Wed07082020

Last update12:49:40 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

வலிப்பு நோய்க்கு அறுவை சிகிச்சை

  • PDF

மழை நேரம், தெருவிளக்குகள் எரியவில்லை , மின் தடையால் வீதியே இருள் சூழ்ந்திருக்கிறது, குடையும் கையில் இல்லை, கால்சட்டையை மடித்துவிட்டு கையில் உள்ள பையோடு குத்து மதிப்பாக அடியெடுத்து வீடு நோக்கிச் செல்கிறீர்கள், சாலையில் உரு குழியிருக்க, அதில் நீங்கள் தவறி விழ, லேசான காயமும், அதிக கோபமும், எரிச்சலுமாக வீட்டை அடைகிறீர்கள். நடந்ததைக் கேட்டு, உங்கள் துணைவியார், ஏங்க கொஞ்சம் பார்த்து நடக்கக் கூடாதா? என்று கேட்டால்...ஆமாம் எனக்கு வலிப்பு, அதான் நானே நேரா குழியில் காலைவிட்டு அடிபட்டு வந்திருக்கேன் என்று நீங்கள் எரிச்சலோடு சொல்லக்கூடும்.மழையை ஒருபக்கம் திட்டி, சாலையை சரிவர போடாத மாநகராட்சிக்காரர்களையும் திட்டி, அடிபட்ட வலியை விட "நாமே நொந்து வெறுத்து போயிருக்கோம், இதுல பார்த்து வந்திருக்ககூடாதுன்னு ஒரு கேள்வி வேற" என்று மனைவி அக்கறையோடு கேட்ட கேள்விக்கா அவரை நொந்துகொள்ளும் பலரில் நீங்களும் நானும் நிச்சயம் இருக்கலாம்.

 

ஆக நாமாக தெரிந்தே ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளாத வேளையில், மற்றவர் நம்மிடன் கொஞ்சம் கவனமாக இருந்திருக்ககூடாதா என்று கேட்டால், தெரிந்தே மாட்டிக்கொள்ள நமக்கு என்ன வலிப்பா என்றுதான் நாம் கேட்போம் அல்லவா?

 

வலிப்பை ஏன் இந்த கேள்வியில் பயன்படுத்தவேண்டும் என்று கொஞ்சம் யோசித்தால், வலிப்பு வரும்போது நமது மூளைக்குள்மின்கசிவு ஏற்பட்டு, இயல்பான் நமது இயக்கம் பாதிக்கப்படுகிறது.

 

மூளைக்குள் ஏற்படும் சிறு அதிர்ச்சியே வலிப்பை உண்டாக்குகிறது. இந்த் வலிப்பு அடிக்கடி ஏற்பட்டால் அது வலிப்பு நோய் என்றழைக்கப்படுகிறது. இந்த காக்காய் வலிப்பு என்று சொல்கிறோமே அதுதானா இது என்று கேட்பவர்களுக்கு பதில், ஆம், அதுவேதான்.

 

வலிப்பு என்பது எவருக்கு வேண்டுமானாலும் வரலாம், வரும் வாய்ப்புகள் உண்டு. நமது மூளையில் திடீரென ஏற்படும் ஒரு மின்சாரப் பாய்ச்சல், இடி மின்னல் போன்ற மின்கசிவு, அதுவே வலிப்பை உண்டாக்குகிறது. இப்படியான மின்கசிவு, மின்னல் வெட்டு, குறிப்பிட்ட இடைவெளி விட்டு அவ்வப்போது நிகழும்போது, வலிப்பு நோய் எனப்படுகிறது.

 

இப்படியான வலிப்பு நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் மருந்து மாத்திரைகளின் துணையோடு தங்களது வலிப்பு பிரச்சனையை தணிக்க முடிகிறது. முழுமையாக குணப்படுத்த முடியாதா என்றால், முழுமையாக என்பதைவிட, சற்றேறக்குறைய முழுமையாக, அதாவது 80 விழுக்காடு வரை குணப்படுத்தலாம் என்கின்றனர், வலிப்பு நோய் நிபுணர்கள். அமெரிக்காவில் முன்னணி வலிப்பு நோய் மையங்களில் இந்த வலிப்பு பிரச்சனை நீங்கி, இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள். என்னது, வலிப்புக்கு அறுவை சிகிச்சையா..?? விட்டால் சளி இருமல் வந்தால்கூட அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொல்வார்கள் போல, என்ற கேள்வி மனதில் எழத்தான் செய்கிறது. ஆனால் வலிப்பு நோயை பொறுத்தவரை மருந்தால் முற்றாக குணப்படுத்த முடியாமல் ஆண்டுக்கு 5 அல்லது 6 முறை வலிப்பு ஏற்படும், சகித்துக்கொள்ளல்லாம் என்பதாக ஒதுங்கிவிடும் நோயாளிகளையும், அதற்கு ஊக்கம் தரும் சில மருத்துவர்களையும் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழத்தைச் சேர்ந்த Dr. ராபர்ட் கம்னிட்எரிச்சலோடு சொல்வது இதுதான். மருந்து மாத்திரை எடுத்துக்கொள்வதால் ஆண்டுக்கு சில முரை மட்டுமே வலிப்பு வருகிறது, சகித்துக்கொள்வோம் என்பது இருக்கட்டும், ஆனால் அவர்களாக் நிம்மதியாக ஒரு வாகனத்தை ஓட்ட முடியுமா, அல்லது நுணுக்கமான சில பணிகளைத்தான் செய்யமுடியுமா என்று கேட்கிறார். எந்த நேரத்தில் வலிப்பு வரும் என்று தெரியாமல் வண்டி ஓட்டிக்கொண்டு செல்வதும், கூர்மையான் கருவிகள் நிறைந்த பணித்தளத்தில் ஈடுபடுவதும், அவ்வளவு ஏன், கத்தியால் காய்கறி நறுக்குவதுமேகூட ஆபத்துதானே?

 

அமெரிக்காவில் 30 லட்சம் பேருக்கு வலிப்பு நோய் உள்ளதாம், அவர்களில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அவசியம் அறுவை சிகிச்சை தேவை, ஆனால் ஆண்டுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையோ 3 லிருந்து 5 ஆயிரம் மட்டுமே. மருத்துவர் ராபர்ட் கம்னிட்டின் உணர்வோடு ஒத்துபோகும் வகையில் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெரோம் என்கல் எனும் மருத்துவர். இது ஒரு முக்கியமான, தலையாய பிரச்சனை ஆனால் அப்படியாக இது கருதப்படாமல் இருக்கிறது என்று அவர் அங்கலாய்க்கிறார்.

 

சிறு வயதுக்காரர்களுக்கு இந்த வலிப்பு நோய் வந்து ஒரிரு வகை மாத்திரைகள் அதற்கு நல்ல பலன் தராமல் போனால், அது அவர்களின் இயல்பான் வளர்ச்சியையே பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் அண்மையில் இரண்டரை வயது சிறுவன் ஒருவனுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்து, குணப்படுத்தியுள்ளனர். அறுவை சிகிச்சை அப்படி என்ன செய்வார்கள் என்று ஆர்வமுள்ளவர்களுக்கு, தகவல் இதோ. மூளையில் ஏற்படும் மின்கசிவு போன்ற ஒரு மின்னல் வெட்டுதான் வலிப்பை ஏற்படுத்துகிறது என்று முன்னர் குறிப்பிட்டோம் அல்லவா. அப்படி மின்கசிவு ஏற்படும் மூளையின் பகுதியில் திசுக்கள் சேதமடைந்திருக்கும், அதை நீக்கினால், வலிப்பு ஏற்படுவதை 80 விழுக்காடு குறைத்து விடலாம்என்கிறது மருத்துவ அறிவியல்.

 

http://tamil.cri.cn/1/2007/05/28/ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Add comment


Security code
Refresh

சமூகவியலாளர்கள்

< August 2008 >
Mo Tu We Th Fr Sa Su
        2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை