உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான மலேரியா பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. மலேரியா நோயினால் ஆண்டுதோறும் 27லட்சம் பேர் பலியாகிறார்கள்.

கொசுக்கள் மூலம் இந்த நோய் கிருமிகள் பரவுகின்றன. பிளாஸ்மோடியம் பாங்கி போரம் என்ற மலேரியா கிருமிகள் கொசுக்களின் உட லில் தொற்றுகிறது. கொசு கடிக்கும் போது மனிதனுக்கு அந்த கிருமிகள் பரவுகிறது. அதே போல மலேரியா நோயாளியிடம் இருந்தும் கொசுவுக்கு பரவுகிறது.

கொசுக்களின் மரபணுவை மாற்றி அமைத்து அந்த கொசுக் களை மலேரியா கிருமிகள், பாதிக்காத கொசுக்களாக உருவாக்க முடியும் என்று சோதனை ரீதியில் அமெரிக் காவின் தேசிய விஞ்ஞான கழக டாக்டர்கள் கண்டு பிடித் துள்ளனர்.

கொசுக்கள் மலேரியா கிருமிகளை எதிர்க்கும் தலை முறைகளாக மாறிவிட்டால் அந்த கொசுக்கள் மூலம் மனி தனுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்

முதல் கட்டமாக எலிகளிடம் மலேரியா நோயை உருவாக்கும் பிளாஸ்மோடியம் பெர்கி என்ற கிருமி பரவுவதை தடுத்தும் சோதனையில் இவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1174425988&archive=&start_from=&ucat=2&