கடந்த மார்ச் 22ம் நாள் உலகின் 13வது நீர் வள நாள் கொண்டாடப்பட்டது. இவ்வாண்டின் நீர் வள நாளின் தலைப்பு "நமது உயிரு நாடி நீர்"என்பதாகும். இந்த தலைப்பு 2003ம் ஆண்டு நடைபெற்ற 58வது ஐ.நா பேரவை கூட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டது. சுற்று சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐ.நா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட《21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்》படி 1993ம் ஆண்டு ஜனவரி 18ம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றிது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தப்படும்.

 

பூமியில் 70.8 விழுக்காடு நிலப்பரப்பில் நீர் உள்ளது. ஆனால் குடி நீர் வளம் மிகவும் குறைவு. 97.5 விழுக்காடு நீர் உப்பு நீராகும். இதை குடிக்க முடியாது. எஞ்சியதில் 2.5 விழுகாட்டு நீரில் 87 விழுக்காடு மனிதக் குலம் பயன்படுத்த முடியாத இரு துருவ பனிக் கட்டிக் கட்டியாறாகவும் ழறைபனியாகவும் உள்ளது. ஆகவே மனித குலம் உண்மையாக பயன்படுத்தக் கூடிய ஆற்று நீர் மற்றும் நிலத்தடி நீர் பூமீயின் மொத்த நீர் அளவில் 0.26 விழுக்காடுதான். இதில் 65 விழுக்காடு நீர் வளம் 10 நாடுகளுக்குள் மட்டுமே உள்ளது. உலக மக்கள் தொகையில் 40 விழுக்காடு வசிக்கும் 80 நாடுகளிலும் பிரதேசங்களிலும் நீர் பற்றாக் குறை கடுமையாகியுள்ளது. ஐ.நா வெளியிட்ட புள்ளிவிபரத்தின் படி உலகில் 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறப் பிரதேசத்தில் வாழ்கின்றனர். 260 கோடி மக்களுக்கு அடிப்படை நலவாழ்வு வசதி கிடையாது.

அதேவேளையில் நீர் வள மாசுபாட்டினால் மனித குலத்தின் உடல் நலமும் கெடுகின்றது. உலகில் ஆண்டு முழுவதும் வெளியேறும் கழிவு நீர் அளவு 40 ஆயிரம் கோடி டன் எட்டும். இதன் விளைவாக 5 லட்சம் கோடி டன் நீர் மாசுப்படுகின்றது. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மாசுப்படுத்தப்பட்ட நீரை குடித்த பின் நோய் கண்டு உயிரிழந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் நெருக்கடி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பின் மூலம் குடி நீர் வள நிர்வாகத்தை வலுப்படுத்தி, நீர் பயன்பாட்டை சிக்கனப்படுத்தி மாசுபடுவதைக் குறைக்க வேண்டும். அத்துடன் வட்டார நீர் வள விநியோகப் பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

1981ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையிலும் பத்து ஆண்டு காலத்தில் உலகின் முதலாவது சர்வதேச நீர் வள பத்து ஆண்டு செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் உலகில் மொத்தம் 100 கோடி மக்களுக்கு பாதுகாப்பான நீர் விநியோகிக்கப்பட்டு சுமார் 77 கோடி மக்களின் உடல் நலன் மேம்பட்டுள்ளது.

2003ல் 58வது ஐ.நா பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரையான பத்து ஆண்டுகள் உயிருக்கான உயிர் வாழ்வதற்கு நீர் எனும் சர்வதேச செயல் திட்ட காலமாக அறிவிக்கப்பட்டது. அதன் தலைப்பு "உயிர் நாடி நீர்" என்பதாகும். 2005ம் ஆண்டு மார்ச் 22ம் நாளன்று இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

 

மனிதர்களே இயற்கை வளத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இணக்க சூழ்நிலையில் வாழ்வதற்கு நீர் வளமும் இயற்கை மூல வளமும் உத்தரவாதம் அளிக்க முடியும். இல்லை என்றால் மனித குலம் ஒரு நாள் கூட பூமியில் வாழ முடியாது. உயிரைப் பேணிக்காக்க வேண்டும். இயற்கை வளத்தையும் பேணிக்காக்க வேண்டும்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.