போல் - தேங்காய்.

இது தேங்காய் துருவலினால் செய்யப்படுவது.


செய்வது சுலபம். சுவையோ அபாரம்.

இடியாப்பம், பருப்பு சோறு, பிரெட் எதனோடும் சாப்பிடலாம்.

 

 

 

 தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கப்

பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் 1 கப்

நறுக்கிய பச்சைமிளகாய் - 1

சில்லி ஃபேலேக்ஸ் அல்லது மிளகாய்ப்பொடி : 1 அல்லது 2 ஸ்பூன்

1 ஸ்பூன் - உப்பு,

மீடியம் சைஸ் எலுமிச்சையின் ரசம் - 2 ஸ்பூன்

மால்டிவியன் ஃபிஷ் (அதாங்க மாசித்தூள்) - 2 ஸ்பூன்.

(இது இல்லாமலும் செய்யலாம்)

செய்முறை:

மேற்சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தால்
மாசி சேர்த்த போல் சம்பல் ரெடி.

அன்புடன் புதுகைத் தென்றல்