நொருக்கு தீன் தின்ன யாருக்குத்தான் விருப்பமில்லை. வாய்க்குள் போட்டு நொறு நொறுவெனக் கடித்து, அரைத்துச் சுவைக்க இது பொருத்தமான தீனிதானே.

தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு - 250கிராம்
சோம்பு - 2 தேக்கரண்டி
செத்தல் மிளகாய் - 4கறிவேப்பிலை - 5, 6 இலைகள்
அரிசிமா - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயப் பொடி - சிறிதளவு
பொரிக்க தேங்காய் எண்ணெய்
அல்லது சூரியகாந்தி எண்ணெய் - 2-3 கப்

செய்முறை

பருப்பை 4- 5 மணிநேரம் ஊற வைத்து வடித்து எடுக்கவும். சோம்பு, உப்புடன் பருப்பைச் சேர்த்து தண்ணீர் விடாது அரைத்து எடுக்கவும்.
அரிசிமா, பெருங்காயப் பொடி, சிறியதாக வெட்டிய செத்தல் மிளகாய், கறிவேப்பிலையையும் அதனுள் போட்டு பிசைந்து வைக்கவும்.
எண்ணெயைக் கொதிக்க வைத்து, கொதி வந்ததும் மாவைக் கையில் எடுத்து விரல்களுக்கிடையால் பிழிந்து விடவும்.
அடிக்கடி புரட்டி விடவும்.

மொறுப்பாக வந்ததும் எடுத்து ரிஸ்சு பேப்பரில் போட்டு, எண்ணெய் வடிந்து ஆறியதும் எடுத்துக் கொறிக்கவும்.

மிகுதி இருந்தால் காற்று புகாதபடி போத்தலில் அடைத்து வைக்கவும்.
http://sinnutasty.blogspot.com/2008/07/blog-post_27.html