Language Selection

கம்யூட்டர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நண்பர் ஒருவர் ஒரு புத்தம்புதிய கணினி வாங்கினார். அத்துடன் அவருக்கு இலவச இயங்குதளம் மற்றும் பலவித மென்பொருள் பயன்பாடுகளும் முன்கூட்டியே நிருவப்பட்டுக் கொடுக்கப்பட்டது.

இயங்குதளம் இலவசமாகக் கிடைப்பது நல்லதுதான்.ஆனால் கூடுதலாகக் கிடைக்கும் தேவையில்லாத டிரையல் பயன்பாடுகள் எல்லாமே தேவைப்படப்போகிறதா? - இந்தக் கேள்விக்கு விடை தேடினால் கண்டிப்பாக நிறைய இணைப்புப் பயன்பாடுகள் குப்பையானவையே என அறியலாம்.
இந்த அப்ளிகேசன்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடக் கூடிய டிரையல் பயன்பாடுகளாகவே இருக்கும். இவைகள் வைரசு எதிர்ப்பு, பல்லூடகம் (மல்ட்டிமீடியா) தொடர்பானவைகளாக அமைந்திருக்கும்.
இந்தக் குப்பை (ஜன்க்) பயன்பாடுகளை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து, அவற்றை நீக்குவது என்பது ஒரு முறையான அணுகுமுறையாக இருப்பினும் - அதற்கு ஆகக்கூடிய கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டால் காலமும்,நேரமும் வீணாவது தவிர்க்க இயலாது.
இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் அமைந்ததுதான் PC Decrapifier பயன்பாடு.
இது ஒரு இலவசப் பயன்பாடு. இயக்குவதற்கு எளிமையானது. புதிதாக வாங்கிய கணினியில் PC Decrapifier நிருவிய பிறகு இயக்கி கணினியில் தேவையில்லாமல் நிறுவப்பட்ட குப்பைப்பயன்பாடுகளை எளிதில் நீக்கிவிடலாம்.