ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக நம்பப்படும் மண்டை ஓடு ஒன்று, அண்மையில் சீனாவின் சாங்துங் மாநில அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. DAWENKOU பண்பாட்டுப் புதைபடிவங்களுடன், 1995ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இம்மண்டையோட்டை ஆய்வு செய்வதில் ஆய்வாளர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஓர் இளைஞனுடையதாகக் கருதப்பட்ட இம்மண்டையோட்டின் வலது பின்புறத்தில் 3.1 சென்டிமீட்டர் நீளமும், 2.5 சென்டிமீட்டர் அகலமும் உடைய துவாரம் ஒன்று காணப்படுகின்றது. எலும்பு திசுக்களைச் சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சையின் போது ஏற்படுத்தப்பட்ட இச்சிறிய துவாரம், மண்டையோட்டன் இயல்பான வளர்ச்சியுடன் இணைந்து, தற்போதைய அளவுக்குப் பெரிதாகியிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

சீன மருத்துவ வரலாற்றில், வெகு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட இவ்வறுவை சிகிச்சைக்குப் பின், மண்டையோட்டின் உரிமையாளர், பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்திருக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


சீனவின் சிங்குவா செய்தி நிறுவனம் , இத்தகவலை வெளியிட்டுள்ளது.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.