தேவையான பொருட்கள்:

தக்காளி - 500 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
பூண்டு - 20 பல்
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
நல்லெண்ணெய் - 3/4 கப்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

 

 

 

இஞ்சியை தோல் சீவிக் கொள்ள வேண்டும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு இரண்டையும் அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தக்காளியை போட்டு, அதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் வேக வைத்து, தோல் சற்று சுருங்கியவுடன் எடுத்து விட வேண்டும்.

பிறகு தக்காளியின் தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு 30 நொடி கிளறி விட வேண்டும்.

கிளறிய பின்பு, அதில் அரைத்து எடுத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி மேலும் ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.

அதன் பின்னர் ஒரு நிமிடம் கழித்து தக்காளி விழுதுடன் மசாலா எல்லாம் ஒன்றாக கலந்ததும் ஒரு தட்டை வைத்து 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

15 நிமிடம் கழித்து, தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே வரும்பொழுது கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டும். இது ஒரு வாரம் வரைக்கும் கெடாமல் இருக்கும்.

http://www.keetru.com/recipes/veg/tomato_tokku.php