இத்தாலியின் அல்பஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் பாவு இனத்தவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் கிட்டத்தட்ட அனைவருக்கும் ரத்த உறவு உள்ளது. அவர்கள் நோய்வாய்ப்படுவது மிக அரிது. அவர்களுடைய உணவுகளில் அதிக அளவு cholesterol நிலவிய போதிலும், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோய் ஆகிய நோய்களால் அவர்கள் பீடிக்கப்படுவதில்லை. இந்த விசித்திரமான கிராமம் உண்மையாகவே நிலவுகின்றது. அதனை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த பின், பல்வகை நோய்களை எதிர்த்து நிற்கும் பல மரபணுக்களை கண்டறிந்தனர்.

 

பாவு இனத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக, ஸ்டோகரேடோ கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 400 பேர் உள்ளனர். அவர்களில் 95 விழுக்காட்டினோர் ஒரே குடும்பப் பெயரை பயன்படுத்துகின்றனர். இந்த கிராமம், ஆண்டுமுழுவதும் உறைப்பனியால் மூடப்படும் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால், இதற்கும் வெளிப்புற உலகத்திற்கும் தொடர்பு ஏதுமில்லை. இதன் விளைவாக, கிராமவாசிகள், ஒரே குடும்பத்தினரிடையில் திருமணம் என்ற நிலை நிலவிவருகின்றது. இந்த வழக்கம், 20வது நூற்றாண்டின் துவக்கத்தில் வாத்திகான் வெளியிட்ட ஒரு புனித கட்டளைக்கு புறம்பானது பாதுகாக்கப்படுகின்றது. இந்த திருமண வழக்கத்தினால், குடும்பத்தினரின் மரபுவழி கிராமம் ஒன்று உருவாகியுள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.  

 

இத்தாலியின், அரிதான நோய்களை ஆய்வு செய்யும் ஒரு ஆய்வகத்தைச் சேர்ந்த மரபியல் நிபுணர் ஹெராதேனிக்.வுரோஷ் பேசுகையில், பொதுவாக இந்த வழக்கத்தினால் பல பிரச்சினைகள் ஏற்படும். ஏனென்றால், ரத்த உறவுடையவர்களுக்கிடையில் நடைபெறும் திருமணம், மரபு தகவல்களை சீர்குலைக்கும். ஆனால் இந்த கிராமத்தில் உள்ள எவருக்கும் இத்தகைய பிரச்சினை ஏற்படவில்லை என்ற ஒரு வியக்கத்தக்க முடிவை, நாங்ள் ஆய்வுமூலம் கண்டறிந்துள்ளோம் என்று கூறினார். 

 

வசிக்கும் சூழ்நிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம், ஸ்டோகரேடோ கிராமவாசிகளுக்கு நீரிழிவு நோய்,உயர் ரத்த அழுத்த நோய் ஆகிய நோய்களுக்கு எதிரான ஒரு வகை சிறப்பு எதிர்ப்பு சக்தி உண்டு என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

 

இந்த கிராமத்தில், நாங்கள் ஆய்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். இந்த கிராமவாசிகள் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் உயிரின் மரபணுக்களை, நாங்கள் கண்டறிந்தால், இந்த நோய்களை சிகிச்சை செய்யும் அடிப்படை வழிமுறை கண்டறியப்படும் என்று வுரோஷ் கூறினார்.

 

அரிதான நோய் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் இந்த கிராமவாசிகளின் DNA ஐக் கொண்டு, நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் DNA யுடன் ஒப்பிட்டு, DNA கட்டமைப்பில் வித்தியாசம் இருப்பதனால், அவர்கள் இந்த நோய்வாய்ப்படுவதில்லை என்பதை பார்க்க விரும்புகின்றனர்.

 

அவர்களது யூகம் நிரூபிக்கப்பட்டால், அது ஒரு முக்கிய கண்டுப்பிடிப்பாகும். இந்த கிராமவாசிகளின் பிறப்பு மூலவியல் தகவல்களில் குறிப்பிட்ட ஒரு வகை பொருள் நிலவுவதால், cholesterol உடலால் சீராக சேர்க்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கின்றது என்று வுரோஷ் சுட்டிக்காட்டினார்.

 

ஸ்தோகரேடோ கிராமத்தில் எவரும் நோய்வாய்ப்படுவதில்லை என்ற சொல் பொய் தான், ஆனால் இது உண்மையாகவே நோய் இல்லாத ஒரு கிராமமாகும். இந்த கிராமத்திலுள்ள மருத்துவர்கள் இதை உறுதிப்படுத்தலாம் என்றும் வுரோஷ் கூறினார்.

 

http://tamil.cri.cn/1/2007/01/18/62@47317_1.htm