03242023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

குழந்தை நலமற்றிருக்கிறதா?

தங்கள் குழந்தை உடம்பு சுகவீனமுற்று இருக்கின்றது என்பதை
எப்படி அதனது பெற்றோர் அறிந்து கொள்ளலாம்?

 

குழந்தை உங்களது அழைப்புக்கோ அல்லது கொஞ்சலுக்கோ சாதாரணமாகச் செய்யும் அதனது செய்கையையோ அல்லது சிரிப்பையோ செய்யாமலிருந்தால்,

குழந்தை எழும்பியவுடன் வழக்கம் போலல்லாமல் நித்திரைச் சோர்வாகக் காணப்பட்டால் அல்லது கண்ணைத் திறந்து யாரையும் பார்க்கப்பிடிக்காமல் அழுதால்.

 

பால் குடிக்கப் பிடிக்காமல் அழுதால்.

குழந்தையை நீங்கள் அணைக்கும் பொழுது அதன் உடம்போ அல்லது கை கால்களோ சோர்வுற்று வழங்காதது போல் காணப்பட்டால்.

 

குழந்தையின் அழுகை வித்தியாசமாக இருந்தால் அதாவது குழந்தை கீச்சிட்டு அல்லது அனுங்கிக்கொண்டிருந்தால்.


உங்கள் குழந்தை உடம்பு சுகவீனமுற்று இருக்கக் கூடும்.

 

குழந்தையில் மேலும் அவதானிக்கக்கூடிய வேறு அறிகுறிகள்:


குழந்தையின் தோல் வெளிறிய நிறத்தில் காணப்படல்.

 

தோலில் புதிதாக வித்தியாசமான நிறத்தில் கரப்பான் (rash) தோற்றமளித்தால் அல்லது கண்டியது போல் காணப்படல்.

 

குழந்தையின் உடம்பு அதிகம் சுட்டுக்கொண்டிருத்தல்.

 

குழந்தை மூச்சு வாங்க அவதிப்படுதல் அல்லது அதிகம் விரைவாக மூச்சு வாங்குதல்.

 

குழந்தை வாந்தி அதிகம் எடுத்தல்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது, மற்றவர்களை விட உங்கள் குழந்தையின் நிலை பெற்றோர்களாகிய உங்களுக்கே முதலில் புரியும்.

 

http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=131&Itemid=60