இந்தோனேஷிய தீவான பாளியில் விஞ்ஞானஇ பொருளாதார துறைகள் ஆதிக்கம் செலுத்திவரும் ஐக்கியநாடுகள் காலநிலை மாற்ற மகாநாட்டில் பூமி வெப்பமடைவதால் ஏற்படக்கூடிய மற்றுமொரு பாரதூரமான விளைவு குறித்து புதியதொரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவதுஇ பாதுகாப்பற்ற அல்லது அச்சுறுத்தலுக்குள்ளான பகுதிகளில் மோதல்கள் அதிகரித்து வருவதாகும்.


காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது 21 ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய அமைதிக் கொள்கையாகும் என்று ஹபாதுகாப்பு அச்சுறுத்தலைத் தரும் காலநிலை மாற்றம்' என்ற தலைப்பில் உலக மாற்றம் தொடர்பான ஜேர்மன் ஆலோசனைச் சபை தயாரித்துவரும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் சுற்றாடல் திட்டப்பிரிவு உட்பட சர்வதேச நிபுணர்களினதும் ஸ்தாபனங்களினதும் செயற்பாடுகளிலிருந்து இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

 

உலகுக்கும் சமுதாயங்கள்இ நாடுகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கும் பல்வேறு சுற்றாடல் சவால்கள் தோன்றியுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டப் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எசிம் ஸ்ரீனரை மேற்கோள் காட்டி அப்பிரிவு வெளியிட்ட குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் காலநிலை மாற்றம் முதலிடம் வகிக்கிறது.

 

வாயுவெளியேற்றத்தை குறைப்பதற்கான திடமான கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு பாளியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் கலந்துகொள்ளும் அரசாங்கங்களிடம் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

 

எதிர்காலத்தில் மோதல்கள் இடம்பெறலாமெனக் கருதப்படும் பிரதேசங்கள் காலநிலை மாற்றம் காரணமாக விவசாயம் மிக மோசமாகப் பாதிக்கப்படும் பிரதேசங்களுடன் ஒத்திருக்கின்றன.

 

காலநிலைமாற்றம் காரணமாக ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் வெப்பநிலைஇ மழைவீழ்ச்சி ஆகியவற்றில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் இப்பிராந்தியங்களின் தானிய உற்பத்தி மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று தென்னிந்திய நகரான ஹைதராபாத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் ஆலோசனைக் குழுவின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் முன்னர் நடத்திய கூட்டத்தில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தார்கள்.

 

ஆசியாவின் பல வறிய நாடுகளில் அரிசியே பிரதான உணவுப் பொருளாக கொள்ளப்படுகிறது. உலக அரிசி உற்பத்தியில் 90 சதவீதத்தை நுகரும் ஆசிய நாடுகளில் உலக வறிய மக்கள் தொகையில் 70 சதவீதமானோர் வசித்து வருகிறார்கள் என்று பிலிப்பைன்சில் இயங்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி றெனியர் வொஸ்மன் ஹைதராபாத்தில் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

 

இந்தோ - கங்கை சமவெளியிலும் காலநிலை மாற்றம் காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று மெக்ஸிக்கோவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள சர்வதேச கோதுமைஇ சோள விருத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

 

இதேபோன்றுஇ தானிய உற்பத்தி வீழ்ச்சியின் தாக்கம் ஆபிரிக்காவின் சஹல் பிராந்தியத்திலும் உணரப்படும் என்று சர்வதேச விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் ஆலோசனைக்குழு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது உலகின் பல பகுதிகளில் வன்செயல்கள்இ மோதல்கள்இ யுத்தம் ஆகியன வெடிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் பதற்ற நிலையை உருவாக்கும் என்று புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று விவசாய விஞ்ஞானிகளும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

 

உணவு உற்பத்தி வீழ்ச்சிஇ நன்னீர் மாசடைதல்இ புயல்காற்றுஇ அதிகரித்த வெள்ள அழிவுகள்இ சுற்றாடல் சீர்கேடு காரணமான குடிப்பெயர்வு ஆகிய காலநிலை சம்பந்தப்பட்ட அனர்த்தங்கள் ஏற்படலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

சஹல் பிராந்தியத்தில் தென்னாபிரிக்காவின் வடக்குஇ தெற்கு ஓரங்களிலுள்ள நாடுகள்இ மத்தியத்தரை பிரதேசம் ஆகியவற்றிலும் கூடுதலான ஆபத்து எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்றும் மத்திய ஆசியாஇ இந்தியாஇ பாகிஸ்தான்இ பங்களாதேஷ்இ சீனாஇ கரீபியனின் சில பகுதிகள்இ மெக்ஸிகோ குடாஇ லத்தின் அமெரிக்காவின் அண்டிய அமேசன் பிராந்தியங்கள் ஆகியன ஆபத்தை எதிர்நோக்கும் பகுதிகளாகும்.

 

மதிப்பிடப்பட்டுள்ள தீவிர காலநிலை நிகழ்வுகள்இ அதிகரிப்பான வரட்சிஇ வெள்ளப்பெருக்குஇ நீர்ப் பற்றாக்குறை ஆகியன வறிய மற்றும் ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகளின் சமாளித்து நிருவகிப்பதற்கான ஆற்றலை விஸ்தரித்து சீரழிவுஇ வன்செயல் ஆகியவற்றுக்கும் வழிவகுக்கலாம் என்று அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

 

ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகள் அநேகமாக அரசியல் மாற்றம்இ குறைந்த பொருளாதார வளர்ச்சிஇ அதிக சனத்தொகை ஆகியன காணப்படும் நாடுகளும் வன்முறை மோதல்களை எதிர்கொள்ளும் நாடுகளின் எல்லையோரங்களில் அமைந்துள்ள நாடுகளாக இருக்கலாம் என்றும் அறிக்கை கூறுகிறது. அதிகரிப்பான வரட்சியும் நீர்ப்பற்றாக்குறையும் அதிக சனத்தொகை வளர்ச்சிஇ விவசாய வீழ்ச்சிஇ பாதிக்கப்பட்ட சில நாடுகளின் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க ஆற்றலின்மை ஆகியவற்றுக்கிடையிலான செயற்பாடுகளின் விளைவாக அரசியல் நெருக்கடிகளும் குடிப்பெயர்வு அழுத்தமும் ஏற்படலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

 

காலநிலை மாற்றம் யுத்தம் குறித்தும் கவலை அதிகரித்துள்ள வேளையில் இந்தப் புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருட ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இந்த விடயம் குறித்து விவாதித்து அவுஸ்திரேலியாஇ அமெரிக்காஇ பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளைப்பாறிய மற்றும் சேவையிலுள்ள சிரேஷ்ட இராணுவ நிபுணர்களால் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அதிகரித்த நெருக்கடிகளை ஆபத்தை எதிர்நோக்கும் பல்வேறு நாடுகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்று இந்த அறிக்கை விளக்குகிறது.

 

உதாரணமாகஇ ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள சோமாலியாஇ சாட்இ போன்ற நாடுகளுக்கும் சிவில் யுத்தம் நடைபெறும் சூடான்இ நைகர் போன்ற நாடுகளுக்கும் வரட்சிஇ விவசாய வீழ்ச்சிஇ நீர்ப்பற்றாக்குறை ஆகியவற்றால் மேலதிக அழுத்தம் ஏற்படும். இவற்றின் விளைவாக சூடானிலும் சாட்டிலும் பல இலட்சக்கணக்கானோர் அகதிகளாவர்.

 

தென்னாபிரிக்காவில்இ காலநிலை மாற்றம் உலகிலேயே வறிய நாடுகளாக விளங்கும் சிலவற்றில் பொருளாதாரத்தை பலவீனப்படுத்திவிடலாம்.

 

பங்களாதேஷ்இ இந்தியாஇ பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் துரிதமாக உருகிவரும் பனிப்படலம் காரணமாக அதிகரித்த வெள்ளப்பெருக்கும் மண்ணரிப்பும் ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்களின் நீர் விநியோகம் பாதிக்கப்படும்.

 

வங்காள விரிகுடாவில் கடல்மட்ட உயர்வினாலும் தொடர்ச்சியான சூறாவளிஇ புயல் ஆகியன காரணமாகவும் பிராந்தியத்தில் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். பங்களாதேஷிலிருந்து அகதிகள் வருவதை தடுப்பதற்காக இந்தியா ஏற்கனவே பங்களாதேஷ் எல்லையை மூடிவிட திட்டமிட்டு வருகிறது.

 

சீனாவில் காலநிலை மாற்றத்தினால்இ ஏற்கனவே இருந்துவரும் காற்றுஇ நீர் மாசடையும் பிரச்சினைஇ மணல் பாதிப்புஇ நீர்ப் பற்றாக்குறை ஆகியன மேலும் மோசமடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எஸ்.

நன்றி  தினக்குரல்