இயற்கையின் சீற்றம் இந்தியாவிலும் சீனாவிலும் ஒரே மாதிரிதான் இருக்கின்றது. சில பகுதிகளில் மழை வெள்ளம். சில பகுதிகளில் வரட்டி வதைக்கும் வறட்சி. அந்தக் காலத்தில் அதாவது வரலாறு எட்டிப்பார்க்காத புராணகாலத்தில் சீனாவில் மழை வேண்டி வருணபகவானுக்கு யாகம் செய்யப்பட்டதாம் விரிவான சடங்குகள் செய்யப்பட்டு ஒரு அழகான கன்னிப்பெண்ணை தண்ணீர் டிராகனுக்காக பலி கொடுத்தார்களாம். ஆனால் 1960களின் இறுதியில சீனா தனது அறிவியல் பார்வையை வானத்தை நோக்கி திருப்பியது. சொர்க்கத்தில் இருக்கின்ற வருணபரவானுக்கு கன்னிப்பெண்ணை பலியிட்டு திருப்தி செய்வதற்குப் பதிலாக வானிநையையே மாற்றத் தொடங்கியது. வறட்சியையும் எக்கபசக்கமான எலிசக்தி செலவையும் சமாளிப்பதற்காக வானிலே கருமேகங்களை உண்டாக்கும் செயற்கை மழைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனாலும் பெய்கின்ற மழை இயற்கை அண்ணையின் கருணை மழையா அல்லது அரசாங்கத் திட்டத்தின் செயற்கை மழையா என்று தீர்மானிக்க முடிய வில்லை. ஆகவே செயற்கை மழைத்திட்ட நிபுணர் சான் சியாங்கை சந்தித்தோம். முதலில் செயற்கை மழை எப்படி பெய்கின்றது என்பதை விளக்கினார்.

 

அதாவது செயற்கை மழை பெய்யும் போது திடீரென பிரளயம் ஏற்பட்டு விடாது. இரண்டு நாட்களுக்கு மேல் அரும்பாடுபட்டு ராக்கெட்டுகள் விமானங்கள், பீரங்கிகள் ஆகியவற்றின் மூலமாக மழையைக் கருத்தலிக்கும் படி மேகங்களைத் தூண்டுகின்றனர். அதாவது உப்பு, சில்வர் அயோடைடு போன்ற ஐஸ் உருவாக்கும் பொருட்களை ஆகாயத்தில் தெளிக்கின்றனர். இதனால் உருவாகும் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

 

சரி செயற்கை மழை பெய்கின்றது சரிதான். இதை இயற்கை மழையில் இருந்து எப்படி வித்தியாசப்படுத்துவது?இதற்கும் பதில் வைத்திருக்கிறார் செயற்கை மழை நிபுணர் சாங் சியாங்.

 

இயற்கை மழையையும் செயற்கை மழையையும் வித்தியாசப்படுத்த முடியாது. ஆனால் செயற்கை மழையில் விழும் மழைத் துளி பெலியதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

செயற்கை மழை ஆரோக்கியமானதா?

 

நாம் உண்ணும் உணவுக்கு சுவை கூட்டுவதற்காகப் போடப்படும் அயோடின் கலிந்த உப்பு ஆரோக்கியமானது தானே. செயற்கை மழையில் உள்ள அயோடின் உப்பில் உள்ள அயோடினை விடக் குறைவான அளவுதான். ஆகையால் செயற்கை மழையால் உடல் நலனுக்கு ஆபத்து இல்லை.

 

செயற்கை மழை எங்கெல்லாம் பெய்கின்றது?

சந்தேகம் என்ன. சீனாவில் தான் உலகெங்கும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் வானிலையைத் திருத்தி செயற்கை மழையை வரவழைக்க முயன்று கொண்டிருந்தாலும் சீனாவில் தான் பெரிய அளவில் செயற்கை மழை பெய்விக்கப்படுகின்றது.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.