Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


கோயம்பேடு சந்தையில் மூட்டை தூக்குபவர்களும் வண்டி இழுப்பவர்களும் யார்? விவசாயம் அழிந்து போனதால் கிராமப்புறத்தில் வாழ முடியாமல் நகர்ப்புறத்துக்கு வேலை தேடி வந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள்.


அங்கே கூடைகளில் சரக்கெடுத்துச் சென்று வீடுவீடாக நாள் முழுவதும் கூவி விற்றுக் கஞ்சி குடிப்பவர்கள் யார்? வேறு வேலை எதுவும் கிடைக்காத ஏழைகள். விற்றுத் தொழில் செய்ய சொத்து இல்லாமல் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து விற்று நேர்மையாக வாழ முயலும் உழைப்பாளிகள். கணவனால் கை விடப்பட்டு பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக குடும்பத்தைத் தலையில் சுமக்கும் நிராதரவான ஏழைப் பெண்கள், சோறு போட யாருமில்லாததால் தள்ளாத வயதில் வேகாத வெயிலில் வண்டியைத் தள்ளிச் செல்லும் முதியவர்கள்.


எல்லா தொழில்களிலிருந்தும் துரத்தப்படும் பரிதாபத்துக்குரிய மக்கள் அனைவரும் கடைசியாக வந்து சேரும் புகலிடம்தான் சில்லறை வணிகம். இந்த பரிதாபத்துக்குரிய மக்களின் வயிற்றிலடித்து சொத்து சேர்க்கலாம் என்று ஒரு முதலாளி நினைக்கிறான் என்றால் அவனை விடக் கொடூரமான கொலைகாரன் வேறு யாராவது இருக்க முடியுமா? கோட்டு சூட்டு போட்டு ஆங்கிலத்தில் பேசுவதால் இந்த மிருகங்களையெல்லாம் மனிதன் என்றுதான் மதிக்க முடியுமா? வயலில் நுழைந்து விளைச்சலைத் தின்று அழிக்கும் காட்டுப்பன்றிகளை வெடி வைத்துக் கொல்வார்கள் விவசாயிகள். இரக்கமே இல்லாத இந்தப் பணக்காரப் பன்றிகளைக் கண்டதுண்டமாக அறுத்துக் கொல்ல வேண்டும்.