02082023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

சூரிய மண்டலம் 456 கோடியே 80 இலட்சம் வருடம் பழைமை வாய்ந்தது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சி அறிஞர் பிரடறிக் மொய்னியர் மற்றும் உதவிப் பேராசிரியர் டேவிஸ் குயிங் சுயின் ஆகியோர் கர்போனசியஸ் சாடிரைற் என்ற எரிகல்லை ஆராய்ச்சி செய்து சூரிய மண்டலத்தின் வயதைக் கணித்துள்ளனர்.

கர்போனசியஸ் சாடிரைற் என்ற எரிகல்லின் வயது 456 கோடியே 80 இலட்சம் வருடம் என கணிப்பிடப் பட்டுள்ளது. இந்த எரிகல்லை வைத்து சூரிய மண்டலத்தின் வயதும் 456 கோடியே 80 இலட்சம் வருடம் என முடிவுக்கு வந்துள்ளனர்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1198535077&archive=&start_from=&ucat=2&