Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _4.jpgநாட்டின் தேசியப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சிதைக்கவும் பாலியல் ரீதியாக எம்நாட்டு பெண்களை குழந்தைகளை ருசிக்கவும் வரும் வெளிநாட்டவனின் நலன்களை உறுதி செய்வதுடன் சொகுசுப் பண்பாட்டை ஏகாதிபத்தியம் கோருகின்றது. 2003 முதல் 8 மாதத்தில் மூன்று லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர. இது 2002யுடன் ஒப்பிடும் போது 23 சதவீதம் அதிகமாகும். சுற்றுலாப் பயணிகளின் வருகை 2002 இல் முதல் ஆறு மாதத்தில் 1.73 லட்சமாக இருந்தது. இது 2003 இல் முதல் ஆறு மாதத்தில் 2.16 லட்சமாக அதிகரித்துள்ளது. எதை நோக்கி எந்தப் பண்பாட்டை நோக்கி எம் நாடு செல்லுகின்றது? வெள்ளைத் தோல் பன்றிகளின் வக்கிரத்தில் பொறுக்கி வாழ்வதைக் கோருகின்றது. இது அதிகரித்துச் செல்வதையே

 அண்மைய சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சிநிரல் எடுத்துக் காட்டுகின்றது. 2003-இல் சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 லட்சமாக அதிகரித்தது. இது 2002 உடன் ஒப்பிடும் போது ஒரு இலட்சத்தால் அதிகரித்தது. இதில் பிரிட்டனில் இருந்து 80000 ஆயிரம் பேரும் இந்தியாவில் இருந்து 90000 பேரும் வருகை தந்தனர. அமைதி சமாதானத்தின் பின் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு 2001 இல் 55485 யாக இருந்தது. இது 2002-இல் 79823 யாக அதிகரித்தது. இது ஒப்பீட்டளவில் 36 சதவீத அதிகரிப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் சுற்றுலாத்துறை முன்னைய ஆண்டைவிட 81 சதவீதம் அதிகம் கொழுத்ததுடன் பன்றிகளுக்கு குண்டி கழுவிவிட 90 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு அமரத்தியதன் மூலம் பண்பாட்டுச் சீரழிவைத் தேசியமயமாக்குவதில் தன்னைத் தானே மிதப்பாக்கியது. பன்றிகளுக்கு சேவை செய்ததன் மூலம் 2002 இல் இலங்கை சுற்றுலாத் துறை 2200 கோடி ரூபாவைத் (22 கோடி அமெரிக்கா டொலரை) பெற்றது. இதற்காக நாட்டில்  217 ஹோட்டல்கள் 13550 அறைகள் மக்களின் அன்றாட எதாரத்தமான வாழ்க்கைக்கு வெளியில் வக்கிரமாக இயங்குகின்றது. ஆனால் கொழும்பையும் கொழும்பைச் சுற்றியுள்ள சேரிகளிலும் வாழும் மக்களில் 40 சதவீதமானவரகள் வாழவழியற்று கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாவர. சுற்றுலாத்துறைகள் குவிந்து கிடக்கும் ஒரு இடத்தைச் சுற்றி சேரிகள் விரிந்து வருகின்றன. இங்கு வாழும் தேச மக்கள் வான் உயர ஹோட்டல்களை அண்ணாந்து பாரத்தபடி வாழவழியற்ற நிலையில் கையேந்தி நிற்பதையே தேசிய ஜனநாயகம் என்கின்றனர. இது தமிழ் தேசியம் என்ற பெயரில் சில பத்தாயிரம் பேர தியாகம் செய்த மண்ணில் கூட அரங்கேறுகின்றது. யாழ்குடா நாட்டில் 18 கோடி ரூபா செலவில் மூன்று ஸ்டார ஹோட்டல்கள் அமைக்க தனியாரதுறை முதலீட்டுள்ளது. வேலனையில் அமையும் இந்த நவீன உல்லாச விடுதி 50 அறைகளைக் கொண்டது. இதைவிட வேலணையில் 15 கோடி ரூபா செலவில் 35 அறைகள் கொண்ட மூன்று நட்சத்திர நவீன ஹோட்டல் ஒன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையை நோக்கி தமிழ்த் தேசியவாதிகளும் சிங்கள அரசுக்கு நிகராகவே களம் இறங்குகின்றனர. வெளிநாட்டு சுற்றுலா மையங்களை உருவாக்கப் புலிகள் பெரும் மூலதனங்களை முதலீடுகின்றனர.

 

 சுற்றுலாத்துறை கவரக் கூடிய யாழ்குடா கரையோரங்களை யுத்தப் பயமுறுத்தல் மக்களின் இயலாமை மற்றும் மிரட்டல் மூலம் மக்களை பணியவைத்து மலிவு விலைகளில் பினாமிகளின் பெயரில் புலிகள் வாங்கிக் குவிக்கின்றனர. வன்னிக் காடுகளில் கூட நவீன ஹோட்டல்கள் நவீன உணவு விடுதிகள் பல அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் இதை வேடிக்கை பாரக்க முடியுமே ஒழிய நெருங்கிச் செல்ல முடியாது. இந்த பூமியில் தான் மக்கள் எலும்புந் தோலுமாக வாழவழியற்ற நிலையில் உள்ளோரை படமாக்கி அதை பத்திரிக்கையில் போட்டு பணம் திரட்டிக் கொழுக்கும் தேசிய அவலம் அரங்கேறுகின்றது. வெளி நாட்டவனுக்கு சேவை செய்வதும் எச்சில் இலை பொறுக்குவதும் தேசிய கட்டுமானமாகின்றது. இதை பின்னால் விரிவாகப் பாரப்போம். அண்மையில் வெளிவந்த புள்ளிவிபரம் ஒன்றில் வடக்கு கிழக்கில் ஆறு ஆயிரம் ஆண் சிறுவரகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது. உல்லாசத்துறை சிறக்க சூழல் பண்படுத்தப்பட்டுள்ளதையே இது காட்டுகின்றது. உல்லாசத்துறையை வளரப்பது புலிகளின் தேசிய இலட்சியமாகி உள்ள நிலையில் எதிரகாலத்தில் வடக்கு கிழக்கு சிறுவர சிறுமிகளைக் கொண்டும் விபச்சாரத்தைக் கொண்ட வெள்ளைப் பன்றிகளின் பாலியலை புரத்தி செய்து பணம் சம்பாதிப்பது தேசிய வழியாகிவிடும். பல ஆசிய நாடுகளில் காணக் கூடிய இந்த நிலை எதிரகாலத்தில் இலங்கை முழுக்க சரவசாதாரணமாகிவிடும்.