Language Selection

குருத்து
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அணிகளும், அதன் சகோதர அமைப்புகளுடைய அணிகளும் தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள். ஆதரவாளர்களும், மாற்றுக்கட்சியினர் மற்றும் பதிவர்களும் கலந்து கொண்டார்கள்.

மறுநாள், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், ஈழத்தில் இந்திய அரசின் தலையீடு குறித்து கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் போலீசின் கைது நடவடிக்கையும் நடந்தது.
மாநாட்டில் கலந்து கொண்ட அனுபவத்தை சில பதிவர்கள் கடந்த இரண்டு நாட்களாக எழுதியும் வருகிறார்கள்.
மாநாடு நடந்த அன்று, மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுசெயலாளரான தோழர் மருதையன் சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் பேசிய உரையிலிருந்து சில துளிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றியது.
குறிப்பு : வரிக்கு வரி எழுதாமல், பேச்சின் சாரத்தை மட்டும் எழுதுகிறேன். சில வார்த்தைகள் மாறியிருக்கலாம்.
அன்பார்ந்த தோழர்களே! இந்த பகுதிவாழ் உழைக்கும் மக்களே!
இந்தியா முழுவதும் “ரிசசன்” – ஆல், எல்லா தொழிற்சாலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் லே-ஆப் என்று வெளியேற்றப்பட்டு கொண்டேயிருக்கிறார்கள்.
ஹூண்டாய் போன்ற எல்லா நிறுவனங்களுக்கும் இது உற்பத்தி மந்தம். லாபம் குறைவாக கிடைக்கும்.
ஆனால், ஒரு வெளியேற்றப்படுகிற தொழிலாளிக்கு அடுத்த வேலை சோறே பிரச்சனை.
முதலாளித்துவ பயங்கரவாதம்
எதையுமே இவர்கள் ஸ்டாரங்காக சொல்வார்கள். அதைப் போலத்தான் இந்த “முதலாளித்துவ பயங்கரவாதம்” என்று சொல்வதும் என்கிறார்கள்.
பயங்கரவாதம் என்றால் ஆயுதம் கொண்டு தாக்குவது, குண்டு வெடிப்பது என்பது மூலம் தனது கோரிக்கைக்கு மிரட்டி பணிய வைப்பது.
முதலாளிகள் தொழிலாளர்களை “வறுமை, பட்டினி” மூலம் பணிய வைக்கிறார்கள்.
12 மணி நேர வேலை பார்க்கவிட்டால்,
இ.எஸ்.ஐ., பி.எப். கேட்டால்,
சம்பளம் கட்டுபடியாக வில்லை, கூடுதல் சம்பளம் கேட்டால்...
- இப்படி தொழிலாளி தனக்குரிய எந்த உரிமையாவது கேட்டால், உடனே வேலையை விட்டு துரத்துகிறார்கள்.
இப்படி வறுமை, பட்டினி மூலம் தங்களுடைய லாப வெறிக்கு பணிய வைக்கிறார்கள். இதைத்தான் முதலாளித்துவ பயங்கரவாதம் என 100க்கு 100 சதவீதம் சரியாக அழைக்கிறோம்.
நாட்டில் ஆளாளுக்கு, டாக்டர் பட்டம், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி பட்டம் தருகிறார்கள்.
நாங்கள் தருகிறோம் இவர்களுக்கு சரியான பட்டம்“முதலாளித்துவ பயங்கரவாதிகள்”
ஆயுதம் வைத்திருப்பவன் தான் பயங்கரவாதிகளா!
பின்லேடன் கூடத்ததன் ஒரு முனிவன் போல தோற்றமளிக்கிறான்.
அவர்களுடைய நடவடிக்கைகள் தான், பயங்கரவாதிகளா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
டாட்டா பிர்லா, அம்பானி, மித்தல் – போன்ற பல்வேறு முதலாளிகளின் ஊழல்களின் பட்டியல் சொன்னால், நீண்டுக்கொண்டே போகும். இவர்கள் முதலாளித்துவ பயங்கரவாதிகள் இல்லையா!
லேட்டஸ்ட் பயங்கரவாதி இராமலிங்க ராஜூ
“ஒரு பைசா கூட எடுக்கலை” என்கிறான் ராமலிங்க ராஜூ.
சத்யம் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், மற்றும் சத்யத்தின் பங்குதாரர்களுக்கு ராஜூ வைத்திருப்பது வெடிகுண்டு. என்ன! சத்தமில்லாத வெடிகுண்டு.
ராஜூவை நாம் பயங்கரவாதி சொல்வது இருக்கட்டும். இதோ,
சத்யம் மோசடி குறித்து, எல்.ஐ.சியின் தலைமை அதிகாரி சொல்கிறார். “சத்யம் மோசடி மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இணையானது”. எல்.ஐ.சியின் பங்குப்பணம் 8000 கோடி சத்தியத்தில் விழுந்து கிடக்கிறது. எல்.ஐ.சி.மக்களிடத்தில் என்ன விளம்பரம் செய்கிறது “உங்களுடைய பணம் பாதுகாப்பாக எங்களிடத்தில் இருக்கிறது.”
இவன் சிறை சென்றால், சத்ய சோதனை ரீமீக்ஸ்எழுதுவான்.
- மீதி...அடுத்த பதிவில் தொடரும்.
நன்றி :ஆர்ப்பாட்ட படம் தநத வே. மதிமாறன் அவர்களுக்கு!