10192021செ
Last updateச, 09 அக் 2021 9am

சிந்திக்கத் தெரியாத மக்கள் மந்தைக் கூட்டங்கள்....

மாற்றம் இல்லாத வாழ்க்கையையும், மாறுதல் சிந்தனைகள் இல்லாத மக்களையும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள் என்று சொல்வார்கள். 2600 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது புத்தர் பிறப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்பு தோன்றிய சீனத்தத்துவஞானி லாட்சு அவர்கள் மக்களை முட்டாள்களாகவும், பகுத்தறிவுச் சிந்தனை இல்லாதிருப்பவர்களாகவும் இருப்பதைக் கண்டு மக்களை மந்தைக்கூட்டங்கள் என்று ஒரு கவிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் தத்துவங்களும், கவிதைகளும் சீனஞானம் என்று சீனா போற்றுகிறது. ஞானி "லாட்சு டெள டே ஜிங்" என்ற கவிதைகள் 81 தொகுப்புகள் மிகச் சிறப்பு வாய்ந்தவைகளாகும். அதில் ஒரு கவிதை....

மனப்பாடம் பண்ணுவதா கல்வி..?

வேண்டாம் இந்த வெட்கக்கேடு..!

அனுசரித்துப் போதலும்...

அடிபணிதலும் ஒன்றுதானா..?

நன்மைக்கும், தீமைக்கும்...

வித்தியாசமில்லையா...?

எல்லோரும் போற்றுவதை...

நாமும் போற்ற வேண்டுமா...?

என்ன நியாயம் இது...?

என்ன பேதைமை...!

மந்தைக் கூட்ட மனோபாவம்...

வளர்கிறது, விரிவடைகிறது...

மந்தையுடன் நடப்பதில்...

விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி...!

வசந்த காலத்தில் திறந்தவெளியில்...

காற்று வாங்கும் சுகம்...!

இந்தக் கூட்டத்தில்...

எனக்கு வேலை இல்லை...

நான் சேர்வதில்லை...!

நானோ இன்னும் சிரிக்கத் தெரியாத...

பிறந்த குழந்தை போல்...!

சாதாரண மக்களுடன் தொடர்புமில்லை...!

வேறேங்கும் போக...

எனக்கு இடமுமில்லை...!

சாதாரண மக்கள் புத்திசாலிகளாக...

அறியப்பட்டவர்களாக...!

நானோ மந்த புத்திக்காரனாய்...

ஊர் பேர் இல்லாதவனாய்...!

சாதாரண மக்கள் சாமர்த்தியசாலிகளாய்...

எல்லாம் அறிந்தவர்களாய்...!

நானோ அடங்கிய நிலையில் அபாக்கியவானாக...

நானோ கடல் போல...

யாரையும் சட்டை செய்யாமல்....

காற்று போல எங்கும் நிற்காமல்...!

மந்தைக்கூட்டமோ எங்கும் எங்கும் நிறைந்தது...

நான் என் ஆசைகளினால் வேறுபட்டவன்....!

அன்னை என்னை ஊட்டி வளர்க்கிறாள்....

அதுதான் என் பாக்கியம்...!!!

http://thamizachi.blogspot.com/2008/04/blog-post_1854.html