ஸ்கான்டினேவியா தீபகற்பத்தின் சுற்றுப்புறங்களிலும் வாழும் குடி மக்கள், 1880ம் ஆண்டிலேயே அஞ்சல் கட்டுகளை அனுப்ப ஒரு வகை மீனைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய மீன்களின் பழக்க வழக்கங்கள் மிகவும் ஒழுங்கானவை. அவை, தொகுதி தொகுதியாக நீரிணையின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திச் செல்கின்றன. அங்கு ஓரிரவு தங்கி, மறு நாள் திரும்பிகின்றன. இந்த வழக்கம் மாறுவதில்லை. உள்ளூர் மக்கள் இதைப் பயன்படுத்தி, அதிகாலையில் அஞ்சல் கட்டுகள் அடங்கிய ஒரு சிறிய பையை நீரில் வைப்பார்கள். மீன்கள் இதை தலையால் தாங்கிக்கொண்டு, எதிர் கரைக்கு நீந்தி செல்லும். மறு நாள் எதிர் கரையிலுள்ள அஞ்சல் கட்டுகளைத் திரும்பிக் கொண்டு வரும்.