07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

கெப்பித்திக்கொல்லாவ கொலை

18.05.2006 அன்று நான் எழுதிய 'சுத்திகரிப்பும் தூய்மையாக்கலும்" கட்டுரையில் இன்றைய படுகொலைக்குரிய அரசியல் நிலைமையை எடுத்துக் காட்டினோம்;. 'இந்த நிலையில் புலிகள் புதிய அரசியல் நெருக்கடியில் சிக்கிவருகின்றனர். மீள வழியற்ற சூறாவளிக்குள் சுழலுகின்றனர். வழமையாக அமைதி நிலவும் காலங்களில்

புலிகள் தமது எதிர்வினைகளையும் பதிலடியையும் கிழக்கில் நடத்துவது வழக்கம். குறிப்பாக முஸ்லீம் மக்கள் மேல் அது நடத்தப்படுவதே இயல்பான ஒன்;று. புலிகள் வரலாறு முழுக்க இது காணப்படுகின்றது. ஆனால் கருணாவின் பிளவைத் தொடர்ந்து அதைச் செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது. அப்படி செய்தால் கிழக்கில் இருந்து மேலும் தனிமைப்பட்டு போகும் அபாயம். இந்த நிலையில் இந்த அரசியல் நெருக்கடியின் எதிர்வினை என்பது பாரிய தாக்குதல் சார்ந்ததாகவும் பாரிய மக்கள் படுகொலைகள் நடக்கும் வாய்ப்பை தூண்டுகின்றது. சிங்கள கிராமங்கள் மீது படுகொலைகள் வடக்கில் இருந்து நடத்தப்படலாம். கடந்தகாலத்தில் கிழக்கில் இருந்த இந்த நிலைமை வடக்கு நோக்கி நகர்வதற்கான சூழல் அதிகரித்துள்ளது. வடக்கு எல்லை ஒட்டிய சிங்கள கிராமங்கள் முதல் கொழும்பு போன்ற பிரதேசத்தில் மக்கள் மேலான குண்டுவெடிப்புகளாக மாறுகின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றது."

 

அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லா படுகொலை முதல், உலகுக்கு கவர்ச்சியாக அழகாக வக்கிரமாக எடுத்துக்காட்ட நடந்த மன்னார் வங்காலை படுகொலை வரை, அனைத்தும் அரசியல் வங்குரோத்தின் விளைவாக அரங்கேறுகின்றது. முன்னர் இது போன்ற கொலைகள் நடந்தன. அன்று அவர்கள் கொண்டிருந்த அரசியல் காரணம் வேறு. அது எதிர்கால அரசியல் நலனை அடையவே செய்தனர். இன்று அவர்கள் இதுபோன்ற கொலைகளை செய்வதற்கு காரணமே முற்றிலும் வேறானது. அவர்களின் அரசியல் எதிர்காலமின்மையின் வெளிப்பாடுகள் படுகொலைகளாக வெளிப்படுகின்றது. இதுவே தேசிய அரசியலாகி விடுகின்றது.

 

பி.இரயாகரன்
15.06.2006


பி.இரயாகரன் - சமர்