Language Selection

தமிழச்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"கட்டுப்பாடும், சமாதானமும் அற்ற தன்மையை சத்திய சோதனை என்னும் பேரால் உண்டாக்கி விட்டு ஜனநாயகத்தையும் ஏற்படுத்தி விட்டால் - எந்தக்குணம் எந்தத் தன்மை கொண்ட மக்கள் பெருவாரியாய் இருக்கிறார்களோ, அந்த மக்கள் ஆட்சிதான் நிலவும். "தொழிலாளர் தொல்லை," "கூலிக்காரர்கள் தொல்லை" இவர்களைத் தூண்டிவிட்டு வாழும் காலிகள் தொல்லை என்றால் நாட்டில்


---------- (தந்தை பெரியார் - 31-01-1969)

மும்பையின் தீவிரவாதக்காட்சிகள் பரபரப்பான சண்டைக்காட்சியைப் பார்த்ததுபோல் ஓர் உணர்வு. இந்தியாவில் பல்வேறு வகையில் வன்முறைகள் நடந்துக் கொண்டிருப்பினும் இந்த வன்முறை ஆங்கிலப்படத்தில் நடந்திருப்பது போன்று நடந்தேயிருக்கின்றன.

வர்த்தக நிறுவனங்கள் பரபரப்பு சம்பவத்தை தொலைக்காட்சியில் நேரடி வர்ணனையில் ஈடுபட்டிருக்கிறது. இதோ என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் வருகிறார்கள், இதோ குனிகிறார்கள், நிமிர்கிறார்கள் என்பதில் இருந்து விளாவரியாக விளக்கிக் கொண்டிருந்த முண்டங்கள் ஒருபுறம். சந்தடி சாக்கில் தன் மேதாவித்தனத்தைக் காட்டிக்கொள்ள உள்துறை அமைச்சர் உள்ளுர் போலீஸ்க்களும் கமாண்டோ வீரர்களும் எவ்வாறெல்லாம் மீட்பு பணியில் ஈடுபடும் முயற்சியில் இருக்கிறார்கள் என்று விவரித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு கூத்துக்கள் போதாதென்று அரசியல் அடாப் இட்லர்கள் தங்கள் மேதாவித்தனத்திற்கு ஆட்சியை மோடியிடம் கொடுக்கக் சொல்லி தங்கள் வஞ்சக வலையை ஆவேசமாக விரித்துக் கொண்டு வருகின்றனர். குஜராத்தில் 3000- ஆயிரம் முஸ்லீக்களை கொலை செய்த பாதகனிடம் ஆட்சியை ஒப்படைப்பதன் மூலம் தங்களின் இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்த முயல்கின்றனர்.

பார்ப்பனச் சக்திகள் இந்துத்து நாட்டமை நடத்த சிறும்பான்மையினரான முஸ்லீக்களை தூண்டிவிடுவதும், வன்முறையாளர்களாக முஸ்லீம்களை சொல்லிக் கொண்டு அவர்கள் மீது நடத்தும் கொலை வெறி தாக்குதல்களுக்கு மத்தியில் இந்துத்துவ கைக்கூலிகளை ஏவி விட்டு திட்டமிட்ட வன்முறைகளை நிகழ்த்திய வண்ணம் இருக்கின்றன. வழக்கம் போல் பொது மக்களின் மேலோட்டமான பார்வையை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்கேற்ப திசைமாற்றம் செய்கின்றனர்.

இந்தியாவின் மிக முக்கிய வர்க்க கட்டடத்தில் இத்தீவிரவாதம் நடந்திருப்பது உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வர்க்க கட்டிடத்தின் உரிமையாளர் டாடா இந்திய நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துகிறார். இதே போன்ற நூற்றுக்கணக்கான வன்முறைகள் ஆயிரக்கணக்கான படுகொலைகள் மதத்தின் பேராலும், ஜாதியின் பெயராலும் நடந்து கொண்டிருந்த போது இவர் எங்கே இருந்தார். மண்டைக்குடைச்சல் தனக்கு வந்தால் தெரியும் என்பதை தாமதமாக புரிந்திருப்பாரோ!

இன்று நடந்த வன்முறைகளும், இனியும் நடக்க இருக்கும் வன்முறைகளுக்கும் இதே இந்துத்துவமும், ஆளும்வர்க்கமும், வன்முறைக்கு சூழ்ச்சி செய்துக் கொண்டுதான் இருக்கும்.

அன்று முஸ்லீம் மீது வஞ்சகமாக பழிதீர்த்துக் கொள்ள பார்ப்பனீயம் "சிப்பாய் கலகத்தை" உருவாக்கியது போல் இன்னும் ஆயிரம் கலகங்கள் நமக்காக இந்திய மண்ணில் உருவாகிக் கொண்டே இருக்கும். அவை ஜனநாயகத்தின் பெயரால் கைக்கூலிகள் மக்களை சித்தவதை செய்துக் கொண்டிருப்பதை தடுக்க முடியாது.

தமிழச்சி
30/11/2008

 இந்த இனம் தானே மெஜாரிட்டியாக உள்ளனர். இந்த நிலையில் சமதர்மம், ஜனநாயகம் என்றால் நாடும் - மனித சமூதாயமும் எக்கதி ஆகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? ஆகவே, நமது "அரசியல் வாழ்வு" என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமூதாயம் கவலையற்று சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரும்."