மனிதம் நாள்தோறும் சந்தித்த, சந்திக்கின்ற அவலத்தை, மிக குறுகியகால இடைவெளியில் ஒரு சிறிய ஆவணமாக தயாரித்தளிக்கின்றோம். தேசியம், ஜனநாயகம் என எல்லாம் படுகொலை அரசியலாகி, பாசிமாக தலைவிரித்தாடுகின்றது. நாள்தோறும் படுகொலைகள்.

 

இதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.

 

 

ஆனால் இது எம் மக்களின் சொந்த அவலவாழ்க்கை. அவர்களின் கண்ணீருக்கும், கதறலுக்கும் இடையில், வாழ்தல் தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக போராட இதன் மூலமும் அழைக்கின்றோம்.

 

மேலும் இது போன்று, மனிதம் சந்தித்த பல ஆவணங்களை தர உங்கள் ஒத்துழைப்பையும், உங்கள் கருத்துக்களையும் கோருகின்றோம்.