முதல் தடவையா வீட்டுக்கு வரவங்களுக்கு இனிப்பு கொடுக்கனும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க. அதனால முதல்ல அவல் பாயசம்.

முதல்ல தேவையானதெல்லாம் எடுத்துக்கனும்

அவல் - 1 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

பால் - 1 கப்

நெய்

முந்திரி

திராட்சை


அரைக்க : தேங்காய் , ஏலக்காய்

முந்திரி & திராட்சையை நெய் விட்டு நல்லா வறுத்து எடுத்து தனியா வைக்கனும்

  • இன்னும் கொஞ்சம் நெய் விட்டு அவலை சிவக்க வறுக்கனும்.
  • பிறகு பால் சேர்த்து வேக வைக்கனும்.( தண்ணீர் வேண்டுமானால் சேர்க்கலாம்.
  • நன்றாக வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கரைந்தவுடன், அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வறுத்த முந்திரி & திராட்சை சேர்க்க வேண்டும்.

  

பாயசம் கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பால் சேர்க்கலாம்.

http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post.html