Language Selection

சூரியன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஊர் பக்கம் சிலரை குறிக்க 'மழுங்கப்பயல்' என்கிற சொல்லை மக்கள் பயன்படுத்துவார்கள்,அதாவது எவ்வளவு தான் திட்டினாலும் செய்ததையே திரும்பத்திரும்ப‌ செய்து திட்டு வாங்கி வாங்கி அவனுக்கு சுத்தமாக மழுங்கிப்போயிருக்கும்.எந்த ஏச்சும், பேச்சும் அவனுக்கு சுரீர் என்று சுடாது.அதைப்போல தமிழ் நாட்டில் ஒரு மழுங்கப்பய கட்சி இருக்கு,என்னடா இது தமிழ் நாட்டுல அப்படி ஒரே ஒருக்கட்சி தான் இருக்கான்னு நீங்க கேட்கிறது புரியுது,ஆமாம் சுத்தமான, நூறு சதவீதம் கலப்படமேயில்லாத‌ மழுங்கப்பய கட்சி தமிழ் நாட்டுல ஒன்னே ஒன்னு தான் இருக்கு. அது தான் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி.
ஏன் மற்றவனெல்லாம் இல்லையா, எல்லாம் தமிழ் நாட்டில் தானே இருக்கிறாங்க‍ என்று சந்திப்பும் அவரைப்போன்றவர்களும் கேட்க்கக்கூடும்,அவனுங்களும் இருக்கானுங்க ஆனால் அந்த ஓட்டுப்பொறுக்கிக்கெல்லாம் திட்டினால் கொஞ்சமாவது சொரணை வருது, தி.மு.க காரனும்,அ.தி.மு.க காரணும் கொஞ்மாவது கோபப்படுறான், குறைந்தபட்சம் எதையாவது ஒரு பதிலை சொல்றான் ஆனால் எவ்வளவு தான் திட்டினாலும்,கொஞ்சம் கூட சூடும் இல்லாம, சொரணையும் இல்லாம இருக்குற ஒரே ஒட்டுப்பொறுக்கிக்கும்பல் CPM மட்டும் தான்.


க‌ர்நாட‌காவில் ப‌ன்னாட்டு முத‌லாளிக‌ளுக்கு மாமா வேலை பார்க்கும் வாய்ப்பு இந்த முறை பா.ஜ.க பயங்கரவாதிகளுக்கு கிடைத்துவிட்டது, உடனே பொங்கியெழுந்துவிட்ட CPM புழுக்கள் பல ஒன்று கூடி இதைப்பற்றி மத்தியக்குழுவில் விவாதித்து, விலைவாசி உயர்வை பயன்படுத்திக்கொண்டு மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

ச‌ரி, பா.ஜ‌.க இப்போது ஆட்சிக்கு வந்தால் என்ன தான் ஆகிவிடும் ?

 

ஏன் இந்த புழுக்கள் இப்படி பதறிப்போகின்றன என்று கேட்டால். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மதவாதம் தலைதூக்கும், மதவெறியாட்டம் துவங்கிவிடும் எனவே தன் நாங்கள் பா.ஜ.க வை தலை தூக்கவிடாமல் காங்கிரஸை ஆதரிக்கிறோம் என்கிறார்கள் இந்த போலி கம்யூனிஸ்டுகள்.
இந்த் யோக்கிய‌ர்க‌ளின் ம‌த‌வாத‌ எதிர்ப்பு எவ்வ‌ள‌வு உண்மையானது தெரியுமா? காங்கிரசு தேசபக்த இயக்கம் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு உண்மையானது.


பா.ஜ‌.க‌ விற்கு மாற்றாக‌ இவ‌ர்க‌ள் முன் நிறுத்தும் காங்கிர‌ஸின் நான்காண்டு ஆட்சியில் எந்த‌ ம‌த‌வெறியாட்ட‌மும் ந‌டைபெற‌வில்லையா?

வ‌ரிசையாக‌ ஒவொன்றாக அடுக்குமளவிற்கு நடந்துள்ளது,ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக‌, ரத்தக்களரியான ஒரு மதவெறி வ‌ண்முறையை விட‌ ப‌ன்ம‌ட‌ங்கு கூடுத‌லாக‌வும்,அதன் உச்சத்தையும் தான்டிவிட்ட ஒரு நிகழ்வு நடந்தது. இந்துமதவெறி பயங்கரவாதிகள் என்றுமே தாம் செய்ததை ஒப்புக்கொண்டதே இல்லை.ஆனால் இந்த ஐக்கிய 'முற்போக்கு' கூட்டணியின் ஆட்சியில் ஃபாசிஸம் தன் சொந்த மொழியில் தான் செய்த அணைத்தையும் துனிச்சலோடு பேசியது.

குஜ‌ராத் 2002 இன‌ப்ப‌டுகொலைக‌ளை எப்ப‌டி அர‌ங்கேற்றினோம்,ஒரு குழந்தையை எப்படி பீஸ்,பீஸாக வெட்டியெறிந்தோ‌ம்,க‌வுச‌ர் பானுவின் வ‌யிற்றிலிருந்த சிசுவை எப்படி வெளியே எடுத்து சிதைத்த‌ பின்னர் எரித்தோம்,முசுலிம் பெண்களை எப்படியெல்லாம் கற்பழித்தோம்,இக்ஷான் ஜாஃரியை [காங்கிரசு எம்.பி] எப்படி எரித்துக்கொண்றோம் என்று வ‌ரிசையாக‌ பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ கும்ப‌ல் த‌ன‌து வ‌க்கிர‌ வெறியாட்ட‌ங்க‌ளை குரூர‌மாக‌ விவ‌ரித்த‌தை நாம் அனைவ‌ருமே பார்த்தோம்,ப‌டித்தோம்.

மேற்கூறிய‌ அணைத்தும் பா.ஜ.க ஆட்சியிலா ந‌ட‌ந்த‌து?

பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ரவாதிகளின் இந்த‌‌ வ‌க்கிர‌ வாக்குமூல‌ங்க‌ள் அணைத்தும் பா.ஜ‌.க‌ விற்கு மாற்றாக‌ இந்த‌ போலிக‌ள் முன் நிறுத்திய‌ காங்கிர‌சின் ஆட்சியில் தானே நடந்த‌து? இந்தளவிற்கு துனிச்சலாகவும்,திமிராகவும் இந்த‌ ஃபாஸிஸ்டுகள் இந்த ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்துக்கொண்டிருந்த போது இந்த‌ ப‌ன்றிகள் என்ன‌ பாராளும‌ன்ற‌ கழிவறையிலா தூங்கிக்கொண்டிருந்தார்கள் ? மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் காம்ரேடுகள் கேள்வி கேட்டு பாராளுமன்ற‌ அவையை ஒரு வழி பன்னியிருக்கலாமே, R.S.S,V.H.P போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தே ஆக வேண்டும் இல்லை என்றால் நடக்கிறதே வேற என்று வழக்கம் போல‌ உங்க மன்மோகன் மாமா தாடியை பிடித்து தொங்கியிருக்கலாமே ஏன் எதையுமே செய்யவில்லை?
 மதவெறியர்களின் முகத்தை தெகல்கா இவ்வளவு அப்பட்டமாக கிழித்துக்காட்டிய பிறகும் இன்று வரை அந்த பயங்கரவாத கூட்டத்தின் கொடிய மிருகமான மோடியோ,பாபு பஜ்ரங்கியோ கைது செய்யப்படவில்லை, மாறாக மோடி பாதுகாப்பாக உன்னுடைய ஆட்சி நடக்கும் கேரளாவிற்கே வந்து போகிறான், இது போன்ற ஒரு மிருகம் நம் கண் எதிரில் உயிரோடு நடமாடிக்கொண்டிருப்பதே நமக்கு அவமாண‌மாக,வெட்க்கக்கேடாக இருக்கிறது,ஆனால் இந்தCPM போலிகள், அந்த பயங்கரவாதிகள் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற அவையிலேயே வெட்கமின்றி,மானமின்றி பல்லை இழித்துக்கொண்டு அவர்களுகளோடு கை குலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.மதவாத சக்திகளுக்கு மாற்றாக இந்த போலிக்கம்யூனிஸ்டுகள் தலையில் வைத்து கூத்தாடும் காங்கிரசு அரசு இவ்வளவு நடந்த பிறகும்,ஒரு இன அழிப்பு பயங்கரவாத நடவடிக்கை அப்பட்டமாக‌ நடந்த பிறகும் இந்த மனிதகுல விரோத‌ ஃபாசிஸ பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர்களுடைய‌ ஒற்றை மயிரை பிடுங்கக்கூடத் துனியவில்லை. நீ முட்டுக்கொடுக்கும் அரசை வைத்துக்கொண்டு மதவாத சக்திகளுக்கு எதிராக உன்னால் எதையுமே செய்ய‌ முடியவில்லை என்றால் பிறகு எதை புடுங்குற‌துக்காக‌ காங்கிரசுக்கு புரோக்கர் வேலை பார்த்து தூக்கிப்பிடிச்சிட்ருக்க?

தன்னுடைய கட்சி எம்.பி யையே காப்பாற்ற முடியாத காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் ஆறு வித்தியாசங்களையாவது இந்த போலிக்கம்யூனிஸ்டுகளால் சொல்ல முடியுமா ?
ரொம்பக்கஸ்டம் தான்.

கடைசியாக‌ பார்ப்பன பயங்கரவாத கும்பல் இவ்வாறு சொரணையற்றிருக்கும் போலிகளின் நடு மண்டையிலேயே நச்சென்று ஒரு போடு போட்டுள்ளது,தில்லியிலுள்ள‌ தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது,மத்தியக்கமிட்டி உறுபினர்கள் ஆறு பேருக்கு பலத்த காயம், யெச்சூரியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. சரி அதன் பிற‌காவது சொரணை வந்ததா என்று கேட்டால் அது மட்டும் வரவே இல்லை.


இந்த போலிகள் கூறுவதைப்போல அவன் ஆட்சிக்கு வந்தால் தான் ஆபத்து என்பதே ஒரு பொய்.
இந்துமத‌வெறி பயங்கரவாதிகள் வெறியாட்டம் போட பார்ப்பன‌ பா.ஜ.க ஆட்சி தான் இருக்க‌ வேண்டும் என்பதில்லை,காங்கிரசின் ஆட்சியிலேயே அவர்கள் செய்யவேண்டிய அணைத்தையும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒரிசா தேவாலையம் தகர்க்கப்பட்டது, தெகல்கா அம்பலப்படுத்தல்கள்,ராமர் பாலம்,போலி கம்யூனிஸ்டுகளின் அலுவலகம் தாக்கப்பட்டது,இந்து மதவெறியர்களே வைத்த குண்டுகள் என்று வரிசையாக பார்ப்பன பயங்கரவாதம் விசமாக பரவிக்கொண்டு தான் இருக்கிறது.காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் அப்படி என்ன தான் வேறுபாடு,ஒரு வேளை போலிக்கம்யூனிஸ்டுகள் சொல்வதைப்போல வேறுபாடுகள் இருக்குமோ? ஆமாம், காங்கிரசு ராம் என்றால், பா.ஜ.க‌ ர்ர்ராம்
ர்ர்ராம் என்கிறான். பா.ஜ.க வெறியன் இரத்தம் பீரிட குடலை உருவினால்,

காங்கிரசுக்காரன் உருவாமலே கதையை முடித்துவிடுகிறான்.மொத்தத்தில் பா.ஜ.க வன்முறையின் களத்தில் நிற்கிறான் காங்கிரசு அவ்வாறு நிற்பதில்லை இது தான் CPMன் அவிந்து போன கண்களுக்கு தெரிந்த மாபெரும் வேறுபாடு போலிருக்கிற‌து. மேலும் CPM பேசும் மதச்சார்பின்மை என்பதும் ஆகக்கடைந்தெடுத்த ஒரு பொய் தான். இந்த போலிகளின் ஆட்சி நடக்கும் மே.வங்கத்திலிருந்து எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் வெளியேற்றப்பட்டது இவர்களின் போலி மதச்சார்பின்மைக்கு சமீபத்திய உதாரணம். மதவாத எதிர்ப்பு என்பதும் கூட வெறுமனே புரியாமல் கத்துவது தான்,பொதுவாக மதவாதம், மதவாதம் என்பதே ஒரு பித்தலாட்டம்.அதை தெளிவாக வரையறுத்து "பார்ப்பனியம்" என்று சொல்வதற்கே துடை நடுங்கும் இந்த கோழைகள் தான் அதை வீழ்த்தப்போகிறார்களாம்.

பார்ப்பனியத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் சாதியை பற்றி ஒரு தெளிவு வேண்டும் ஆனால் எண்பது ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் புரட்சி வந்த பிறகு சாதியெல்லாம் ஒழிந்து விடும் தோழா என்கிற பேச்சை விட்டொழித்துள்ளார்கள் இந்த‌ போலிகள். எனவே இவர்களின் மதவாத எதிர்ப்பு என்பதே ஒரு முற்போக்கு முகமூடி அணிந்த ஓட்டுப்பொறுக்கியின் பொய்யை ஒத்தது தான்.

கர்நாடகாவில் பா.ஜ.க பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள் என்றால் பா.ஜ.க‌ நம்ம கட்சி,இந்துகளின் கட்சி என்று நம்பியெல்லாம் மக்கள் வாக்களிக்கவில்லை,மாறாக காங்கிரசு கைக்கூலி கும்பல் நடைமுறைப்ப‌டுத்தும் மறுகாலனியாதிக்க கொள்கைகளின் மீதான வெறுப்பு தான் பா.ஜ.க வை தேர்ந்த்தெடுத்துள்ளது.விலைவாசி உயர்வை பயன்படுத்தி மதவாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்று ஊளையிடும் CPM அங்கே ஆட்சியை பிடித்திருக்க வேண்டியது தானே,ஆட்சியை பிடிப்பது கூட இருக்கட்டும்,கேவலம் என்னவென்றால் கர்நாடகாவில் இந்த CPM போலிகள் ஒரே ஒரு சீட்டைக் கூட வெற்றி பெறவில்லை.


பா.ஜ.க கும்பலும் இன்று காங்கிரசு அமல்படுத்திக்கொண்டிருக்கும் தனியார்மய,தாராளமய,உலகமய கொள்கைகளை தான்

அமல் படுத்திக்கொண்டிருந்தது, கூடவே வக்கிரமாக இந்தியா ஒளிர்கிறது என்றும் சொன்னது அதன் பிறகு நடந்த தேர்தலில் பா.ஜ.க‌ வீட்டிற்கு அனுப்பப்பட்டது.தற்போது கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி வந்துள்ளது காங்கிரசு புறக்கணிக்கப்பட்டுள்ளது, இதை வெறுமனே காங்கிரசு என்று மட்டும் சொல்ல முடியாது, காங்கிரசின் கொள்கைகள் என்றால் அவனுக்கு தோள்கொடுத்து தாங்கி நிற்கும் போலிகளுடையதும் தான். எனவே போலிகளும் தான் ம‌க்களால் புற‌ந்தள்ளப்பட்டுள்ளார்கள்.கர்நாடகாவில் காங்கிரசின் நிலமை இதுவென்றால் மே.வங்கத்தின் உள்ளாட்சி தேர்தலில் இந்த‌ CPM போலிகள் படு தோல்வியடைந்துள்ளார்கள்.இந்த அரசியல் நிலைமைகளின் மாற்றம் ஏதோ விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்பட்டதைப்போல இவர்கள் சித்தரிக்கிறார்கள்.எனவே விலைவாசி உயர்வை பயன்படுத்தி தான் பா.ஜ.க‌ ஆட்சிக்கு வந்துவிட்டது என்றும் சொல்லித்திரிறார்கள்.
ஆனால் உண்மை அது மட்டுமா? அது மட்டுமல்ல மக்களை மரணக்குழிக்குள் தள்ளும் தனியார்மய,தாராளமய,உலகமய கொள்கைகள் தான் இந்த ஆட்சி மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணம்.விலைவாசி உயர்வு தான் காரணம் என்றால் கூட அது CPMக்கு தெரியாமல் மன்மோகன்சிங் வீட்டுக்கொல்லைப்புற வழியாகவா கொண்டுவரப்பட்டது,

CPM முட்டுக்கொடுக்கும் இந்த‌ ஆட்சியில் விலைவாசி உயர்கிறது என்றால் அதற்கு இந்த போலிக்கம்யூனிஸ்டுகளும் தான் காரணம்.

இத்தனை ஆண்டுகளாக ஆண்டு வந்த மே.வங்கத்தில் ஏன் தோழா தோல்வியடைந்தீர்கள்? கர்நாடகாவில் பா.ஜ.க ஏன் வெற்றி பெற்றது? இவை இரண்டும் தொடர்பற்ற இரண்டு விசயங்களா?
நீங்கள் 'முற்போக்காக' கூட்டணி வைத்துள்ள மாமா கும்பலோடு சேர்ந்து அமல்படுத்தி வரும் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயத்தின் விளைவு இப்படித்தான் இருக்கும். நாட்டைக்காட்டிகொடுக்கிற‌ இந்த அரசியலில் அப்பப்ப நடுவில் வந்து கோமாளி மாதிரி, நாங்க அதை எதிர்க்கிறோம், இதை எதிர்க்கிறோம்,வெளியே போயிருவோம்னு வாய்ச்சவடால் வேற.

அதான் வெத்தலப்பொட்டிக்காரன் மூட்ட முடிச்சக் கட்டிக்கிட்டு கிளம்புடான்னு சொல்லிட்டான்ல்ல அப்புறமும் ஏன் சொரணையே இல்லாம அவன் குண்டிக்கு பின்னாடி போய் நிக்கிற
.
மானம்னு ஒன்னு இருந்தா மாமா சிதம்பரம் உலகச்சந்தையில இந்தியாவ கூறு ரெண்டு ரூவாய்ன்னு விக்கிறப்பவே வெளியேறியிருக்கனும்.இன்னமும் ஜவ்வுமிட்டாய் மாதிரி இழுத்துக்கிட்டு,புலி வருது புலி வருதுன்னு ஊர ஏமாத்துர கதையை இன்னும் எத்தனை நாளைக்கு தான் சொல்றன்னு நாங்களும் பார்க்கிறோம்.

இந்த ஆட்சி மாற்றத்திற்கான அணைத்து காரணங்களும் இந்த‌ போலிக்க‌ம்யூனிஸ்டுகளுக்கு நன்றாகத் தெரியும்,தெரிந்தும் தமது தவறுகளை மூடி வைக்கப்பார்க்கிறார்கள் அதை மறைக்க மேலும் மேலும் பல பொய்களை சொல்லி ஆளும் கும்பலின் அடிவருடிகளாகி மக்களின் துன்பங்களுக்கு காரணமாக இருப்பதை நீண்ட நாட்களுக்கு இவர்கள் மறைக்க முடியாது என்பதை நாளுக்கு நாள் அம்பலப்படுத்திவரும் நிலைமகள் பருண்மையாக‌ உணர்த்தினாலும் அது இவர்களுக்கு உரைக்காததால் தான் இவர்களை மழுங்கைகள் என்கிறோம்.


ஒரு பத்து வருடங்களை மனதில் ஓட்டிப்பாருங்கள்.

விவசாயம் செய்ததாலேயே ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போய் விட்டார்கள்.தாக்குப்பிடித்து நிற்கும் விவசாயிகளின் விளை நிலங்கள் அணைத்தும் பிடுங்கப்பட்டு நாளும் நகரங்களுக்கு கூலிகளாக விரட்டப்படுகிறார்கள், நம்முடைய‌டைய‌ 80கோடி உழைக்கும் மக்கள் அன்றாடம் அரை வயிற்றோடு உறங்குகிறார்கள், பல பொதுத்துறை நிறுவணங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளிகள் வீதிகளில் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்,40கோடிக்கும் அதிகமான இந்திய இளைஞர்கள் நிரந்தர‌ வேலை இல்லாமல் அலைகிறார்கள் ,பல லட்சம் இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில்[ஐ.டி மேன்மக்கள் அல்ல] மனிதத்தன்மையற்ற முறையில் உழைப்பு உறிஞச‌ப்பட்டு சக்கையாக்கப்படுகிறார்கள், கோடிக்கணக்கான நம்முடைய‌ சகோதரிகள் திருமணம் செய்வதற்காகவே அடிமைகளாக உழைத்து தேய்கிறார்கள்,இந்திய கோதுமை விவசாயிகள் டன் கணக்கில் உற்பத்தி செய்தும் அரசு கொள்முதல் செய்யாத‌தால் போண்டியாகிறார்கள்,கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாக இருந்த‌ சிறுதொழில்களுக்கு தாராளமயம் மொத்தமாக சமாதி கட்டிவிட்டது,லட்சக்கணக்கில் நடைபாதை வண்டிக்கடைகள் நகரங்களிலிருந்து குப்பையைப்போல தூக்கி எறியப்படுகின்றன

ஆனால் இன்னொரு பக்கம் அம்பானி என்கிற அட்டைப்பூச்சி 8000 கோடி ரூபாயில் மும்பையில் ஒரு வீட்டைக்கட்டிக்கொண்டிருக்கிறான்!அம்பானி என்கிற பணக்கொழுப்பெடுத்த நாய் 8000கோடிக்கு வீடு கட்டுகிறது என்றால் அது எப்படி வந்த பணம்,யாருடைய பணம்? இதெல்லாம் ஏன் நடக்கிறது எப்படி நடக்கிறது என்று துரோகியாகிவிட்ட‌ இந்த CPMக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும்,
இந்த மக்களின் இத்தனை துண்பங்களுக்கும் இந்த போலிக்கம்யூனிஸ்டு துரோகிகள் துணை நின்றிறுக்கிறார்கள்,தற்போதும் மக்களை மரணக்ககுழிக்குள் தள்ளும் ஏகாதிபத்தியக்கைகூலிகளின் மறுகாலனியாக்கக்கொள்கைகளுக்கு துணை நிற்கிறார்கள்.

எதிரிகளை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தலாம், மக்களை உணர்வூட்டி அரசியல் படுத்தலாம்,இது போன்ற நிழல் (virtuals ) பிம்பங்களைஎன்ன செய்வது?

சிவப்பு நிறத்தில் ஒளியும் துரோகத்தை குழி தோண்டி தான் புதைக்க வேண்டும்.

அப்பாவி மக்கள் இவற்றையெல்லாம் தன்னுடைய விதி என்று மனம் வெந்து வெதும்பிப் புலம்புவார்கள்,ஆனால் புரட்சியாளர்கள் அந்த மக்களை அதே நிலையில் விட்டுவைக்கமாட்டார்கள். அவர்களின் துணை கொண்டே துரோகத்தை புதைப்பார்கள்.

இறுதி மூச்சை இழுத்துக்கொள் துரோகமே
உன் படபடப்பில் அழிந்து போ,
அறண்டு கண்ணீர் விடு,
கண்களையும், காதையும் பொத்திக்கொள்
இனி நீ கானும் காட்சிகள் உவப்பாயிருக்காது
வார்த்தைகளே கொன்று விடும்,
தலைதெறிக்க‌ ஓடு, ஒடிப்போய் விழு உனக்கான குழியில்!

கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு எந்த நாயால் இந்த நிலைமைகள் உருவானது?