Language Selection

எங்களிடம்
சொல்வதற்கு பதில் இல்லை
சப்பை கட்டுத்தலைவர்களின்
வாய்மொழியே பொன்மொழியாய்
வைத்திருக்கிறோம்

“என்னை கடலில் தூக்கி போட்டாலும்”
வரும் போதெல்லாம் கண்ணீர்
விடுகிறோம்….

செயா செரிக்காமல்
உண்ணாவிரதமிருந்ததற்காக
பல்லில் தண்ணீர் படாமல் காத்திருந்தோம்….

ஈழத்துக்காக அணிமாறிய
கேப்புமாரி அய்யாவுக்கு
பூமாரி பொழிகின்றோம்…..

துப்பாக்கியோடு சீன் காட்டும்
திருமாவின் கட்டளைக்கு காத்துக்கிடக்கிறோம்
சிறுத்தைகளாய் வீறு கொண்டு எழ…..

சிபிஎம் சிபிஐ விசயகாந்து
விசய் ரஜினி கமல்
நமீதா எல்லோரும் ஈழத்துக்காக
கவலையுற்ற போது
கலங்கிப்போனோம்…..

எங்கள் சுயநலத்தினை
மூடிமறைக்க ஒவ்வொரு
பச்சோந்தியையும் காட்டி
தப்பிக்கிறோம்

உண்மை
இப்படி இருக்க
கண்டிப்பாய் ஓட்டு போடுவோம்
யார் ஈழத்துக்காக நாடாளுமன்றத்தில்
பேசுவார்களோ அவர்களுக்கு.