Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தங்கக்கட்டி, செல்லத்தங்கம்
எனபல வாழ்த்துரைகளை
கேட்டிருப்போம், கேட்டவர்கள்
பல்லைக்காட்டிக்கொண்டிருக்க
தோண்டியெடுத்தவனின் நிலை….

“திருகாணியெல்லாம் வேஸ்ட்
வளையம்தான் பெஸ்ட்” பேசும்
விளம்பரங்கள் நாளை நம்மையும்
விற்கும் அப்போது – ஏகாதிபத்தியத்தின் காதுகளில்
அல்ல கால்களில் மாட்டிக்கொண்டிருப்போம்…..

 

லேட்டஸ்ட் மாடல்கள் கேட்கும்
வாய்கள் கோலாரின் லேட்டஸ்ட்
நிலையை பேசுமா? கண்டிப்பாய்
பேசாது “ஆரம்” கழுத்தை நெறிக்கும் போது
என்ன பேச முடியும் “மாடல் சூப்பராயிருக்கு” என்பதை தவிர….

 

தங்கம் எடுக்கப்போனவர்கள்
தோண்டியெடுக்கப்பட்டார்கள் தங்கத்தோடு
பிணங்களாக – அச்செய்திகள் எப்படி
கேட்கும் காதில் தங்கப்பூட்டினை
மாட்டிக்கொண்டிருக்கும் போது…..

 

நண்பரிடம் கேட்டேன் எதற்கு தங்கம்?
“எனக்கு பிடித்திருக்கிறது” “தெரியவில்லை”
“அளவுக்கு மீறி இல்லை” “தகுதிக்காக போடவில்லை “
தெறித்தன பதில்கள்…..
மூன்றுகிராமுக்கு ஓராயிரம் கிலோ
மண்ணை தோண்டியெடுப்பவனால்
தொடத்தான் முடியும்…..

 

யாரும் தப்பிக்க முடியாது,கணக்கு
போடுங்கள் உங்களுக்காக
எத்தனையாயிரம் கிலோ தோண்டப்பட்டிருக்கிறது?
எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள்?
அதிகமாய் பேச வேண்டாம்,
நீங்கள் அணிந்திருக்கும் அளவுக்கு மட்டும்…

 


 

http://kalagam.wordpress.com/2009/06/14/தங்கம்/