முதிய வயதை இரண்டாவது குழந்தை பருவம் என்பார்கள். குழந்தைகள் நன்றாக செயல்பட துணையாக ஒருவர் தேவைப்படுவது போல முதிய வயதிலும் முழுமையாக செவ்வனே செயல்பட பிறர் உதவிகள் தேவைப்படுகிறது. ஆனால் எல்லா முதியோரும் ஒரே வகையில் இல்லை. அதாவது சிலர் 60 வயதிலேயே கால்கள் சோர்ந்து கைகள் ஆடி தளர்ந்து போய்விடுகின்றனர். சிலர் 70 அல்லது 75 வயதானாலும் நன்றாக நடந்து உலாவுவதை பார்த்திருப்போம். இத்தகைய மாற்றம் எல்லாம் அவர்களுடைய மூளையில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்றன என்று புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. வயது முதிர்கின்ற போது மூளையிலுள்ள வெண்நிற பகுதிகளில் ஏற்படும் மாற்றம் தான் அவர்கள் ஊன்றி நிற்பதிலான மற்றும் நடப்பதிலான சிக்கல்களை கொடுக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளனர்.

 

வயது மூப்புக்கு இணையான மூளையின் வெண்பகுதியிலான மாற்றம் பற்றிய நரம்பியல் நிபுணர்கள், முதியோர் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் குடும்ப மருத்தவர்கள் முதியோரை பெருமூளை சுருக்கம், புற்றுநோய், வலிப்பு மற்றும் மூளை நோய்கள் இருக்கிறதா என்றறிய மூளை வரிமம் செய்கின்றனர். முதியோரின் மனதளவிலான சிறிய அளவு கடினங்கள், நிலையற்ற தன்மை மற்றம் மன அழுத்தநிலை ஆகியவை மூளையிலுள்ள வெண்ணிறப்பகுதியின் தசைகளில் மாற்றம் ஏற்படுத்தும் என்பது அதற்கு காரணமாகும்.

 

இந்த ஆய்வு 639 முதியோரிடம் நடத்தப்பட்டது. 65 க்கும் 84 க்கும் இடையிலான வயதினருக்கு மூளை வரிமம் செய்ததோடு நடத்தல் மற்றும் நிலை குலையாமல் நிற்பது போன்ற சோதனைகளை செய்தனர். அதில் 284 பேர் குறைவான, 197 பேர் நடுதர மற்றும் 158 பேர் அதிகமான வெள்ளை நரம்பு தசையில் மாற்றங்களை பெற்றிருந்ததை அறிந்தனர். அதன் விளைவு என்ன தெரியுமா? குறைவான மாற்றம் பெற்றவர்களை விட அதிகமான மாற்றம் பெற்றவர்கள் சோதனைகளை இரண்டு மடங்கு மோசமாக செய்தோடு அதிகமாக நிலைகுலைந்து விழவும் செய்தனர். நடுதர மாற்றம் பெற்றிருந்தவர்கள் குறைவானவர்களை விட ஒன்றரை மடங்கு அதிகமாகவும் நிலைகுலைந்து விழுந்தனர்.

 

நடப்பதில் சிக்கல் மற்றும் நிலைகுலைந்து விழுவது எல்லாம் வெள்ளை நரம்பில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கின்ற அடையாளமாகும். நாள்தோறும் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்ச்சிகள் நமது இயக்கதோடு தொடபுடையதாய் இருப்பதால், அவை இவ்வித ஆபத்தை ஓரளவு குறைக்கும். நடப்பதில் ஏற்படும் சிக்கல் பலவித உடல்நல குறைவு தொடர்புடையதாய் ஆவது நிச்சயம். இந்த ஆய்வு நடத்தல் மற்றும் நிலைகுலையாமல் நிற்பது ஆகியவற்றிற்கும் வெள்ளை நரம்பின் மாற்றத்திற்கும் இடையே உள்ள தொடர்பை காட்டியுள்ளது. சிலவேளைகளில் தவறுதலாக இத்தகைய அறிகுறிகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களென பராமரிக்கப்படும் தன்மையும் தெளிவு படுத்தியுள்ளது.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.