் பெண்ணியம் மற்றும் சுரண்டல் கோட்பாடுகளை அதன் கருவிலேயே அச்சுறுத்துவதால், மார்க்சுக்கு எப்படியாவது ஆணாதிக்க முத்திரை குத்தி, சேறு அடித்து, அவதூறு பொழிந்து விட தலைகீழாக நின்று நாய்வாலை நிமிர்த்திவிட முனைந்து நிற்கின்றார்.


இந்த இடத்தில் ஆண்- பெண் அவர் அவர் சுதந்திரத்தில் தலையிடாத நிலை வேண்டும் எனக் கோருவோர், மார்க்சுக்கும் அவர் மனைவி ஜென்னிக்கும் ஏன் இது பொருந்தாது? என விளக்குவதில்லை. மார்க்சின் சுதந்திரத்தைப் பறிக்கும் உரிமை அவரது மனைவிக்கும் சரி, வேறு யாருக்கும் சரி இல்லை என்பதை மறுத்து, சுதந்திரத்தை மார்க்சுக்கு மட்டும் மறுத்து முன்வைக்கும் முரண்பாடுகள் மார்க்சிய எதிர்ப்பு நிலையில் நின்று வைப்பவையே. இது எதை எமக்குக் காட்டுகின்றது? பாட்டாளி வர்க்கத்தையும், அதன் வர்க்கப் போராட்டத் தத்துவத்தையும், அதன் வரலாற்று நடைமுறையையும், அதன் யதார்த்த போராட்டத்தையும் புதைத்துவிட முயல்வதையே காட்டுகின்றது.


அடுத்து மார்க்சுக்கு வைப்பாட்டி இருந்தது எனவும், அப்பெண்ணின் குழந்தையை மார்க்ஸ் தன்னுடையது அல்ல என மறுத்தார் எனவும் அடுக்கடுக்கான அவதூறுகளை முன்வைத்து, மார்க்ஸ் ஆணாதிக்கவாதி என கேவலப்படுத்த முனைகின்றார். இது எங்கிருந்து? யார் மூலம் பெற்றார்? என்ற ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்ற எழுத்துப் பண்பைக் கூட இந்த ஏகாதிபத்திய நாய், வசதியாகத் தனது தேவையுடன் மறந்து போகின்றார்.


மார்க்ஸ் மார்க்சியத்தை நிறுவிப் போராடிய காலத்தில், அவரின் தத்துவத்தை எதிர்த்து எழுதி, போராடிய எதிரிகள் எல்லோரும் மார்க்ஸ் இறந்து விட்டார் என்று பலமுறை கூறி, உயிரோடு இருக்கும்போதே கொன்ற போது கூட, முன் வைக்கமுடியாத ஓர் அபாண்டமான குற்றச்சாட்டை இன்று சோடித்து தத்துவ விபச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. மார்க்சியத்தை நிறுவி 150 வருடங்கள் கடந்த மார்க்சியப் போராட்டமும், அதன் வரலாற்றுத் தலைவர்களும் இது போல் ஆயிரம் அவதூறுகளையும் சேறடிப்புகளையும் சந்தித்தனர், சந்திக்கின்றனர். ஆனால் மார்க்சியமும் அதன் தலைவர்களும் காலத்தைக் கடந்து ஒரு புரட்சிகரத் தத்துவமாக மீள, எல்லா வண்ண (வகையான) எதிரிகளையும் எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் நடைமுறைப் போராட்டத் தத்துவமாக நிமிர்ந்து நிற்பதால், எதிரிக்கு எஞ்சிய ஒரே தாக்குதல் வடிவம் கண்மண் தெரியாத அவதூறுதான் ஆகும்.


இந்த அவதூறு மார்க்சுக்கு மட்டும் வரலாற்றில் இட்டுக் கட்டியவையல்ல. லெனினுக்கு ஒரு கள்ளக்காதலி இருந்தாள் என்றும், மாவோ பல பெண்களுடன் உறவு வைத்து இருந்தவர் என்றும் தொடர்ந்த கட்டுக்கதைகள், அவதூறுகள் எல்லாம் முடிவற்றவைதான். ஸ்டாலின், காஸ்ட்ரோ பெண் கொடுமைக்காரர்கள் என்றும், ஸ்டாலின் தனது மகனை இரண்டாம் உலக யுத்தத்தில் போர் வீரனாக அனுப்பியபோது ஹிட்லர் கைது செய்து பேரம் பேசியபோது, ஸ்டாலின் தனது மகனுக்காக விட்டுக்கொடுக்க மறுத்தார். அதனால் தனது மகனை ஹிட்லர் கொலை செய்ய துணைபோனதாகவும், மாவோ தனது மகனைக் கொரிய யுத்தத்தில் ஈடுபடுத்தி, வீர மரணம் அடையவும் காரணமான இவர்கள், மனைவி - பிள்ளை - குடும்பப் பாசமற்ற ஆணாதிக்க அரக்கர்கள் என எல்லையில்லாத அவதூறுகளை, மார்க்சியத் தலைவர்களும் மார்க்சியத் தத்துவமும் சந்தித்தன, சந்திக்கின்றன.


வாழ்வையே போராட்டமாக, மகிழ்ச்சியாகக் கொண்டு போராடிய மார்க்சியத் தலைவர்கள் மீது ஏகாதிபத்தியச் சதியை, அதன் விசுவாச நாயாக வால் ஆட்டி, நக்கி மீளக் கக்கி, மீளவும் விழுங்கி விடத்தான் முடியும். ஆனால் அது ஏகாதிபத்தியம் போல் நாற்றத்தால் மட்டுமே நிறைந்தது.


மார்க்சியத் தலைவர்கள் தமது குழந்தைகளுக்கு என்று எந்தச் சலுகையையும் விசேடமாக மற்றவர்களை விட வழங்கியதில்லை. நாட்டில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும், தாயும் தந்தையாகவும், ஒவ்வொரு மனிதனுக்கும் சக மனிதனாகவும் இருந்தனர். எவை எல்லாம் சமூகக் கடமையாக இருந்ததோ, அவை எல்லாம் தமது குழந்தைகளுக்கும் பொதுவாக்கி, எந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவப் பிரிவுகளும் செய்யமுடியாததைச் செய்து, மாபெரும் ஜனநாயக மனிதர்களாக உயர்ந்து நிற்கின்றனர். அத்துடன் குடும்பத்தை மார்க்சியப் பெண்ணியல் நோக்கில், நடைமுறையில் உடைத்து உண்மையாக வழிகாட்டி, சொந்த மகனையே போரில் இழந்தது மட்டுமின்றி, சொத்து வாரிசு இன்றி, சொத்தும் இன்றி, வாழ்ந்து காட்டியவர்கள். இன்று முதலாளித்துவப் பெண்ணியல் வாதிகள் ஆணில் இருந்தும், குழந்தைகளில் இருந்தும் விலகி வாழ்வதே பெண்ணியம் என்று கூறுவதற்கு எதிரிடையாக, அவர்களுடன் வாழ்ந்து முதலாளித்துவக் குடும்பக் கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளைத் தகர்த்து எறிந்தனர். இதனால்தான் முதலாளித்துவக் குடும்ப உறவுகளைப் பாசம் என்றும் பலவாகக் கூறி சேறடிக்க, முதலாளித்துவ ஆணாதிக்கக் கோட்பாட்டில் ஒளிந்து நின்று பெண்ணிய வேஷம் போடுகின்றனர்.


"உண்மை மார்க்சியம் பற்றி எத்தனை எத்தனையோ வியாக்கியானங்களும் வெட்டுக்களும், ஒட்டுக்களும் நடந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் பெண்ணியமும் மார்க்சியத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதனால் மார்க்சியமும் பலமுறும். அத்தோடு பெண்ணியமும் பலமுறும்."41


மார்க்சியத்தில் எத்தனையோ வியாக்கியானங்கள் - வெட்டுக்கள் - ஒட்டுக்கள் நடக்கின்றன என்று கூறி, அதை உயர்த்துவதன் மூலம் ஏகாதிபத்தியக் கோட்பாடுகளை மார்க்சியமாக முன் வைக்கின்றார். மார்க்சியம் என்பது என்ன? தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் இருந்து பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை வந்தடையும் என்பதை நிறுவிய மார்க்ஸ், அதை நோக்கிய வர்க்கப் போராட்டத்தை வழிகாட்டிய, மார்க்சின் பெயரினால் ஆன தத்துவம்தான் மார்க்சியம். மார்க்சையும் அவர் உருவாக்கிய கோட்பாட்டையும் மறுத்த தத்துவம், மார்க்சியமே அல்ல. மார்க்சுக்கு யாரும் திருத்தமோ, சேர்ப்போ, ஒட்டோ செய்யமுடியாது. மீறி அப்படி செய்வதும் பின் அதை மார்க்சியம் என்று அழைக்கவும் முடியாது. அது வேறு ஒரு கோட்பாடாகத்தான் இருக்கமுடியும்.


மார்க்சியத்தை அதாவது, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை வந்தடையும் மார்க்சின் வர்க்கப் போராட்ட வழியை மேலும் வளர்த்து எடுக்க முடியுமே ஒழிய மார்க்சின் வர்க்க அடிப்படையிலான சர்வாதிகாரக் கோட்பாட்டை நிராகரித்து அல்ல. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார அடிப்படைக் கோட்பாட்டின் மேல் நின்றுதான், எல்லாவிதமான தத்துவத்திற்கும், செயற்தளத்திற்கும், வடிவங்களுக்கும், நடைமுறைகளுக்கும் வளர்த்து எடுப்பது பொருந்தும். விமானம் பறக்கும் தத்துவத்தை விரும்பிய நேரத்தில் யாரும் வெட்டிக் கொத்தி திருத்த முடியும் எனின், பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் பயணிப்போர் உயிருடன் பறக்கமுடியாது. அது மட்டுமன்றி விமானப் பறப்பும் நிகழமுடியாது. ஆகவே விமானப்பறப்பு தத்துவத்தை வளர்க்கலாமே ஒழிய, நாம் விரும்பியபடி வெட்டி கொத்தி திருத்த முடியாது. அது போல்தான் மார்க்சியமும். ஒருவரின் பெயரில் யாரும் விரும்பியவாறு வெட்டி ஒட்டுதல் மூலமோ, அதன் பெயரிலோ, அவர் பெயரிலோ, எதையும் எழுதவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாது அல்லவா? அதுபோல் மார்க்சியத்துக்கோ அல்லது கட்டுரைகளுக்கோ, நடைமுறைகளுக்கோ வெட்டு ஒட்டு வியாக்கியானம் செய்து வெளியிட முடியாது அல்லவா?


இங்கு முன்வைக்கும் வெட்டு ஒட்டு வியாக்கியானங்கள் மார்க்சியத்திற்குள் அல்ல, அதற்கு வெளியில்தான் நடக்கின்றது. இது மார்க்சியத்தின் பெயரில் ஏகாதிபத்தியச் சாக்கடைகளை மார்க்சியத்துக்குள் புகுத்துவதுதான் இவர்களின் பிரயத்தனம். வரலாறு முழுக்க திரிபுவாதமும், சந்தர்ப்பவாதமும், கைக்கூலித்தனமும் இதன்வழியில்தான் சுரண்டும் வர்க்கத்துடன் கைகோர்த்து, தொழிலாளர் வர்க்கம் மீது அடக்குமுறைகளைக் கையாண்டது. மார்க்சின் தத்துவம் ஆணாதிக்கம் என்றபின், எப்படி அதற்கு வெட்டு ஒட்டு செய்து ஆணாதிக்கத்தைப் பெண்ணியமாக்க முடியும். அதை இப்படிச் செய்வதை விட செய்பவரின் சொந்தத் தத்துவமாக முன்வைக்கலாமே. அதைவிட்டுவிட்டு மார்க்சை விபச்சாரத்துக்கு அழைப்பதும், பின்னால் பலாத்காரம் செய்வதும் ஆணாதிக்கமாகும்.


பெண்ணியவாதிகள் இன்று ஒரு முக்கிய சக்தியாகத் திகழத் தொடங்கியுள்ளார்கள் என சங்கமனுடன் பலர் அடித்து சத்தியம் செய்கின்றனர். எங்கே ஐயா? கொஞ்சம் விலாவாரியாக அலசி ஆதாரம் காட்டியிருக்கலாமே. கொழும்பிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டை இழந்த பிரதேசங்களிலும் உள்ள 90 சதவீதமான பெண்ணிலைவாதிகள், இன்று தன்னார்வக் குழுவின் சம்பளப் பட்டியலில் இயங்கி ஏகாதிபத்தியத் தலையீட்டுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் காவடி எடுக்கின்றனர். இதில் இருந்து ஏகாதிபத்தியப் பெண்ணியத்தை முன்னிறுத்துகின்றனர். இதன் மூலம் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கத்தை எதிர்த்த ஏகாதிபத்திய விபச்சாரத்தை ஜனநாயகமாக்குகின்றனர். இது எல்லா மூன்றாம் உலகநாடுகளின் பொதுவான நிலை. ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்கான பெண்ணியப் போராட்டம் என்பது இல்லை என்ற அளவுக்கு, வர்க்கப் போராட்டச் சிதைவுடன் சிதைந்து போய் உள்ளது.


இன்று முதலாளித்துவப் பெண்ணியவாதமும், ஏகாதிபத்தியப் பெண்ணியவாதமும் கோட்பாடு அற்ற கலவை புலம்பலும் (இங்கு கோட்பாடு இல்லை என அவர்கள் கூறிக்கொள்வர். ஆனால் அதன் பின் ஒரு கோட்பாடு ஒட்டிக் கொண்டுதான் உள்ளது.) தான் பெண்ணியவாதமாக உள்ளது. இதைத்தான், பெண்ணியவாதமாகக் காட்டப்படுகின்றது. இது உண்மையில் ஆணாதிக்கமாக உள்ளதுடன் ஆணாதிக்கத்தைத் தக்க வைக்கும் கோட்பாடாகும். இங்கு பெண்ணியவாதம் என்று எதை எடுத்து முன்வைக்கின்றார் எனப் பார்ப்போம்.


"கட்டற்ற சுதந்திரம் ஆண்-பெண் இருபாலரையும் ஒருவரோடு ஒருவர் சேர்த்து வைக்கும் ஒழுக்கக் கோட்பாடாக எதிர்காலத்தில் இதுவே இருக்கும்"41 என கட்டற்ற சமூகம் பற்றி பேசிய படி அதற்கு உதாரணமாக "சோசலிச நாடாக இருந்த பல இடங்களிலேயே மார்க்சியக் கருத்துக்கள் வலுவிழந்து போயிருந்தாலும் உலகெங்கும் பெண்ணியல் நோக்கு சாதகமான நிலைகளே உருவாகி வருகின்றன. இப்போது மேற்கில் குடும்பம் என்ற பெயரில் பெண்களைக் கட்டிவைத்த கட்டுக்கள் அறுபடுகின்றன. அங்கு பெண்களுக்கான தொழில் வசதிகள், விவாகரத்து முறைகள், கல்வி, ஒரு பாலுறவு போன்றவை எல்லாம் அவளை ஆணாதிக்கம் விரித்த தளைகளில் இருந்தெல்லாம் விடுதலை அளித்துள்ளன."41


ஐரோப்பாவில் பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது என பிரகடனம் செய்கின்றனர். இவை பெண் விடுதலையை வழங்கிவிடுமா? பால் போச்சியில் (புட்டியில்) பால் சூப்பும் (குடிக்கும்) குழந்தைக்கும் தெரியும் இவை பெண் விடுதலையல்ல என்று ஆணாதிக்கவாதிகள் தமது ஆணாதிக்கச் செயல்பாட்டைத் தக்கவைக்க, ஆணாதிக்க எல்லைக்குள் வழங்கிய சில சுரண்டலுக்குச் சாதகமான சில முதலாளித்துவ ஜனநாயகச் சீர்திருத்த ஆணாதிக்கச் சலுகைகள் தான் இவை.


அதாவது வாக்கு அளிக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருந்தவனுக்கு வாக்கு அளிக்கும் உரிமை கிடைத்தவுடன் அவன் சுதந்திர மனிதனாக மாறிவிடுவானா? இல்லை ஒருக்காலும் இல்லை. வாக்குரிமை பெண்களின் அங்கீகாரத்துடன் பங்காளியாகி ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கும் உறுப்பாகின்றது. பெண்கள் ஆண்களைப் போல் எல்லாவற்றிலும் ஈடுபட உரிமை வேண்டும் என போராடும் ஜனநாயகக் கோரிக்கை பெண் விடுதலையாகிவிடாது. மாறாக ஆணாதிக்க எல்லையை நோக்கி பெண்ணைத் தரம்தாழ்த்த, சுரண்டல் அமைப்பை நோக்கி கோருவதாகும். ஆண்களை பெண்ணுக்கு மேலாகத் (இணையாக) தரம் உயர்த்துவதற்குப் பதில், பெண்ணை ஆணை நோக்கி தரம் தாழ்த்தக் கோரும் (இதைப் பெண்கள் தரம் உயர்த்த என புரிந்து கொள்கின்றனர்.) பெண்ணியம், எவ்வளவுதான் ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக இருந்தாலும் அது ஆணைப் போல் கோரும் அந்த எல்லைக்குள் ஆணாதிக்கம்தான் ஆகும்.


பொருளாதாரப் பலத்தைப் பெண் அடைந்தால் பெண் விடுதலை அடைந்து விடுவாளா எனின் இல்லை. மார்க்சியம் இப்படி கூறியதாகவும் சோசலிச நாடுகளில் இது பெண்ணை விடுவிக்கவில்லை என்றும் பல வியாக்கியானங்களை முன்வைக்கின்றனர். அதே நேரம் முதலாளித்துவ நாடுகளில் பெண் பொருளாதாரப் பலம் பெற்றாள் எனில், சுதந்திரமாகி விடுவாள், விட்டாள் எனவும் விளக்குகின்றனர். இது பற்றிய விளக்கத்தை இந்த நூலின் ஆரம்பத்தில் விரிவாக விளக்கியுள்ளேன். முதலாளித்துவப் பொருளாதாரச் சுதந்திரம் பெண்ணைத் தனிமனிதச் சுதந்திரச் சுரண்டல் அமைப்பின் பிரதிநிதியாக்கி, கூட்டுச் சமூகக் கோரிக்கைக்குப் பதில் தனிமனித ஒற்றைச் சமுதாயத்தின் பிரதிநிதியாக மாற்றுகின்றது. இங்கு பெண் பொருளாதாரச் சுதந்திரத்தின் ஊடாக ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பண்டமாகி விபச்சார நிலைக்குத் தரம் தாழ்த்தப்பட்டுள்ளாள். அத்துடன் பெண்ணை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஆணாதிக்கம் கொண்டிருந்த உறவு தகர்ந்த நிலையில், பெண் தன்னைத்தான் விற்கும் நிலைக்கும், ஆணை வாங்கும் நிலைக்கும் ஆணாதிக்கமாகத் தரம் தாழ்ந்துள்ளாள்.


இன்று மேற்கு நாடுகளில் என்ன நடக்கின்றது? குடும்பம் எப்படி சிதைகின்றது? என்பதை அறிவுப்பூர்வமாக ஆராய்வோம்.


மேற்கு நாட்டுக் குடும்பங்களின் சிதைவுகள் என்பது ஒற்றைப் பொருளாதாரச் சுதந்திரமான சூறையாடும் ஜனநாயகத் தனியுடைமையிலேயே விவாகரத்து நடக்கின்றது. சமூகம் எப்படி குலங்களாக, பின் கூட்டுக் குடும்பமாக, பின் குடும்பமாகச் சிதைந்ததோ, அதே திசையில் தனி நபராகச் சிதைகின்றனர். சொத்துரிமை (கூலி) ஆணுக்கு மட்டும் என இருந்து, இன்று பெண்ணிடமும் பங்கிடப்படும் நிகழ்வின் (இது வரையறுக்கபட்ட சுரண்டல் எல்லைக்கு உட்பட்டுக் கூலியாகவும், மூலதனமாகவும் என இரு போக்கில்) தொடர்ச்சியில் குடும்பம் சிதைந்து, தனிநபர் தத்தம் சொத்துரிமை பத்திரத்தை நுகர்வுக் கண்ணோட்டத்தில் கோருகின்றனர். அதாவது இது சொத்துரிமை என்ற தனியுடைமைக் கண்ணோட்டத்தில், இதை அடிப்படை ஜனநாயகமாகக் கொண்ட தளத்தில் நடக்கின்றது.


ஆண்-பெண்-பிள்ளை-பெற்றோர் என அனைத்துத் தளங்களிலும் தனிச் சொத்துரிமையின் கோரமான விவகாரத்தில்தான் குடும்பம் சிதைகின்றது. இது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்குள்ளும் தொற்றியுள்ளது. இங்கு இந்தக் குடும்பச் சிதைவுகள் ஆரோக்கியமாக அல்ல, வரலாற்றின் தனிச் சொத்துரிமையின் விவகாரத்தில் அவலட்சணமாகச் சிதைகின்றன. கூட்டுவாழ்வு கூட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பல தளங்களில் குடும்பச் சிதைவு மறுதலிக்கின்றது. இந்தச் சிதைவு என்ன விளைவைக் கொடுக்கின்றது என்பதை ஆராய்வோம்.
இது ஆண்-பெண் உறவில் விபச்சாரக் கலாச்சாரத்தை நடை முறையாக்கியுள்ளது. மேற்குநாட்டுச் சமூகத்தின் உடல் உறவாக்கம் விபச்சாரத் தன்மைக்குள் மெதுவாக நகர்கின்றது. இங்கு ஆண் - பெண் பொதுவாக இருந்து வரும் விபச்சாரத் தன்மையையோ, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தையோ அல்லது இணைவையோ குறித்து இது சொல்லப்படவில்லை. மாறாகக் காணப்படும் ஒருதாரமணத்தில் கூட முன்பு இருந்த முதலாளித்துவக் காதல், அன்பு, பாசம் ஆகியவை காணாமல் போய் அதனிடத்தில் வாங்குவதும் விற்பதுமாக நுகர்வுப் பண்பாகி, புணர்ச்சி - விபச்சார நிலைக்குத் தரம் தாழ்ந்துள்ளது.


ஆண் பெண்ணுக்கு இடையிலான இயல்பான உடல் உறவு உணர்ச்சிகள், நுகர்வின் உச்சக் கோரிக்கையால், இன்று மேற்கு நாடுகளில் இயல்பாகத் தீர்த்துக் கொள்ளும் வழி அடைபட்டு, தீர்க்கப்பட முடியாத வகையில் பிளந்து போயுள்ளது.


முன்பு இருந்த, இருக்கின்ற ஆணாதிக்கக் குடும்ப அமைப்புக்குள் குறைந்தபட்சம் பரஸ்பர ஆணாதிக்கச் சுரண்டல் உடன் இருந்த ஆண்- பெண் உணர்ச்சியை (இது மென்மையாகவும் - கொடூரமாகவும்) தீர்க்கும் வழி இன்று அடைபட்டு இல்லாது போகும் நிலை என்பது, மறுதளத்தில் முன்பை விட மிக மோசமாக ஆணாதிக்கப் புணர்ச்சி வக்கிரமான விகாரமாக மாறி உள்ளது.


இன்று சமூகத்தின் பெரும்பகுதியினர் விபச்சாரிகளை நாடிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. ஒருபுறத்தில் வீதி விபச்சாரிகளை நாடிச்செல்லும் அதேநேரம், மறுபுறத்தில் ஒருவரையொருவர் மாற்றிக் (மனைவிகளை மாற்றிக்) கொள்வதுடன், இன்று டிஸ்கோ உடனடியானப் போதை விபச்சார இடமாகவும், "கட்டற்ற சுதந்திரத்தின்"41 மையமாகவும் மாறியுள்ளது. இந்தப் பண்பாட்டைத் தான் சமூகத் தன்மையாக மாற்றவும், சிதைக்கவும் எல்லா செய்தி ஊடகங்களும், மக்கள் தொடர்பு ஊடகங்களும் சூறையாடும் நுகர்வுச் சந்தைத் தளத்தில் தீவிரமாக முனைகின்றன. இதுதான் "கட்டற்ற சுதந்திரத்தின்" மையமாக உள்ளது.


டிஸ்கோவில் என்ன நடக்கிறது? ஒளி மங்கிய இருளில், மெய்மறந்த போதையில், மெய்மறந்த இசையில், சுயநிலை இழந்த சுதந்திர ஜனநாயகத்தில் சுதந்திரக் காதல், சுதந்திரப் பண்பாடு, சுதந்திரக் கலாச்சாரம் என அனைத்தும் ~கட்டற்ற சுதந்திரத்தில்| உற்பத்தியாகி சுதந்திர விபச்சாரமாகச் சிதைகின்றது. அதாவது, பாலியல் வக்கிரத்துக்குள் சிக்கிக் கொண்டோர்களுடைய, சிதைந்த குடும்பத்தின் பிரதிநிதிகளுடைய பாலியல் உணர்ச்சியைத் தீர்க்கும் மையமாக டிஸ்கோ உள்ளது. இது, நவீன டிஸ்கோ விபச்சார விடுதிகளில் மெய்மறந்த போதையில், மெய்மறந்த இசையில் அரங்கேறுகின்றது.


அதாவது, விபச்சாரத்தை விட்டால், சீரழிவு டிஸ்கோ கலாச்சாரத்தை விட்டால், குடும்பங்கள் சிதைந்துள்ள சமூகத்திற்கு வேறு தீர்வு "கட்டற்ற சுதந்திரத்துக்கு" வெளியில் கிடையாது. இது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது.


மனித உறவுகள் மலர வேண்டியதற்குப் பதில் தனிச்சொத்துரிமையின் பிளவுகள் சமூகத்தில் வீங்கிப் போய் வெம்பிப் போய் உள்ளது. அதாவது இந்தியா அனுசரணையுடன் ஈழ இயக்கங்கள் வீங்கி வெம்பியது போல், குடும்பச் சிதைவுகள் வெம்பிப் போய் உள்ளன.


சாதாரணமாக ஆண் - பெண் என்ற குடும்பத்திற்கு வெளியில் (இது திருமணம் செய்தாலும், சேர்ந்து வாழ்ந்தாலும்) உள்ளவர்கள் தனிமரங்களாக, காய்ந்து, திசையறியாது தடுமாறுகின்றனர். இச்சமூகத்தின் முன் உள்ள ஒரே தீர்வு விபச்சாரமும் போதையேறிய மயக்கமும் தான். இதுதான் ஒரே முடிவாக உள்ளது. இதைத்தான் பெண்விடுதலை, கட்டற்ற சுதந்திரம் எனப் போற்றுகின்றனர், ஏகாதிபத்திய ஆணாதிக்கப் பெண்ணியக் கலாச்சாரக் காவடிகள்.


கட்டற்ற சுதந்திரம் இது எப்படி இருக்க முடியும்? சமூகத்தில் இருந்தபடி, இந்தப் பூமியில் இருந்தபடி ஒரு மனிதன் தனியான, சுதந்திரமான, மனிதனாக அதுவும் கட்டற்று எப்படி இருக்க முடியும்?


பூமியில் ஒரு மனிதன் இயற்கைக்கு வெளியில் சுதந்திரமாகக் "கட்டற்ற சுதந்திரத்துடன்"41 எப்படி வாழமுடியாதோ, அதே போல் மனிதச் சமூகத்துக்குள் இருந்தபடி "கட்டற்ற சுதந்திரத்துடன்"41 சமூகத்துக்கு வெளியில் இருக்க முடியாது.


ஒவ்வொரு தனி மனிதனுக்கும், மனிதச் சமூகத்துக்கும் இயற்கைக்கு உட்பட்ட சுதந்திரம் தான் இருக்க முடியும். அதற்கு உட்பட மனித ஒழுக்கம்தான் இருக்கும். இது ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானதே ஒழிய வேறுபட்டதல்ல.


உலகில் எல்லாம் ஒழுங்குக்கு உட்பட்டது. வான்வெளி, நட்சத்திரங்கள், சூரியன், பூமி, உடல் இயக்கம், இயற்கை என அனைத்துப் பொருட்களும் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டன. இந்த ஒழுங்கு வெளியில் சுதந்திரம் என்பது பொய்யானது, கற்பனையானது. ஒழுங்குக்கு உட்பட்ட சுதந்திரம் தான் உண்டு.


சுதந்திரமான மனிதன், சுதந்திரமான காதல் என அனைத்தும் உண்மையில் பூர்சுவா கண்ணோட்டத்தின் கனவுக் கோட்பாடுகளே. அத்துடன் இது முதலாளித்துவப் பிரிவுகளின் கோட்பாடுமாகும. கட்டற்ற சுதந்திரத்தில் ஆண்-பெண் என்ன நிலையில் உள்ளனர்? என்பதற்குக் குடும்ப அமைப்பு பற்றி அன்று ஏங்கெல்ஸ் கூறிய கூற்று இன்று இரண்டிற்கும் பொதுவானதாக உள்ளது. அதைப் பார்ப்போம்.


"இலக்கணத்தில் இரண்டு எதிர் மறைகள் உடன்பட்டு ஒரு பொருளாவது போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னெறி ஆகின்றன"42 என்றார் ஏங்கெல்ஸ். பாலியலில் ஊக்கம் பெறும் விபச்சாரப் பண்பாடு, சூறையாடும் பொருளாதாரத்தில் ஊக்கம் பெறும் நுகர்வு வேட்கை என்ற எதிர்மறைகள் எப்படி பெண்ணியமாகவும் ஜனநாயகமாகவும் மனிதச் சுதந்திர நன்னெறி ஒழுக்கமாக மாறியதோ அதே போல் பலதுறைகளுக்குள் இது நடக்கின்றது. இது இன்று கட்டற்ற சுதந்திரமான குடும்பச் சிதைவுக்குள் ஆழமாக, விகாரமாக மாறியுள்ளது. சுதந்திரமான கட்டற்ற காதல் இருக்கவே முடியாது. சமூகப் பொருளாதார நுகர்வு விபச்சார எல்லைக்குள் தான் ஒவ்வொரு காதலும் - சுதந்திரமும் இருக்கும், இருக்க முடியும். இதற்கு வெளியில் இருப்பது இல்லை. மனித வாழ்க்கைப் போராட்டம் தான் மனித இருப்பின் இணைப்பின் மையங்களாகும். மனிதப் போராட்டத்திற்கு வெளியில் சுதந்திரமான இயக்கம் என்பது பூர்சுவா (முதலாளித்துவ) இயங்கியல் மறுப்பு கண்ணோட்டத்தைக் கோருவதேயாகும்.


உலகப் பொருளாதாரம் உலகமயமாதலை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து துவம்சம் செய்யும் போது, தேசியப் பொருளாதாரம் கட்டுடைக்கப்பட்டு கட்டற்ற சுதந்திரத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் தமது பொருளாதார ஆதிக்கத்தால் பெறுகின்றன, கோருகின்றன, திணிக்கின்றன. இதன் தொடர்ச்சியில் எல்லா சமூகப் பொருளாதார இயக்கமும் கட்டுடைந்து கட்டற்ற சுதந்திரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் கிடைக்கின்றன, கிடைப்பதற்காகக் கோருகின்றன. அதன் தொடர்ச்சியான சிதைவில் குடும்பங்கள் மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலகநாடுகளிலும் சிதைகின்றன. இதையே இன்று பலர் தமது தலையில் தூக்கி நிறுத்தி ஆட நினைக்கும் ஆட்டம் பெண் விடுதலை அல்ல, மாறாக ஆணாதிக்கத்தை ஏகாதிபத்திய வழியில் மறுவார்ப்பு செய்வதே ஆகும்.


மார்க்ஸ் மகிழ்ச்சி என்பது போராட்டமே ஒழிய வேறு ஒன்றுமல்ல என்றார். மார்க்ஸ் மார்க்சியத்தை நிறுவும் கடும் நெருக்கடிக்கு ஊடான போராட்டத்தில் சொந்தக் குழந்தைகளைப் பட்டினியிலும் வறுமையிலும் இழந்தார். மேலும் மருத்துவ வசதியின்றி நோய்துன்பத்தால் நீடித்த போராட்டத்தையே தனது வாழ்க்கையாக்கி, அதையே மகிழ்ச்சியாகக் கொண்டு உலகின் கோடான கோடி உழைக்கும் மக்களுக்காக மட்டும் வாழ்ந்தார். இதைக் கொச்சைப்படுத்தி ஆணாதிக்கம் என சேறடிப்பதன் மூலம், இன்று போராடும் மனிதர்களை எல்லாம் கொச்சைப்படுத்தி, ஏகாதிபத்திய உலகமயமாதல் எனும் உலக ஒழுங்கைப் பேண, அதை எதிர்த்துப் போராடும் தலைவர்களும் மக்களும் தேவையில்லை என மறைமுகமாகக் கூறுகின்றனர். அதுதான் மேற்கு நாடுகளின் கட்டற்ற சுதந்திரத்தை அதன் விபச்சாரப் பன்றித்தனத்துடன் முன்தள்ளுகின்றனர்.


மார்க்ஸ் மிக கடினமான, முன்னொருபோதும் முன்வைக்காத ஒரு கோட்பாட்டை, முதலாளித்துவச் சுரண்டல் ஜனநாயகச் சுதந்திர அரசுகளின் பல நாடு கடத்தல்களின் ஊடாக, மிக மோசமான வறுமையின் ஊடாக, மிக மோசமான நோயின் ஊடாக, பசி பட்டினியுடன், சுயநலம் இன்றி போராடித்தான், உலகின் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்கும் மார்க்சியத்தை முன்வைத்தார்.


எந்த விதமான உப்புச்சப்பு இல்லாத முதலாளித்துவக் குப்பைகளை வெளியிடுபவர்களுக்கு அரசே வசதி செய்தும், பணம் கொடுத்தும் இருக்கும் நிலையில், மார்க்ஸ் எழுத்தைத் தடைசெய்தும், நாடுகடத்தியும், வறுமையிலும் வதைத்துக் கொன்றனர், இந்த முதலாளித்துவக் கனவான்கள்.


மார்க்சின் வறுமைக்குக் காரணம், குழந்தை இறப்புக்குக் காரணம்...... என அனைத்துக்கும் இந்த முதலாளித்துவச் சமூக அமைப்பும், இந்த ஜனநாயகச் சர்வாதிகாரக் கட்டற்ற சுதந்திரமும், இந்த முதலாளித்துவக் கனவான்களுமே காரணமாகும். ஆனால் சங்கமன் போன்றோர் அதே பாணியில், சமூகத்துக்கு வெளியில் தனிநபர் மார்க்சைக் குற்றம்சாட்டுவது என்பது மார்க்சுக்குச் சேறுவீசுவதன் மூலம், சுரண்டிச் சூறையாடும் முதலாளித்துவத்தை அச்சுறுத்தும் மார்க்சியம் என்ற புரட்சிகரத் தத்துவத்தை ஆழக் குழி தோண்டி புதைக்க முனையும் கனவுகளில் எழுந்ததே.
ஆண் - பெண் கட்டற்ற சுதந்திரம், சுதந்திரக் காதல்...... என்பன எல்லாம் உண்மையில் நுகர்வுக்குப் பின்னால் விபச்சாரத்தைத் தங்கு தடையின்றி சுதந்திரமாகக் கோரும் ஆணாதிக்கப் பூர்சுவா கனவுகள் ஆகும்.


ஆண் - பெண் இணைவு என்பது மனிதப் போராட்டத்தின் ஊடேயான, மனித இருப்பின் மீதான, சமூக வாழ்வு மீதான, இயற்கை மீதான..... ஒழுங்குக்கு உட்பட்டதாக, கட்டுப்பாடு அற்ற இயல்பான இணைப்பாக இருக்க வேண்டும. இது ஆண் - பெண் என்ற இருவரும் பரஸ்பரம் காதலிக்கவும், பிரியவும் உள்ள சுயநிர்ணய எல்லைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். இன்றைய குடும்ப அமைப்புக்குப் பதில் புரட்சிகரக் குடும்ப அமைப்பு என்பது கூட்டுக் குடும்ப அமைப்பாகப் புரட்சிகரச் சமூக அமைப்பால் பிரதியிடப்படவேண்டும். உதாரணமாக, இன்றைய கல்விக்கொள்கை பிழை என்பதால், பாடசாலையை இடிப்பது அல்ல. மாறாகப் புரட்சிகரக் கல்விக்கொள்கையைக் கோரவேண்டும. அதுபோல் கட்டிட அமைப்பில் புரட்சிகரக் கல்விக்கொள்கைக்கு ஏற்றதாக மாற்றம் வேண்டும். இதை மறுத்து கல்வி அற்ற, கட்டிடம் அற்ற நிலையை உருவாக்குவது அல்ல. அதுபோல் தான் குடும்பத்தின் நிலையையும் மாற்ற வேண்டும்.


இன்று காணப்படும் வாழ்வு மீதான பயங்கள், பயங்கள் மீதான இணைவுகள், இணைவுகள் மீதான சிறைகள், சிறைகள் மீதான அவலங்கள், அவலங்கள் மீதான அடிமைத்தனங்கள், அடிமைத்தனங்கள் மீதான சீரழிவுகள், சீரழிவுகள் மீதான விபச்சாரங்கள்...... என எல்லாம் மனித விரோதச் செயல்களும் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் புரையோடிப் போய் உள்ளது. இன்றைய குடும்ப அமைப்பும் சரி, குடும்பச் சிதைவும் சரி தனிமனிதப் பொருளாதார நலன்களை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஆணாதிக்கச் செயல் தளத்தில், மேலும் தனிமனிதப் போக்கைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற வேறுபாட்டில் பிளவுபடுகின்றது.


இந்த இடத்தில் பெண் விடுதலையின் அங்கமாகக் காட்டும் ஒரு பாலுறவு (ஆண் ஒ ஆண்) (பெண் ஒ பெண்) எப்படி பெண் விடுதலையாகி விடும்? மனிதனின் பரிணாமத்திலும் சரி, எல்லா உயிரியல் பரிணாமத்திலும் சரி எதிர் நிலை முரண்பாட்டிலான புணர்ச்சி (ஆண் ஒ பெண்) ஆர்வம் ஊட்டும் வகையில் இன்பத்தைக் கொடுப்பதாகவும் இயல்பானவும் இயற்கையின் உணர்ச்சியாகவும் இருந்தது. இது இயற்கை விஞ்ஞானத்திலும் பரிணாமத்திலும் எதிர்பால் உட்பட்ட புணர்ச்சியையே (ஆண் ஒ பெண்) இயற்கை கோரியது.


ஆனால் மனிதன் வழக்கம் போல் இயற்கையை அழிப்பவன். தனது சொத்துரிமையைப் பெருக்க சுரண்டல் அமைப்பை உருவாக்கியவன். ஆண்- பெண் பிளவின் அடிப்படையில் இயற்கையான புணர்ச்சியைச் சிதைத்த போது அது சீரழிவையும் உள்ளடக்கி விளைவாக்கியது. ஆண் - பெண்ணுக்கு இயல்பான ஆர்வமான உணர்ச்சியைத் தணித்துக் கொள்ள இருந்த இயற்கையான வழி அடைபட்ட நிலையில், ஆணாதிக்கமே ஒருபால் உறவை (ஆண் ஒ ஆண்) (பெண் ஒ பெண்) இயற்கைக்கு விரோதமாக வித்திட்டது. ஒருபால் உறவு ஆணாதிக்கத்தின் கொடையே ஒழிய பெண் விடுதலையின் புகழ் பூத்துக் கொட்டும் விடுதலையல்ல. அது போல் இவை சமூகத்துக்கு வெளியிலான தனிமனிதச் சுதந்திரமும் அல்ல. மாறாக, ஆணாதிக்கத்தின் சாக்கடையே ஆகும். ஆணாதிக்கம் தொடர்ந்து பேணுவதற்கு, அதன் உடன் சமரசம் கண்டு கொள்வதற்கு, இன்று ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது அவ்வளவே.


தொடர்ந்து முன்வைக்கும் வாதத்தைப் பார்ப்போம். "தனிச்சொத்து குடும்பம் என்பவையெல்லாம் மான்யகால தந்தைவழிச் சமூகத்தின் உருவாக்கம் ஆகும். உண்மையான பொதுவுடைமை மலர்ச்சியில் அரசு வாடுவது போல் இவையும் அற்றுப்போய் விடும் என்கிறது மார்க்சியம. கூடவே இப்பார்வையில் பெண் என்பவள் ஆணொருவனின் சொத்தாகவே, போகப்பொருளாகவே கொள்ளப்படுகிறாள். இந்தச் சொத்தென்ற ஒன்றிலிருந்தே "கற்பு" போன்ற பல ஆணாதிக்கக் கோட்பாடுகள் பெண் மேல் திணிக்கப்படுகின்றன இல்லையா? இவற்றின் மூலமே பெண்ணின் அடிமைச்சாசனம் எழுதப்பட ஏதுவாகிறது. மார்க்சியத்தில் இத்தகைய கருத்துக்கள் இருந்தபோதும் பெண்ணியல் நோக்கு அதில் பிரக்ஞைப+ர்வமாக இடம் பெறாமையால் அதில் பல முன்னுக்குப்பின் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன"41


- என்று முன்வைக்கும் சங்கமனும் மற்றவர்களும் மார்க்சியம் ஆணாதிக்கம் கொண்டது என்கின்றனர். மார்க்சியம் முன்னுக்குப் பின் முரண்படுகிறது என்று கூறும் இந்தக் கனவான்கள் ஒரு ஆதாரத்தையும் முரண்பாட்டின் மீது முன்வைக்க முடியாமல் போயுள்ளனர். வார்த்தை, வார்த்தையாடல் ஊடேயான சேறடிப்பு தான் மிஞ்சியது, மிஞ்சுகின்றது.


மார்க்சியம், மார்க்சியம் மட்டுமே பெண்களின் பிரச்சினையை, அதன் விடுதலைத் தத்துவத்தை மிகச் சரியாகத் துல்லியமாக ஆய்வு செய்தது மட்டும் இன்றி, அதற்காக உயிர்த்தியாகமும் செய்து நடைமுறையில் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடுகின்றது. இது போல் கடந்தகாலப் போராட்டங்கள், வெற்றிகள் அனைத்தின் பின்பும், மிக ஆழமான போராட்டங்கள், தியாகங்கள், வெற்றிகள் உடன் மார்க்சியம் தன்னைத்தானே புடம் போட்டுள்ளது. வேறு எந்தத் தத்துவமும், போராட்டமும் கூட உரிமை கோர முடியாத அளவுக்கு, இதன் வெற்றிகள் தனிச் சிறப்பானவையாக இன்றும் மிளிர்கின்றன. பெண்ணைப் பெண்ணாக அடையாளப்படுத்தியது மார்க்சியம் மட்டும் தான். அடக்கப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட பெண்ணை முதன் முதலில் தன்னிச்சையான போராட்டத்துக்குப் பதிலாகக் கோட்பாட்டு ரீதியில் ஸ்தாபனப்படுத்தி வீதியில் இறக்கியது மார்க்சியம் மட்டும்தான். எதிர் காலத்தில் பெண் விடுதலையைப் பெற்று தரும் ஒரே ஒரு கோட்பாடு மார்க்சியம் மட்டும் தானே ஒழிய, வேறு எந்தக் கழிசடை வண்ணக்கோட்பாடுகளும் அல்ல. இவை பெண்ணை ஆணாதிக்கம் என்ற அதே இடத்தில் இருத்தி வைக்க சில சலுகைகள் பெற்று சீர்திருத்தம் செய்து ஏமாற்ற மட்டுமே முடியும. மேலும் தொடர்ச்சியான மார்க்சியத்தின் மீதான சேறடிப்பைப் பார்ப்போம்.


"அதாவது ஆண் - பெண் இருபாலரையும் ஒருவர் மற்றவரின் சொத்தாக, போகப்பொருளாக நினைக்க வைப்பதும், அதனால் ஏற்படும் நோக்கால் ஒருவரை மற்றவர் விவகாரங்களில் தலையிட வைப்பதும் இக்கட்டற்ற சுதந்திரத்தால் இல்லாமல் போகிறது. எஞ்சியிருப்பது அன்பு மாத்திரமே. கட்டற்ற சுதந்திரம் என்பது கட்டற்ற அன்பாக, காதலாக மாறலாம்.... அதுதான் ஏற்கனவே கூறிய கட்டற்ற விடுதலையும் அதன் வழிவரும் கட்டற்ற அன்பும்!. இந்தப் பார்வையில் பெண்ணின் எந்த அங்கமும் போகப்பொருளாகவும் ஆபாசமாகவும் பார்க்கப்படமாட்டாது. மாறாக எல்லாம் அன்பின் உயிர்ப்பாகப் பார்க்கப்படும்."41 என்கின்றனர்.


கட்டற்ற சுதந்திரத்தில் சுதந்திரம், அன்பு, காதல் எப்படி சுதந்திரமாகச் செயல்படும் என்பதை விளக்கமுடியாத புலம்பலில் கூறப்பட்டவையே இவை. எப்படி பெண்ணின் அங்கங்களைத் திடீர் என ஆபாசமாகப் பார்ப்பது அற்றுப் போய்விடும் என்பதை விளக்கமுடியவில்லை. மாயமந்திரம் மட்டும்தான், சினிமா காட்டவும் ஏமாற்றவும் உதவும்.


ஐரோப்பியக் கட்டற்ற சுதந்திரத்தில் பெண் இன்று எவ்வளவு கேவலமாக மாற்றப்பட்டு உள்ளாள் என்பதை, நடைமுறையில் சுதந்திரமாகத் தங்குதடையின்றி காணமுடியும். இங்கு பெண், பெண் உறுப்பு என அனைத்தும் ஏன் அவள் போட்ட, போடுகின்ற, போடும் உடுப்பு கூட (அணிந்த, அணிகின்ற, அணியப் போகின்ற ஆடை கூட) ஆபாசமாக மாற்றப்பட்டு வியாபாரமாக நடந்தேறி வருகிறது. ஆண்-பெண் உறவு கூட சந்தைப் பொருளாக, பண்டமாக மாற்றப்பட்டு விட்டது. காதல், அன்பு என எல்லாம் சந்தைப் பொருளாகி உள்ளது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் இந்த வியாபாரம் தான் எஞ்சிப்போய் உள்ளது.


கட்டற்ற சுதந்திரம் என்பது கற்பனையானது. மாறாக, கட்டற்ற சூறையாடும் சுதந்திரம் பண்பாட்டில் புகுத்தப்பட்டுள்ளது. எங்கும் நுகர்வின் எல்லையில் மனிதர்கள் அணுகுகின்றனர். இது போலியான, கவர்ச்சியான பண்பாட்டைக் கையாளுகின்றது. விற்பனையாளனுக்கும், வாங்குபவனுக்கிடையில் நிலவும் போலித்தனமான உறவுகள் ஆண் - பெண் உறவில் கவர்ச்சி காட்டுகின்றது. எல்லாம் பொருட்களின் உறவாகின்றன. மனித மானிடம் என்பது சந்தைப் பண்பாட்டில் தொலைந்து போனதையே கட்டற்ற சுதந்திரமாக, அன்பாக, காதலாகக் காட்டப்படுகின்றது. ஒரு விபச்சாரி என்ன நிலையில் இயங்குகின்றாரோ அதைத் தாண்டி உறவுகள் மலர்ந்து விடவில்லை. அந்தளவுக்குச் சீரழிந்துள்ளது.


கி.பி. 1915-இல், இனெஸ்ஸா அர்மாண்ட் முன்வைத்த "சுதந்தரமான காதல்" என்பதை லெனின் எதிர்த்து இது ஒரு பூர்சுவா (முதலாளித்துவக்) கோரிக்கையே தவிர பாட்டாளி வர்க்கக் கோரிக்கையல்ல என்றார்.


கட்டற்ற சுதந்திரம், சுதந்திரக் காதல், சுதந்திர அன்பு என்ற அனைத்துக் கோட்பாடுகளும் பூர்சுவா (முதலாளித்துவக்) கண்ணோட்டத்துடன் கூடிய, இன்றைய திறந்த பொருளாதாரக் கொள்கையின் உலகமயமாதலினை ஊக்குவித்துப் பாதுகாக்க முனையும் வண்ணக் கலவையாகும்.


இக்கோட்பாட்டை முன் வைப்போர் எல்லோரும் உண்மையில் மார்க்சியத்தை எதிர்த்து உலக மயமாதலைப் பாதுகாக்க தமது தீவிர, முன் முயற்சியின் ஓர் அங்கமே ஆவர். அவர்களின் சொந்த முகங்களை இனம் கண்டு கொள்வதும், அவர்களையும், அக்கோட்பாடுகளையும் அம்பலப்படுத்துதல் என்பது இன்றைய வரலாற்றுக் கடமையாகும்.


ஓரினச் சேர்க்கை விடுதலையின் தத்துவமாகவும், மனிதர்களுக்கு இடையில் ஜனநாயகப் பூர்வமாக நடப்பதால் "கட்டற்ற சுதந்திரம்" அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சங்கமன் முதல் அ. மார்க்ஸ் ஈறாக அடித்துப் பிடித்து நியாயப்படுத்துகின்றனர். இது உண்மையா?
மேற்கு நாடுகளின் கோட்பாட்டு மையமான பிரான்சில் வெளிவந்த லிபரேசன் என்ற பத்திரிக்கை 26-02-1998 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் இருந்து பார்ப்போம். சிறுவர், சிறுமியர் எப்படி ஓரினச் சேர்க்கைக்குப் பல்கலைக்கழகப் பகிடி வதை (ragging) போன்று பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை அட்டவணை:40-இன் மூலமாகப் பார்ப்போம்.


அட்டவணை: 39
ஆண்டு
யாருடன்  சதவீதத்தில்                          1985                1991                  1993
தகப்பன்                                                          15%                23%                   27%
தாய்                                                                  27%                37%                  43%
சகோதரன்-சகோதரி                                 32%                44%                  49%
பாடசாலை                                                    35%                43%                  45%
நண்பர்கள்                                                     41%                56%                   62%


இது எதைக் காட்டுகின்றது இங்கு "கட்டற்ற சுதந்திரம்" என்ற பெயரில் சிறுவர் - சிறுமிகள் ஓரினச் சேர்க்கைக்குக் குடும்பத்தில் இருந்து நண்பர்களுக்கு இடையில் பந்தாடப்படுகின்றனர். பாலியல் பற்றிய அறிவு பூர்வமான


அறிவு புறக்கணிக்கப்பட்ட நிலையில், இங்கு செய்தி ஊடகங்கள் இட்டுக்கட்டி வீங்கி வெதும்பும் பாலுறவு (sex) படிமங்களின் மூலம், இச்சமூகம் பந்தாடப்படுகின்றது. இவை பெருமளவில் வெளிவராமைக்கு முக்கிய காரணம் குடும்பத்துக்குள்ளும், நண்பர்களுக்குள்ளும் நடப்பதுடன் இது அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுகின்றது.


பல்கலைக் கழகங்களில் பகிடி வதை (ragging) எப்படி ஒரு பழைய மாணவன் வக்கிர அதிகாரத்துடன் செய்ய, புதிய மாணவன் எதிர்ப்போடு இணங்குகின்றானோ, அதையே பின்னால் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது போன்று, இந்த ஓரினச் சேர்க்கை வேறுபாடு இன்றி அதே அச்சில் கட்டியமைக்கப்பட்டுள்ளது.


கி.பி. 1970-களில் பிரான்சில் நடந்த மாணவர் போராட்டத்தை ஒட்டி அதை மழுங்கடிக்க முன் வைக்கப்பட்ட பல எதிர்நிலைக் கோட்பாடுகள் தான், இதன் அச்சாணியாக இருக்கின்றது.


மனிதர்கள் தனிநபராக மாற, மாற மேலும் மேலும் இது தீவிரமடைகின்றது. தமது பாலுறவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அவலத்தால் ஓரினச் சேர்க்கையும் டிஸ்கோ கலாச்சாரமும், சமூக இயக்கத்துக்கு இசைவாக வழிவிடும் அங்கீகாரம் கிடைக்கின்றது.


இந்த இடத்தில் "கட்டற்ற சுதந்திரம் நிலவிய காலத்தில் தாய் - தனயன் (மகன்) உடலுறவு, தங்கை - சகோதரன் உடலுறவு என்ற கட்டற்ற போக்கு இருந்தது. இப்போது எச்சச் சொச்சங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் மனித நாகரீகம் எதுவாக இருக்கும்."41 எனக் கேட்டு, இது இனி ஏற்படாது, ஏனெனின் அன்று நாகரீகத்தின் குழந்தைப் பருவம் எனக் கூறி மாரடித்துள்ளார். ஆனால் புள்ளி விபரம் எதைக் காட்டுகின்றது. எதிர்மறையில் தான் இது உள்ளது.


"கட்டற்ற சுதந்திரம்" என்பது "கட்டற்ற விபச்சாரத்தையும்" "கட்டற்ற குடும்பச் சிதைவையும்" "கட்டற்ற குடும்ப உறவையும்" தொடங்க அடிப்படையாக உள்ளது. இது சமுதாயச் சீரழிவை நுகர்வுத் தளத்தில் வேகப்படுத்தி பெண்ணை நுகர்வுப் பண்டமாகச் சிதைத்து கேவலப்படுத்தி விடுகின்றது. இது பெண்ணினதும், ஆணினதும் வாழ்வுப் பரப்பை அழித்து ஜடங்களாக ஆக்குகின்றது. பாலியலைக் கடையில் வாங்கும் பொருளாகப் பணத்துக்கும், அன்பளிப்புக்கும், போதையிலும் கிடைக்கும் ஒரு சரக்காக்கிவிடும். இதை யாராலும் இல்லை என்று மறுத்துவிடமுடியாது.


இங்குதான் கட்டுடைத்த சுதந்திரத்தை ஐரோப்பியப் பெண்கள் அடைந்து விட்டனர் என்று இந்தியாவிலும், இலங்கையிலும், உலகு எங்கும் கூறப் பின்நிற்காத போக்கு வெளிப்படுகின்றது. இது விபச்சாரத்தைத்தான் குறிக்கின்றது என்பதுடன் விபச்சாரத்தைத்தான் கோருகின்றது என்பது தௌளத் தெளிவானது.


இது பற்றி முன்பு "புன்னகை" மற்றும் ~சமர்| ஆகிய இதழ்களில் நான் எழுதிய கட்டுரையை "எக்சில்" 3-இல் "கூட்டலும் கழித்தலும்" என்ற கட்டுரையில் என் கருத்தைத் திரித்து எழுதுகிறார் கொந்தியார். எப்படியெனில் கட்டற்ற சுதந்திரத்தைக் கோரும் பெண்ணியம் ஆணாதிக்கத்தைத் தக்க வைத்து விபச்சாரத்தினைக் கோருவதே என்று நான் எழுதியதை வைத்து "சுதந்திரமாக இருப்பதாகக் கருதிக் கொள்கிற இரயாகரன், விபச்சாரம் செய்து கொண்டிருப்பதாக யாராவது கோரினார்களா?"43 என்று என் கருத்தையே திரித்த கொந்தியார், நான் சொன்னவைகளை தலை மாற்றி ஒட்டிவைத்து வம்பளந்துள்ளார். இதைப் போல் பலதையும் திரித்து எழுதும் கொத்தியார் ஏன் ஒழித்துக் கொண்டு வம்பளக்கின்றார்?


நான் சுதந்திரமாக உள்ளேன் என்று எங்கேனும் எப்போதாவது சொன்னேனா? இல்லை, நிச்சயமாக இல்லை. இந்தச் சமூகத்தில் இருந்து கொண்டு யாரும் இச்சமூகத்துக்கு வெளியில் சுதந்திரமாக இருக்கமுடியாது. அப்படி யாராவது இருப்பதாகப் பிரகடனம் செய்தால், அது விபச்சாரமாகவே இருக்கும். இது யாரும் சொல்லியோ, ஏற்றோ தீர்மானிப்பதில்லை. அது இருக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தின் நடைமுறை மட்டுமின்றி, அதை நோக்கிச் செல்வோரின் பொதுவிளைவாகும்.


சுதந்திரமாக இருப்பதாக (நான் அல்ல) சரிநிகரில் சங்கமன் கூறுவதைப் பார்ப்போம். "இப்போது மேற்கில் குடும்பம் என்ற பெண்களைக் கட்டிவைத்த கட்டுக்கள் அறுபடுகின்றன. அங்கு பெண்களுக்கான தொழில் வசதிகள், விவாகரத்து முறைகள், கல்வி, ஒரு பாலுறவு போன்றவை எல்லாம் அவளை ஆணாதிக்கம் விரித்த தளைகளில் இருந்தெல்லாம் விடுதலை அளித்துள்ளது."41 இதை அவர் "கட்டற்ற சுதந்திரம்"41 என வருணிக்கின்றார். பெண் ஆணாதிக்கப் பிடியில் இருந்து விடுதலை அடைந்து விட்டாள் என்றும், கட்டற்ற சுதந்திரத்தில் நகர்கின்றாள் என்றும் சங்கமன் எழுதியதை மறுத்து, நான் சுதந்திரமாக இருப்பதாகக் கூறி திரித்து எழுதிக் காட்டுவதன் மூலம் சங்கமனின் சுதந்திர விபச்சாரத்தை அங்கீகரிக்கின்றனர்.


சுதந்திரம் தொடர்பாக லெனின் என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம். "முழுமுதலான சுதந்திரம் என்பதால் நீங்கள் பேசுவது முழுக்க முழுக்க கபடமான புரட்டே ஆகும். பணத்தின் வல்லமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில், உழைப்பாளி வெகுஜனங்கள் வறுமையில் வதைபட, ஒரு சில செல்வந்தர்கள் புல்லுருவிகளாய் வாழும் ஒரு சமுதாயத்தில் மெய்யான, பயனுள்ள "சுதந்திரம்" இருக்கவே முடியாது.


திருவாளர் எழுத்தாளரே, உங்களுடைய முதலாளித்துவப் பதிப்பகத்தார் சம்பந்தமாய் நீங்கள் சுதந்திரமானவராகவா இருக்கின்றீர்கள்?


உங்களுடைய முதலாளித்துவ ரசிகர் பெருமக்கள் சம்பந்தமாய் (நாவல்களிலும் ஒவியங்களிலும் ஆபாசத்தையும், புனித நாடகக் கலைக்கு அனுபந்தமாய் விபச்சாரத்தையும் அளிக்குமாறு உங்களைக் கோரும் இவர்கள் சம்பந்தமாய்) சுதந்திரமானவராகவா இருக்கின்றீர்கள்?


முழுமுதலான இந்தச் சுதந்திரம் முதலாளித்துவ அல்லது அராஜகவாதத் தொடராகும். (உலகக் கண்ணோட்டம் என்ற முறையில் அராஜகவாதமானது உட்புறம் வெளிப்புறமாய் மாற்றப்பட்ட முதலாளித்துவத் தத்துவவியலே ஆகும்.) யாராலும் சமுதாயத்தில் இருந்து கொண்டு, அதேபோதில் சமுதாயத்திலிருந்து சுதந்திரமாய் இருப்பது முடியாத காரியம். முதலாளித்துவ எழுத்தாளர் அல்லது கலைஞர் அல்லது நடிகையின் சுதந்திரம் எல்லாம் பண மூட்டைக்கு, லஞ்ச ஊழலுக்கு, விபச்சாரத்துக்குக் கீழ்ப்பட்டும் முகமூடி பூண்ட (அல்லது கபடமாய் மூகமுடி இடப்பட்ட) சார்புநிலையே அன்றி வேறல்ல.


சோஷலிஸ்டுகளாகிய நாங்கள், இந்தக் கபடத்தை அம்பலம் செய்கின்றோம். பொய்யான பெயர்ச் சீட்டைக் கிழித்தெறிகிறோம். நாங்கள் இதைச் செய்வது வர்க்கச் சார்பில்லாத கலை, இலக்கியத்தை வந்தடைவதற்காக அல்ல. (வர்க்கங்கள் இல்லாத கம்ய+னிசச் சமுதாயத்தில் மட்டுமே இது சாத்தியம்) உண்மையில் முதலாளித்துவ வர்க்கத்துடன் பிணைப்பு கொண்டு, சுதந்திரமானதாய் கபட வேடம் போடும் இந்த இலக்கியத்தை, பகிரங்கமாய் பாட்டாளி வர்க்கத்துடன் பிணைப்பு கொண்டு மெய்யாகவே சுதந்திரமானதாய் இருக்கும் இலக்கியத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதைச் செய்கின்றோம்"44 என்றார் லெனின்.
லெனினின் இக்கூற்று பெரும்பாலும் இலக்கியம் மற்றும் கலையைத் தொட்டுச் சென்றாலும் சமுதாயத்தின் எல்லாவற்றுக்கும் பொருந்தக் கூடியவை.


சுதந்திரம் உண்டு என எந்த வர்க்கம் பீற்றுகின்றது என்பதை ஒட்டி ".....சரக்கு உற்பத்தியை மனிதச் சுதந்திரம், தனிமனிதனின் சுயேட்சை நிலை இவற்றின் சிகரமாகக் கருதுகிற குட்டி முதலாளியின் கண்ணோட்டத்தில் பெரிதும் விரும்பத் தக்கதுதான்."4 என்று கார்ல்மார்க்ஸ் குட்டிப்பூர்சுவாத் தனத்தின் அபத்தத்தைக் கூறுவது என்பது சகலதுறைகளுக்கும் பொருந்தக் கூடியதே.


இச்சமுதாயத்தில் பொருளாதாரச் சுதந்திரம் என்றால் ஏகாதிபத்தியச் சூறையாடலையும், பெண் சுதந்திரம் அடைந்து விட்டாள் என்றால் ஆணுக்குச் சோரம் போதலையும், பாலியல் சுதந்திரம் என்றால் விபச்சாரத்தையும் தாண்டி உலகம் உருளாது. அப்படி உருளும் என்றால் ஏகாதிபத்திய எடுபிடிகளின் சுதந்திரத்தையே பாதுகாத்து நிற்கும் விபச்சாரத்தையும் குறித்துச் சொல்லுகின்றது.


அம்மா 7-இல், பெண் ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தி எழுதிய "பைலாப்பாட்டு" என்ற கதையை எழுதிய ஷோபாசக்தி, என் கட்டுரை ஒன்றில் இருந்து, ஒரு பகுதியை எடுத்து பெண் விடுதலைக்கு எதிரானதாகப் பாவித்ததன் மூலம், சுதந்திரமான காதல் உலகில் உண்டு என அடித்து (கையாள்வதன்) சொல்கின்றார். அதில் நான் எழுதிய பகுதியைப் மீளப் பார்ப்போம். இனெஸ்ஸா அர்மாண்ட் முன்வைத்த "சுதந்திரமான காதல்" என்பதைப் பூர்சுவா (முதலாளித்துவக்) காதல் என லெனின் கூறியதை மறுத்து, சுதந்திரமான காதல் வரியைப் பெண் ஓரினச்சேர்க்கையில் வைத்து, நியாயமான வாதம் செய்ய தகுதி இழந்து புலம்பியுள்ளார். எல்லாம் இன்று ஏகாதிபத்தியச் சுதந்திரமான காதலை கட்டற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சீரழிவுகளைப் பேர்ந்துவிடுவதில்தான் கிளறி விடுவதில்தான் எஞ்சிப்போயுள்ளது. இந்தச் சமுதாயத்துக்குள் வாழ்ந்த படி சுதந்திரம் உண்டு என்ற வாதங்களும், அதற்கான எழுத்துகளும் அருவருக்கத்தக்க முதலாளித்துவ எச்சங்களே.


இவர்கள் நியாயப்படுத்தும் "சுதந்திரம்" எப்படி விபச்சாரமாக நடைமுறையில் பிரதிபலித்துள்ளது எனப் பார்ப்போம். சுகன் என்பவர் எக்சிலுக்கு எழுதிய கதையில், பக்கத்து வீட்டுக் கிழவனின் சுவரில் தட்டி கலாட்டா செய்த தொடர்ச்சியில் அவரிடம் நேரடியாகவே அழகிய அராபியப் பெண் வேண்டும் என்று கேட்டாள் என்று எழுதியுள்ளனர். இவையெல்லாம் "சுதந்திரப் பாலியல்", விபச்சாரம் அல்லாமல் வேறு எது? அதே கதையில் பெண்கள் மார்பகத்தை இந்தாபிடி! இந்தாபிடி! என்று திரிவதாக எழுதியது எல்லாம், ஆணாதிக்க விபச்சாரம் இல்லாமல் வேறு என்ன?


நா.கண்ணன் என்பவர் "இருள் வெளி" என்ற இதழில் ஒரு கதை எழுதியுள்ளார். அதில், தொலைக்காட்சி சினிமாவில் மூன்று ஆண் கதாநாயகர்களின் பாலியல் காட்சியை ஒரு பெண் பார்த்ததாகவும், அவள் அந்த கதாநாயகர்களைப் போன்று பக்கத்து வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த மூன்று ஆண்களுடனும் உடலுறவு கொள்ள எண்ணினாள் என்றும் எழுதியுள்ளார். இவையெல்லாம், "பாலியல் சுதந்திரத்தின்" விபச்சாரம் அல்லாமல் வேறு என்ன? அழகிப் போட்டியை நடத்திய அமிதாப்பச்சன் முதல் எழுத்தில் விபச்சாரத்தை வைக்கும் சாருநிவேதிதா வரை "சுதந்திரத்தின்" பின் நடத்தையிலும் சரி, எழுதிக் குவித்துள்ள எழுத்திலும் சரி விபச்சாரத்தை எல்லாத் துறைகளிலும் ஆதாரமாகக் காட்டமுடியும். இது போல் இவர்கள் கூடிக் கூத்தடிக்கும் நிகழ்வுகளும் இதற்கு மேலும் ஆதாரமாக உதவுபவைதான்.


சமுதாய வளர்ச்சியில் என்ன மாதிரியான பாலியல் சமூக அமைப்பு இருக்கும் எனப் பார்ப்போம். அதற்கு இன்றுள்ள அமைப்பில் இருந்து ஆராயமுடியும். மாறாக, இந்தச் சமுதாயத்தின் தகர்வில் ஆராயவேண்டும். இன்று சமுதாயத்தில் எஞ்சியும், தகர்ந்துச் செல்லும் தனிச் சொத்துரிமை சார்ந்த ஒருதாரக் குடும்ப அமைப்புமுறை அழிந்துவிடும். இது பாரம்பரியமாகக் கட்டப்பட்ட அல்லது பேசி செய்யப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட அல்லது பதிவுத் திருமணம் மூலம் பாதுகாக்கப்பட்ட.... இது போன்ற திருமணமுறைகளின் அழிவு என்பது ஆண் - பெண் கூடிவாழும் சுயநிர்ணய உரிமைப் போரில், சவக்குழிக்குள் தள்ளப்பட்டுப் புதிய குடும்பங்கள் உருவாகும்.


இது ஆண் - பெண் தமது சுயநிர்ணய உரிமையில் சேர்ந்து வாழவும் பிரிந்து செல்லவும், எந்தத் தடைகளையும் கடந்த (இங்கு இது முழுமையடையாது தடுப்பது ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பாகும்.) தேர்வுகளை நோக்கி குடும்பங்கள் நீடித்த புதிய வகை ஒருதார மணங்களை வந்தடைவதில் (இங்கு இருதார மணங்கள் ஏற்படவில்லை. காரணம் நீடிக்கும் ஏகாதிபத்திய ஆணாதிக்கச் சமூக எல்லைக்குள் இவை திணறுகின்றன.) சாத்தியமாக்கியுள்ளதை நாம் மேற்கு நாடுகளில் காணமுடியும். இங்கு தடைகள் என்பது இந்த முதலாளித்துவ எல்லைக்குள் மட்டும் குறிப்பதாகும்.


பொருளாதார இடைவெளி உள்ளவரை, ஏகாதிபத்தியப் பண்பாடு, கலாச்சாரம் உள்ள வரை சுயநிர்ணயத்தைக் கையாள்வதில் சுயேட்சையான தன்மை வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்டதுதான். இருந்த போதும் ஏகாதிபத்தியப் பாலியல் வக்கிரத்தால் பாலியல் பற்றிய இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம், கலைகளை எல்லாம் மீறி மக்கள் தெரிவு செய்யும் சுயநிர்ணயம் சார்ந்த குடும்ப வாழ்க்கை, பாலியல் தேர்வு தான் எதிர்காலத்தில் வர்க்கங்கள் கடந்த பின்னும் இவை பாட்டாளி மணங்களாக வளர்ச்சி பெறும் என்பதைத் துல்லியமாக்கியுள்ளது. இங்கு ஏகாதிபத்திய அமைப்புக்குள் இருக்கக் கூடிய தடைகள் கூட தகர்கின்ற போது, பாலியல் என்பது இன்று இருப்பதற்குப் பதில் ஒரு சின்ன விடயமாக வக்கிரத்துக்குள் அலைவது இன்றி நல்ல ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்.