வீட்டு வளவுகளில் நடைபெறும் ஒரு கைத்தொழில் துறையாக இலங்கை கோழி வளர்ப்புத் தொழில் அண்மைய மூன்று சகாப்தங்களாக ஒரு வர்த்தக கைத்தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது.

 

1950 களில் இலங்கை அரசாங்கமானது நாட்டிற்குள் உள்நாட்டு கோழிகளின் சனத்தொகையை மேம்படுத்துவதற்கு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பித்தது.

 

 

அக்கால கட்டத்திலிருந்து இத்துறையானது தனியார் துறையின் அயராத ஈடுபாடு காரணமாக விசேடமாக புரொய்லர் பிரிவில் அதிக வளர்ச்சியுள்ளது. இன்று இக்கைத்தொழிலானது தனியார் துறையின் வசம் காணப்படும் அதேவேளை அரசாங்கத்தின் பங்கு கைத்தொழிலின் வலுவாக்கலுக்காக கோழி வளர்ப்புத் துறை சுகாதார சேவைகள் பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் கொள்கை அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றின் அமுலாக்கலை மேற்கொள்வது ஆகும்.

 

 

இலங்கையின் கால்நடை உபதுறையில் 70% பங்களிப்பு கோழி இறைச்சி மற்றும் முட்டையின் மூலம் ஈடு செய்யப்படுகிறது. நுகர்வாளர்களின் தற்போதைய கொள்வனவு மட்டங்களுக்கேற்ப கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் உள்நாட்டு மொத்த தேவையை நிவர்த்தி செய்யக் கூடிய கொள்திறனை இக்கைத்தொழில் கொண்டுள்ளது. ஏனைய விலங்கு உற்பத்திகளுடன் ஒப்பிடுமிடத்து கோழி இறைச்சியும் முட்டையும் மலிவாக கிடைக்கப் பெறுவதால் இன்று இலங்கையின் சராசரி உணவு வேளையில், அதிகளவில் நுகர்வு செய்யப்படும் விலங்குப் புரதமாக கோழி இறைச்சியும் முட்டையும் காணப்படுகின்றன.

 

கோழி இறைச்சியும் முட்டையும் நாடெங்கிலும் கிடைக்கப் பெறும் அதேவேளை இவை பிரதான நகரங்களில் காணப்படும் விசேட அல்லாடிகளிலிருந்து சாதாரண சில்லறைக்கடை வரை அனைத்து மட்டஙகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைய கோழி இறைச்சி முட்டை ஆகியவற்றின் கிடைப்பனவு முறையே 4.8 கிலோ கிராம் ஆகவும் 57 முட்டைகள் ஆகவும் காணப்படுகின்றன.

 

புரொய்லர் கைத்தொழிலானது அநேகமாக ஒன்றிணைக்கப்பட்டதுடன், ஒப்பந்த கோழி வளர்ப்பாளர் முறைமையினூடாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. வர்த்தக குறியிடப்பட்ட கோழி 15 பெரிய மற்றும் நடுத்தர புரொய்லர் பதனிடல் நிறுவனங்களின் ஊடாக சந்தைப்படுத்தப்படுகின்றன. பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளின் கைத்தொழிலானது ஏற்றுமதி இயலளவுடன் கூடிய ஒரு இலாபகரமான துறையாக மாறியுள்ளது. 04 நான்கு புரொய்லர் பதனிடல் நிறுவனங்களும், 05 ஐந்து ஏனைய பதனிடல் கம்பனிகளும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட HACCP முறைமையின் சான்றிதழைப் பெற்றுள்ளன.

 

இரண்டு 02 உள்நாட்டு பேரம் பெற்றார் பண்ணைகள் நாட்டின் பெற்றார் பறவைத் தேவையில் 70% ஐ வழங்குகின்றன. உள்நாட்டு தீவன உற்பத்தியாளர்களால் தரமான கோழித் தீவனங்கள் உற்பத்தி செய்யப்படும் அதேசமயம் இவை தவிர இரண்டு 02 பல் தேசியக் கம்பனிகளும் கோழித் தீவன உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், கோழித் தீவன உற்பத்திக்கு தேவையான உள்ளீடுகளில் 70% இறக்குமதி செய்யப்படுகின்றன. மூலப் பொருட்களின் விலை உலக சந்தையில் அதிகரித்து வருவதாலும் உயிரியல் எரிபொருளுக்கான சோளத்தைப் பயன்படுத்தும் திட்டத்தினால் உலக சந்தையில் ஏற்படும் தட்டுப்பாட்டிற்கு முகங் கொடுக்கும் நோக்கிலும் கால்நடை அபிவிருத்தி அமைச்சானது விவசாய அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வஙகியுடன் இணைந்து இலங்கையில் சோள வேளாண்மையை விருத்தி செய்வதற்கும் விரிவாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

சோள விவசாயிகளுக்கு சிறந்த உற்பத்தி விலையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், 2005 ஏப்ரலில் அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு 70% வரியை நிர்ணயித்தது. தனியார் துறையானது ஒப்பந்த விவசாயிகளின் உதவியுடன் சோள வேளாண்மையை மேற்கொள்வதில் அதிக அக்கறை செலுத்தி வரும் அதேவேளை இது கோழி வளர்ப்புத் துறையில் ஒரு சாதகமான விளைவை விரைவில் ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.livestock.gov.lk/livetamil/index.php?option=com_content&task=view&id=37&Itemid=51