Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒவ்வொரு ஆண்டு வினாயகர் சதூர்த்தி விழாவிலேயும் புதுப்புது அவதரம் எடுத்து வருவார் வினாயகர். கையிலே பூ, லட்டு, கையில் துப்பாக்கி, ஏ.கே47, பீரங்கி இப்படி எத்தனையோ அப்புறம் ரெண்டு பேரை தொடையில் வைத்துக்கொண்டு, பக்காவாய் சீன் காட்டிக்கொண்டு வருவார் நம்ம கணேசு.

இந்த ஆண்டோ ஈழப்பிள்ளையார், பிரபாகரன் பிள்ளையாரென  மேலும் தன் பங்குக்கு அவதாரம் எடுத்து இருக்கிறார். கோவையில் நடந்த இந்து மக்கள் கட்சி என்ற பாசிச சேக்காளிகளின் சதூர்த்தி விழாவுக்கு கொடியசைத்து துவக்கியும் வைத்திருக்கிறார்.

அண்ணார் சிவாஜிலிங்கத்தின் (M.P) உதிர்ந்த முத்துக்கள்

// இலங்கையில் வாழும் தமிழர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள். மற்றவர்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளனர். இவர்களை இனவெறி சிங்களர்கள் இன்று நேற்றல்ல, 1958 முதல் அழித்து வருகின்றனர்.


இதுவரை 2,000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களும் தப்பவில்லை. 2000ம் ஆண்டு, கோவிலில் இருந்த விநாயகரை பெயர்த்தெடுத்து, அருகில் உள்ள குளத்துக்கு இழுத்துச் சென்று மூழ்கடித்தனர்………… இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் இருந்தும், ஈழத் தமிழர்களை காப்பாற்ற இயலவில்லை என்பது வேதனை அளிக்கிறது.//


****

 

இப்படி பார்ப்பன பாசிசத்தின் அரவணைப்பில் பெறப்போகும் இந்து ஈழத்தில் தாழ்த்தப்பட்ட, பிறமத மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு இடம் இருக்குமா என்ன?

 

இல்லையில்லை ஒரு அகதியின் ஆதரவு முயற்சிதான் இதை கொச்சை படுத்தக்கூடாதென்பவர்களுகளே ,நியாயமாய் பதில் சொல்லுங்கள் இது வரையிலான பாரியப்பின்னடைவுக்கு  முக்கிய காரணமான இந்தியாவை நீங்கள் மக்களிடம் அம்பலப்படுத்தினீர்களா? காங்கிரசு தவிர வேறு கட்சி வந்தால் ஈழத்தை பறித்து கையில் தருவார் என நீங்கள் சொல்லி சொல்லி இந்திய மேலாதிக்கப்போரை காங்கிரசின் தனிப்பட்ட போராக மாற்றினீர்களே. இது ஈழப்போராட்டத்தை கொச்சை படுத்துவதாக ஆகாதா?

 

118vinayakerselaibox-01_ad

தமிழ்தேசியம் என்ற பதத்தின் முழுமைக்குமே எதிரானதுதான் பார்ப்பனீயம். அது ஈழம் அமைய ஆதரவு தரும் என நீங்கள் நம்புங்கள். அதைப்பொதுக்கருத்தாக்க முயல்வதற்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா இந்த தமிழ்தேசியம் பேசுவோருக்கும், சிவலிங்கத்துக்கும். யார் கிடைத்தாலும் அவர்களின் முதுகில் ஏறி பறிக்க இது என்ன பலாப்பழமா? மக்களைத்தவித்த இந்த சுய நலமிகளின் கூத்தினையே போராட்டமாக சித்தரித்துக்கொள்கிறார்கள்.

 

ஈழத்தில் நடந்த நடக்கும் இனப்பிரச்சினையை மதப்பிரச்சினையாக முலாம் பூசுகிறார் அய்யா சிவாஜிலிங்கம். இது ஏதோ புதிதல்ல,  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே அர்ஜுன் சிங்காலையும், “காஞ்சி மகா பெரியவரையும்” சந்தித்து தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் இந்துக்களுக்கு  அருளாசி வேண்டினார்.

 

தமிழினவியாதிகளெல்லாம் பார்ப்பன செயாவின் சுருக்குப்பையில் ஈழத்தினைத்தேட அதையே கொஞ்சம் ஹை லெவலில் செய்தார் நம்ம லிங்கம். இது வரை நாமெல்லாம் நினைத்தது போலல்ல ஈழத்தினர் எல்லாம் தமிழர்கள் அல்லவாம் அவர்கள் இந்துக்கள் என புதிதாய் கோடு போட்டுக்காட்டினார். அப்போதிருந்து இப்போது வரை இந்து மதவெறி பாசிஸ்டுகளிடம் அவருக்கு இருக்கும் பாசத்தின் பொருள் மட்டும்தான் விளங்க வில்லை.

 

ஒரு வேளை சூடு சொரணையற்று தமிழர்களுக்கு இந்த வழியிலும் இனப்பற்றினை ஊட்டுகிறார் போலும்.இந்து மத பர்ப்பனீயத்தின் வரலாறு அவருக்குத்தெரியாதா ? இல்லை நமக்கு தெரியாதென நினைக்கிறாரா?

 

அதிகம் இல்லை என்னிடம் ஒரே ஒரு கேள்விதான்எப்போதாவது நீங்கள் மக்கள் பக்கம் இருந்திருக்கிறீர்களா?

http://kalagam.wordpress.com/2009/09/16/ஈழத்தமிழனா-ஈழ-இந்துவா-சி/