Language Selection

புதிய ஜனநாயகம் 2005

03_2005.jpgஆந்திர மாநில அரசாங்கத்துக்கும், இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் நீடிக்கும் என்றோ, அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் என்றோ எந்தத் தரப்புக்கும் நம்பிக்கை இருந்ததில்லை.

இரு தரப்பும் சண்டை நிறுத்தம் அறிவித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அது ஒரு குறுகிய காலமே அமலில் இருந்தது. பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் நடக்கும்போதே சண்டை நிறுத்தத்தை மீறி, நக்சலைட்டுப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்வதில் போலீசும், இரகசியக் கொலைபடைக் குழுக்களும் இறங்கிவிட்டன. பதிலடி கொடுக்கும் முகமாக, இ.க.க. (மாவோயிஸ்ட்)களும் போலீசு உளவாளிகளையும், துரோகிகளையும் அழித்தொழிப்பதைத் தொடங்கிவிட்டனர்.

ஒரு சுற்று மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து, குறைந்தபட்ச உடன்பாடு எதுவும் காணாமல் கலைந்து போய் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புகளை மறுதலிக்கும் வகையிலான நிபந்தனைகளை இரு தரப்புமே விதித்துள்ளன.

'நக்சலைட்டுகள் காடுகளை விட்டு வெளியேவரும்போதும், அரசியல் பிரச்சாரங்களின் போதும் ஆயுதங்களை ஏந்தியிருக்கக் கூடாது, மக்கள் நீதிமன்றங்களுக்கு அதிகாரிகள் வரவேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது" என்று முதற் சுற்று பேச்சுவார்த்தையையொட்டி ஆந்திர அரசாங்கம் விதித்திருந்த நிபந்தனையை இப்போது மேலும் இறுக்கி இருக்கிறது.

'நக்சலைட்டுகள் ஆயுதங்களைக் களைந்துவிட வேண்டும், அரசியல் சட்டத்துக்குட்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்" என்று இப்போது புதிய நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதோடு, சட்டம்ஒழுங்கைப் பாதுகாக்கவும் நிலைநாட்டவும் அதிகாரம் கொண்ட ஒரே அமைப்பான போலீசு, தன் கடமையைச் செய்வதை யாரும் தடுக்கக் கூடாது என்று போலீசும் அரசாங்கமும் கடுமையாக எச்சரித்திருக்கின்றன. இவை இரண்டும் இருவேறு நாக்குகளில் பேசிப் பித்தலாட்டம் செய்து வந்ததைக் கூடக் கைவிட்டு, ஒரே குரலில் அரசு பயங்கரவாதக் குரலில் மிரட்டுகின்றன. இதன் மூலம் சண்டை நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையையே தகர்த்து விட்டன.

அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு நக்சலைட்டு புரட்சியாளர்கள் விதித்துள்ள நிபந்தனைகள் நியாயமானவை என்ற போதிலும், அவற்றைப் போலீசும் அரசாங்கமும் ஒருபோதும் ஏற்று அமலாக்கமாட்டா என்பது அவர்களுக்கே நன்கு தெரியும். 'போலீசுடன் மோதல்" என்ற பெயரில் நக்சல்பாரிப் புரட்சியாளர்களைப் போலீசும், இரகசியக் கொலைக் குழுக்களும் கொன்றொழிப்பதை உடனே நிறுத்த வேண்டும்; அவை தமது தேடுதல் வேட்டையை நிறுத்துவதோடு, 'என்கவுண்டர்" கொலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

ஆனால், ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வேண்டுகோள் விடுத்துக் கொண்டே, மறுபுறம் போலீசை ஏவி நக்சலைட்டு புரட்சியாளர்களைப் படுகொலை செய்யும் இரட்டை நாடகமாடும் தந்திரத்தை ஆந்திர அரசாங்கம் பின்பற்றுகிறது. ஆந்திர நக்சலைட்டுப் புரட்சியாளர்களுக்கு இதுவொன்றும் புதிய அனுபவமல்ல. ஏற்கனவே, சென்னாரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆட்களின் போதும் இப்படித்தான் நடந்தது. இது ஆந்திர ஆட்சியாளர்களுக்கு மட்டுமே உரியதும் அல்ல. வடகிழக்கு இந்தியாவில் தேசிய இன விடுதலைப் போராளிகளுடன் பல ஆண்டுகளாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இராணுவ பாசிச வெறியாட்டமும் தொடர்கிறது.

நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் இயக்கம், தேசிய இன விடுதலை கோரிக்கை போன்றவை சமூக விரோதிகளால் எழும் சட்டம்ஒழுங்குப் பிரச்சினைகள் என்றுதான் ஆளும் வர்க்கங்களாலும் ஆட்சியாளர்களாலும் எப்போதும் சித்தரித்துக் கையாளப்படுகின்றன. ஜனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று திரளும் அறிவு ஜீவிகள் (!) இவை சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல, சமூகப் பொருளாதாரப் பிரச்சினை என்று கண்டுபிடிக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் இன்றிப் பின்தங்கிய நிலை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக, பொருளாதாரக் காரணங்களால் எழும் பிரச்சினையாகப் பார்த்து அவற்றில் முன்னேற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கோருகிறார்கள். இந்தக் கண்டுபிடிப்புக்கு ஏற்ப, வட்டார வளர்ச்சித் திட்டங்கள் வகுப்பது, போலீசு, தேவையானால் இராணுவ ஒடுக்குமுறையை ஏவிவிடுவது என்ற அணுகுமுறையை அரசு மேற்கொள்கிறது.

ஆனால், இவை சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் அல்ல் சமூகப் பொருளாதாரப் பிரச்சினையும் அல்ல் முதன்மையாக அரசியல் பிரச்சினையாகும்; அரசியல் அதிகாரம் பற்றிய பிரச்சினையாகும். அதனால்தான் ஆயுதங்களைக் களைவது, அரசியல் நிர்ணய சட்டத்துக்குட்பட்டுத் தீர்வு காண்பது என்ற இரு நிபந்தனைகளில் ஆளும் வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் அசையாது ஊன்றி நிற்கிறார்கள்.

நக்சலைட்டுப் புரட்சியாளர்களுக்கும், தேசிய இனப் போராளிகளுக்கும் இந்த உண்மை 'தெரியும்". அதனால்தான் 'ஆயுதப் போராட்டம் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, ஒரு சித்தாந்தப் பிரச்சினை. அதன்மீது பேச்சுவார்த்தையே கிடையாது" என்று நக்சலைட்டு புரட்சியாளர்களும், இந்திய அரசியல் அமைப்பிலிருந்து தனியே பிரிந்து போவதுதான் தங்கள் இலட்சியம் என்று தேசிய இனப் போராளிகளும் உறுதியாகக் கூறுகிறார்கள்.

ஆக, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை இருதரப்புகளுமே நன்கு அறிந்தும் அதற்கான முயற்சியில் ஈடுபடுவது ஏன்?

ஆந்திர அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குப் போன இ.க.க. (மாவோயிஸ்ட்) தூதுக்குழுவின் தலைவர் தோழர் ராமகிருஷ்ணா கூறுகிறார்,

'மூர்க்கத்தனமான அடக்குமுறைப் படைபலத்தால் மட்டும் இயக்கத்தை ஒடுக்கிவிட முடியாது என்பது தெளிவாகி விட்டது. இதனால், சில சமயங்களில் ஒப்பீடு ரீதியிலான அமைதியை உத்திரவாதப்படுத்தும் நோக்கத்திற்காக சில காலமாக நக்சலைட்டுகளோடு பேச்சுவார்த்தை என்ற கொள்கைக்காக ஆளும் வர்க்கங்களில் ஒரு பிரிவு வாதாடி வருகிறது. புரட்சிகர இயக்கங்கள் மற்றும் தேசிய விடுதலைப் போர்களின்பால் பலமுனை யுத்த தந்திரத்துக்கு அழுத்தம் தரும் தாழ்நிலை மோதல்களைக் கொண்ட ஏகாதிபத்திய யுத்தத் தந்திரத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவும் அது உள்ளது. சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் ஆயுதப் போராட்ட முனையை மழுங்கடிப்பதையும் இயக்கத்தை மாசுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட சண்டை நிறுத்தம் மற்றும் பேச்சு வார்த்தை ஆகியவற்றை அந்த யுத்த தந்திரம் உள்ளடக்கியிருக்கிறது."

இதுதான் ஏகாதிபத்திய யுத்த தந்திரம் என்று தெரிந்தும், அதன் கூறுகள் அனைத்தையும் ஏற்று அமலாக்குவதற்கு இ.க.க. (மாவோயிஸ்ட்) உடன்பட்டுச் செயல்படுவது பொதுவுடைமை புரட்சியாளர்களுக்கு உண்மையில் வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது. இப்படிச் சொல்வது ஒரு மாற்று அமைப்பு என்ற முறையில் இ.க.க. (மாவேயிஸ்ட்) மீதான காழ்ப்பு ணர்வால் உந்தப்பட்டு வருவது அல்ல. இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம், குறித்து தோழர் ராமகிருஷ்ணா பின்வருமாறு கூறுகிறார்.

கேள்வி: பேச்சு வார்த்தை மூலம் நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள்? இது நேர்மறையான முடிவுக்கு வழிவகுக்குமா?

பதில்: பேச்சு வார்த்தைகள் மூலம் ஏதோ பாரிய மாற்றம் ஏற்படும் அல்லது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் ஏதாவது தீர்க்கப்படும் என்ற மாயை எங்களுக்கு இல்லை.

ஒரு குறுகிய காலத்திற்குத்தான் என்றாலும் கூட மாநிலத்தில் ஒப்பீடு ரீதியிலான ஒரு ஜனநாயக சூழலை உத்திரவாதப்படுத்துவதற்கே பேச்சு வார்த்தைகளுக்குப் போகிறோம். மூன்று நோக்கங்கள் உள்ளன: ஒன்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஜனநாயக வெளியை (ளியஉந) ஏற்பாடு செய்து தருவது; அதன் மூலம் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீது கிளர்ச்சி செய்வதற்கான, ஜனநாயக இயக்கத்தைக் கட்டுவதற்கான ஜனநாயக உரிமையை பெற்றுத் தரலாம்; இரண்டு; போலீசு ஆட்சியின் வழக்கமாகி விட்ட சிவிலியன் இலக்குகளைத் தாக்குவதைத் தவிர்ப்பதன் மூலம் சமுதாயத்தில் வன்முறையின் அளவைக் குறைக்கலாம்; மூன்று; விவாதங்களின் மூலம் மக்களுடைய பல்வேறு பிரச்சினைகள் மீது கவனத்தை ஈர்த்து அவற்றில் சிலவற்றுக்கு ஒரு ஜனநாயகத் தீர்வு காண்பதற்குக் கூட முயற்சிக்கலாம்.

புரட்சிகர இயக்கங்களின்பால் ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் யுத்ததந்திரத்துக்கு அனுசரணையான நோக்கங்களோடுதான் இ.க.க. (மாவோயிஸ்ட்) அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது; இதை இங்கே மறைமுகமாக ஒப்புக் கொள்கிறது. ஆயுதங்களை வைத்துக் கொண்டு அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் இ.க.க. (மாவோயிஸ்ட்) ஏற்க மறுத்து வருகிறது. அதிலும் ஒரு சமரசத் தன்மையைப் புகுத்தும் விதமாக, அதன் தலைமைப் பிரதிநிதி பின்வருமாறு பேசியுள்ளார்.

'ஆயுதங்களின்றி அரசியல் பிரச்சாரத்தை நடத்துவது என்ற ஏழாவது பிரிவை நாங்கள் அடியோடு நிராகரிக்கிறோம். மக்களுக்கும் கட்சிக்கும் கூட அது கடினமானது. சண்டை நிறுத்தத்துக்கு நாங்கள் ஒப்புக் கொண்டிருப்பதால் ஆயுதந் தாங்கிய எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம் என்றும் உறுதியளித்தோம். சமூக விரோத சக்திகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே ஆயுதங்கள் உள்ளன. ஆனால், சமூக விரோத சக்திகள் உள்ளதாலேயே நாங்கள் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு செல்லக் கூடாது என்று அரசாங்கம் கூறுகிறது. நாங்கள் ஆயுதங்களை வைத்திருப்பதால்தான் சமூக விரோதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர் என்பதுதான் யதார்த்தம்" (தோழர் ராமகிருஷ்ணா பேட்டி: இந்து நாளேடு, 17 அக். 04)

போலீசும் அதன் இகரசிய கொலைக் குழுக்களும் புரட்சியாளர்களைக் கொலைசெய்வது தொடரும்போது, அவர்களுக்கு எதிராகத்தான் முக்கியமாகத் தற்காப்புக்காகத்தான் ஆயுதங்களைத் தாம் வைத்திருக்க வேண்டியிருக்கிறது என்று வாதிடுவதற்குப் பதிலாக, சமூக விரோத சக்திகளிடமிருந்து மக்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டியுள்ளது என்று மழுப்பலாகப் பேசுகிறார்கள். ஏன்?

சண்டை நிறுத்தமும் பேச்சு வார்த்தைகளும், சலுகைகள் சீர்திருத்தங்களும் அதேசமயம் ஒரு தாழ்நிலை மோதல்களும் அடங்கியதுதான் ஏகாதிபத்திய யுத்த தந்திரம் என்று கூறும் இ.க.க. (மாவோயிஸ்ட்), மறுபுறம், தனது கட்சியின் வளர்ச்சி ஆயுதப் போராட்ட பலத்தைக் கண்டு ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு அஞ்சி, பேச்சுவார்த்தைக்காக வாதாடி வருவதன் விளைவுதான் இதுவென்று பேசி வருகிறது. குறிப்பாக,கடந்த தேர்தலில் நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்காகத் தனக்கு வாக்களிக்கும்படி சந்திரபாபு நாயுடு கோரினார், மக்கள் அவரை ஆட்சியிலிருந்து விரட்டி விட்டனர்; காங்கிரசு உட்பட எதிர்க்கட்சிகள், தாம் ஆட்சிக்கு வந்தால் நக்சல்பாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி வழித்தீர்வு காண்போம் என்று வாக்கு கொடுத்தனர். அமைதியையும் வளர்ச்சியையும் விரும்பிய மக்கள் எதிர்த்தரப்பை வெற்றிபெறச் செய்தனர். இதன் விளைவாகதான் சண்டை நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் என்று இதன் பின்னணி காரணத்தை இ.க.க. (மாவோயிஸ்ட்) விளக்குகிறது. மேலும், நக்சலைட்டுகள் பிரச்சினை ஒரு சட்டம்ஒழுங்குப் பிரச்சினை என்று ஆளும் வர்க்கங்கள் இதுவரை கூறிவந்தது; இப்போது, அது ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினை என்று ஒப்புக் கொண்டிருப்பதே சாதகமானதுதான் என்று வாதிடுகிறது.

ஆனால், உண்மை என்னவென்றால், சண்டை நிறுத்தமும், அமைதிப் பேச்சு வார்த்தைகளும் இ.க.க. (மாவோயிஸ்ட்)க்கும் முக்கியமாக அவசியமாக இருந்தது. இதை அதன் தலைமையே பின்வரும் வகையில் ஒப்புக் கொள்கிறது.

'உண்மை என்னவென்றால் சண்டை நிறுத்தம் அறிவிப்பிற்கு முன்பு, ஒரு மாதத்திற்கு மேலாக சாக்குப்போக்குக் காட்டித் தட்டிக் கழித்தது அரசாங்கம். பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் நெருக்கும் நிர்பந்தம், இ.க.க. (மாலெ) ம.யு. மற்றும் பிற நக்சலைட்டு அமைப்புகளின் வலியுறுத்தல் காரணமாகத்தான் இறுதியில் அரசாங்கம் கீழிறங்கி வந்து மூன்று மாதங்களுக்கு ஆயுதந்தாங்கிய பகைமை நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது என்று ஜூன் 16ஆம் தேதி அறிவித்தது."

சண்டை நிறுத்தமும், பேச்சுவார்த்தையும் ஆந்திர அரசாங்கத்தை விட இ.க.க. (மாவோயிஸ்ட்)களுக்குத் தான் மிகவும் அவசியமாயிருந்தது என்று இதிலிருந்து தெரிகிறது. மனித உரிமை மற்றும் ஜனநாயக அறிவுஜீவிகள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது இவர்களும் விருப்பமுடன் ஈடுபட்டனர். அதற்கான காரணங்கள் என்ன?

ஆந்திர மாநில அரசாங்கத்துக்கும், இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் நீடிக்கும் என்றோ, அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் என்றோ எந்தத் தரப்புக்கும் நம்பிக்கை இருந்ததில்லை.

இரு தரப்பும் சண்டை நிறுத்தம் அறிவித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அது ஒரு குறுகிய காலமே அமலில் இருந்தது. பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் நடக்கும்போதே சண்டை நிறுத்தத்தை மீறி, நக்சலைட்டுப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்வதில் போலீசும், இரகசியக் கொலைபடைக் குழுக்களும் இறங்கிவிட்டன. பதிலடி கொடுக்கும் முகமாக, இ.க.க. (மாவோயிஸ்ட்)களும் போலீசு உளவாளிகளையும், துரோகிகளையும் அழித்தொழிப்பதைத் தொடங்கிவிட்டனர்.

ஒரு சுற்று மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து, குறைந்தபட்ச உடன்பாடு எதுவும் காணாமல் கலைந்து போய் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புகளை மறுதலிக்கும் வகையிலான நிபந்தனைகளை இரு தரப்புமே விதித்துள்ளன.

'நக்சலைட்டுகள் காடுகளை விட்டு வெளியேவரும்போதும், அரசியல் பிரச்சாரங்களின் போதும் ஆயுதங்களை ஏந்தியிருக்கக் கூடாது, மக்கள் நீதிமன்றங்களுக்கு அதிகாரிகள் வரவேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது" என்று முதற் சுற்று பேச்சுவார்த்தையையொட்டி ஆந்திர அரசாங்கம் விதித்திருந்த நிபந்தனையை இப்போது மேலும் இறுக்கி இருக்கிறது.

'நக்சலைட்டுகள் ஆயுதங்களைக் களைந்துவிட வேண்டும், அரசியல் சட்டத்துக்குட்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்" என்று இப்போது புதிய நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதோடு, சட்டம்ஒழுங்கைப் பாதுகாக்கவும் நிலைநாட்டவும் அதிகாரம் கொண்ட ஒரே அமைப்பான போலீசு, தன் கடமையைச் செய்வதை யாரும் தடுக்கக் கூடாது என்று போலீசும் அரசாங்கமும் கடுமையாக எச்சரித்திருக்கின்றன. இவை இரண்டும் இருவேறு நாக்குகளில் பேசிப் பித்தலாட்டம் செய்து வந்ததைக் கூடக் கைவிட்டு, ஒரே குரலில் அரசு பயங்கரவாதக் குரலில் மிரட்டுகின்றன. இதன் மூலம் சண்டை நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையையே தகர்த்து விட்டன.

அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு நக்சலைட்டு புரட்சியாளர்கள் விதித்துள்ள நிபந்தனைகள் நியாயமானவை என்ற போதிலும், அவற்றைப் போலீசும் அரசாங்கமும் ஒருபோதும் ஏற்று அமலாக்கமாட்டா என்பது அவர்களுக்கே நன்கு தெரியும். 'போலீசுடன் மோதல்" என்ற பெயரில் நக்சல்பாரிப் புரட்சியாளர்களைப் போலீசும், இரகசியக் கொலைக் குழுக்களும் கொன்றொழிப்பதை உடனே நிறுத்த வேண்டும்; அவை தமது தேடுதல் வேட்டையை நிறுத்துவதோடு, ""என்கவுண்டர்'' கொலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

ஆனால், ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வேண்டுகோள் விடுத்துக் கொண்டே, மறுபுறம் போலீசை ஏவி நக்சலைட்டு புரட்சியாளர்களைப் படுகொலை செய்யும் இரட்டை நாடகமாடும் தந்திரத்தை ஆந்திர அரசாங்கம் பின்பற்றுகிறது. ஆந்திர நக்சலைட்டுப் புரட்சியாளர்களுக்கு இதுவொன்றும் புதிய அனுபவமல்ல. ஏற்கனவே, சென்னாரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆட்களின் போதும் இப்படித்தான் நடந்தது. இது ஆந்திர ஆட்சியாளர்களுக்கு மட்டுமே உரியதும் அல்ல. வடகிழக்கு இந்தியாவில் தேசிய இன விடுதலைப் போராளிகளுடன் பல ஆண்டுகளாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இராணுவ பாசிச வெறியாட்டமும் தொடர்கிறது.

நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் இயக்கம், தேசிய இன விடுதலை கோரிக்கை போன்றவை சமூக விரோதிகளால் எழும் சட்டம்ஒழுங்குப் பிரச்சினைகள் என்றுதான் ஆளும் வர்க்கங்களாலும் ஆட்சியாளர்களாலும் எப்போதும் சித்தரித்துக் கையாளப்படுகின்றன. ஜனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று திரளும் அறிவு ஜீவிகள் (!) இவை சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல, சமூகப் பொருளாதாரப் பிரச்சினை என்று கண்டுபிடிக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் இன்றிப் பின்தங்கிய நிலை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக, பொருளாதாரக் காரணங்களால் எழும் பிரச்சினையாகப் பார்த்து அவற்றில் முன்னேற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கோருகிறார்கள். இந்தக் கண்டுபிடிப்புக்கு ஏற்ப, வட்டார வளர்ச்சித் திட்டங்கள் வகுப்பது, போலீசு, தேவையானால் இராணுவ ஒடுக்குமுறையை ஏவிவிடுவது என்ற அணுகுமுறையை அரசு மேற்கொள்கிறது.

ஆனால், இவை சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் அல்ல் சமூகப் பொருளாதாரப் பிரச்சினையும் அல்ல் முதன்மையாக அரசியல் பிரச்சினையாகும்; அரசியல் அதிகாரம் பற்றிய பிரச்சினையாகும். அதனால்தான் ஆயுதங்களைக் களைவது, அரசியல் நிர்ணய சட்டத்துக்குட்பட்டுத் தீர்வு காண்பது என்ற இரு நிபந்தனைகளில் ஆளும் வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் அசையாது ஊன்றி நிற்கிறார்கள்.

நக்சலைட்டுப் புரட்சியாளர்களுக்கும், தேசிய இனப் போராளிகளுக்கும் இந்த உண்மை 'தெரியும்" அதனால்தான் 'ஆயுதப் போராட்டம் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, ஒரு சித்தாந்தப் பிரச்சினை. அதன்மீது பேச்சுவார்த்தையே கிடையாது" என்று நக்சலைட்டு புரட்சியாளர்களும், இந்திய அரசியல் அமைப்பிலிருந்து தனியே பிரிந்து போவதுதான் தங்கள் இலட்சியம் என்று தேசிய இனப் போராளிகளும் உறுதியாகக் கூறுகிறார்கள்.