Language Selection

புதிய ஜனநாயகம் 2006

04_2006.gif

அனைத்துலக மகளிர் தினத்தன்று (மார்ச் 8), அதன் உண்மையான நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில் திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணி எனும் புதிய அமைப்பு உதயமானது. தோழர் இந்துமதி தலைமையில் நடந்த இவ்வமைப்பின் தொடக்க விழாவில், ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் சிறப்புரையாற்றி வர்க்கப் போராட்டத்தில் முன்னணியாகத் திகழ வாழ்த்தினார். வேலூர், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக அமைப்பு ரீதியாகப் பெண்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கி, வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் தேர்வைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் பெண்கள் விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதியேற்றனர். திரளாக வந்திருந்த உழைக்கும் வர்க்கப் பெண்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்த இத்தொடக்கவிழா, பெண்கள் அமைப்பு ரீதியாகத் திரள வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது. பாதை விரிந்து கிடக்க, புரட்சிப் பயணத்தில் பெண்கள் விடுதலை முன்னணி தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.

 ம.க.இ.க. தோழர் வாணி

பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.